.நெட் வரைவுரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

. நெட் பிரேம்வொர்க் (. நெட் என்று உச்சரிக்கப்படுகிறது) என்பது மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு மென்பொருள் கட்டமைப்பு ஆகும்.இது மைக்ரோசாப்ட் விண்டோஸ்-ல் இயங்குகிறது. இது பல பெரிய லைப்ரரி பைல்களை உள்ளடிக்கியது. இந்த பிரேம்வொர்க் பல உலக மொழிகளை சப்போர்ட் செய்கிறது(ஒவ்வொரு மொழியும் பிற மொழிகளில் எழுதப்பட்ட குறியீடுகளை பயன்படுத்த முடியும்).. நெட் பிரேம்வொர்க் -இல் எழுதப்பட்ட ப்ரோக்ராம்கள் CLR எனப்படும் ஒரு மெய்நிகர் இயந்திரத்தால் ( application virtual machine) execute செய்யப்படுகின்றன. இந்த CLR பாதுகாப்பு, நினைவக மேலாண்மை, மற்றும் பிழை கையாளுதல் போன்ற சேவைகளை வழங்குகிறது.பொதுவாக CLR மற்றும் Class Library சேர்ந்தது தான் . நெட் பிரேம்வொர்க் எனப்படுகிறது. பயனர் இடைமுகம், தகவல் பெறுதல்,database இணைப்பு, cryptography , வலை தளங்கள் உருவாக்கம் மற்றும் நெட்வொர்க் தொடர்புகள் போன்ற அடிப்படை வசதிகளை . நெட் பிரேம்வொர்க் வழங்குகிறது. . நெட் மென்பொருள்கள் பெரும்பாலும் Visual Studio எனப்படும் மைக்ரோசாப்ட் நிறுவன IDE மூலம் உருவாக்கப்படுகின்றது.


வரலாறு[தொகு]

மைக்ரோசாப்ட் நிறுவனம் . நெட் பிரேம்வொர்க்- ஐ 1990 - இன் இறுதிகளில் "அடுத்த தலைமுறை விண்டோஸ் சேவைகள் (Next Generation Windows Services (NGWS)" என்ற பெயரில் உருவாக்க தொடங்கியது. 2000 வருட இறுதியில் . நெட் 1.0 எனப்படும் முதலாம் பீட்டா Version - ஐ வெளியிட்டது. 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 - ம் தேதி . நெட் பிரேம்வொர்க் 4.0 - வை Visual Studio 2010- வுடன் வெளியிடப்பட்டது.

. நெட் பிரேம்வொர்க் பதிப்புகள்

 • பீட்டா பதிப்பு நவம்பர் 2000
 • 1.0 ஜனவரி 2002
 • 1.1 ஏப்ரல் 2003
 • 2.0 2005

Visual Studio . நெட் பதிப்புகள்

 • பீட்டா பதிப்பு நவம்பர் 2000
 • VS.NET 2002 பெப்ரவரி 2002
 • VS.NET 2003 ஏப்ரல் 2003
 • VS.NET 2005

வடிவமைப்பு அம்சங்கள்[தொகு]

 1. . நெட் பிரேம்வொர்க் -இன் ஒவ்வொரு பதிப்பும் அதன் முந்தைய பதிப்பை Support செய்கிறது (Interoperability).
 2. எல்லா . நெட் பிரேம்வொர்க் ப்ரொக்ராம்களும் CLR - இன் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன.CLR நினைவக மேலாண்மை, பாதுகாப்பு, மற்றும் பிழை கையாளுதல் போன்ற சேவைகளை வழங்குகிறது.
 3. . நெட் பிரேம்வொர்க் பல programming மொழிகளை அனுமதிக்கிறது. ஒரு மொழியில் எழுதப்பட்ட ப்ரோக்ராமை மற்றொரு மொழியில் உபயோகபடுத்த முடியும்.(Language independence)
 4. ஒரு மென்பொருளை வடிவமைக்க தேவையான அனைத்து அடிப்படை தேவைகளையும் . நெட் பிரேம்வொர்க் -ன் Base Class Library

வழங்குகின்றது.


கட்டமைப்பு[தொகு]

 1. பல மொழிகளை support செய்யும் பொதுவான பிரேம்வொர்க்
 2. .அடிப்படை பாதுகாப்பு அம்சங்கள்.
 3. அடிப்படை தேவைகளுக்கான Class library -கள்.
 4. நினைவக மேலாண்மை (Memory management )
"http://ta.wikipedia.org/w/index.php?title=.நெட்_வரைவுரு&oldid=1678272" இருந்து மீள்விக்கப்பட்டது