மூடிய மூலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மூடிய மூலம் அல்லது தனியுடைமை மென்பொருள் (Proprietary software) என்பது கணினி மென்பொருளுக்கு வழங்கப்படும் ஒரு வகை உரிமம் ஆகும். இதன் படி காப்புரிமை பெற்றவரை தவிர வேறு எவரும் மென்பொருளின் மூலத்தை மாற்றவோ, அடுத்தவருக்கு அனுமதியின்றி பகிரவோ, மறுவிநியோகம் செய்யவோ முடியாது.

மென்பொருளுக்கு விலை வந்த நிகழ்வு[தொகு]

1960 களின் முற்பகுதி வரை பெருங்கணினிகள் அளவு மற்றும் விலை ஆகிய இரண்டிலுமே அதிகமாவே இருந்தன. அவற்றை இயக்க குளிர்சாதன வசதி கொண்ட பெரும் அறைகளும் பயன்படுத்தப்பட்டன. ஆனால் கணினிகளை சொந்தமாக வாங்கி பயன்படுத்துவதை விட வாடகைக்கு எடுத்து பயன்படுத்தும் பழக்கமே அந்த காலத்தில் வழக்கத்தில் இருந்தது.

கணினியை தயாரிக்கும் நிறுவனமே மென்பொருளையும் இலவசமாக வழங்கியது. எனவே பெரும் செலவு செய்து பெருங்கணினியை வாங்குபவர் மென்பொருளுக்கு தனியாக பணம் செலுத்த தேவை இல்லை. ஆனால் 1969 ல் ஐ.பீ.எம் மென்பொருள் நிறுவனத்திற்கு ஏற்பட்ட நம்பிக்கையின்மை வழக்கு அச்சுறுத்தல் காரணமாக, பெருங்கணினி மற்றும் அதன் மென்பொருளுக்கு தனித்தனியாக விலை வைத்து அறிவித்தது. அத்தோடு மென்பொருளுக்கான நிரலையும் வெளிப்படையாக அறிவிக்க மறுத்தது. இதுவே மூடிய மூலம் அல்லது தனியுடைமை மென்பொருளுக்கான தொடக்கமாக கருதப்படுகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=மூடிய_மூலம்&oldid=1682290" இருந்து மீள்விக்கப்பட்டது