ஸ்ரீ ராணா விக்கிரமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்ரீ ராணா விக்கிரமா
Sri Rana Wikrama
பாதுகா
சிங்கபுர இராச்சியத்தின்
3-ஆவது அரசர்
ஆட்சிக்காலம்1362 - 1375
முன்னையவர்ஸ்ரீ விக்கிரம வீரா
பின்னையவர்ஸ்ரீ மகாராஜா
பிறப்புசிங்கப்பூர்
இறப்புசிங்கப்பூர்
புதைத்த இடம்
குழந்தைகளின்
பெயர்கள்
ஸ்ரீ மகாராஜா
தந்தைஸ்ரீ விக்கிரம வீரா
தாய்நீல பஞ்சவடி
(Nila Panjadi)
2016-ஆம் ஆண்டு சிங்கப்பூர் தேசிய தினத்தில் புகழ்பெற்ற வீரர் பாடாங்; சிங்கப்பூர் கல்லைத் (Singapore Stone) தூக்குவதைச் சித்தரிக்கும் காட்சி.

ஸ்ரீ ராணா விக்கிரமா (மலாய் மொழி: Paduka Sri Rana Wikrama; ஆங்கிலம்: Ranavikrama); என்பவர் சிங்கபுர இராச்சியத்தின் மூன்றாவது அரசர். ஸ்ரீ விக்கிரம வீராவின் மூத்த மகன் ஆவார்.

செஜாரா மெலாயு எனும் மலாய் இலக்கிய வரலாற்றுச் சான்றுகளின்படி, இவர் 1362-ஆம் ஆண்டில் இருந்து 1375-ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரை ஆட்சி செய்தவர். இவர் பதவி ஏற்பதற்கு முன்பு ராஜா மூடா (Raja Muda) என்று அழைக்கப்பட்டார். மற்றும் பெண்டகாரா துன் பெர்பதி முக பெர்ஜாஜர் (Tun Perpatih Muka Berjajar) என்பவரின் மகளை மணந்தவர்.[1]

பொது[தொகு]

ஸ்ரீ ராணா விக்கிரமாவின் தந்தையார் ஸ்ரீ விக்கிரம வீராவின் ஆட்சியின் கீழ் சிங்கபுராவின் ஜாவானிய இராச்சியமான மஜபாகித் பேரரசு படையெடுப்பு செய்தது. அந்தப் படையெடுப்பில் மஜபாகித் பேரரசு தோல்வி அடைந்தது.

இருந்த போதிலும், நகரகிரேதாகமம் (Nagarakretagama) எனும் ஜாவானியக் காவியத் தொகுப்பின் 1365-ஆம் ஆண்டுப் பதிவில், சிங்கபுரத்தை மஜபாகித் பேரரசின் அடிமை அரசாகப் பட்டியலிடுகிறது.

பெருலாக் இராச்சியம்[தொகு]

ஸ்ரீ ராணா விக்கிரமா ஆட்சியின் போது, சுமத்திராவில் இருந்த பெருலாக் எனும் முஸ்லீம் இராச்சியத்துடன் (Sumatran Muslim kingdom Peureulak) அரசதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொண்டார்.[2]

இவருடைய காலத்தில் தான், அசாதாரண வலிமை கொண்ட பாடாங் (Badang) எனும் பழம்பெரும் மனிதர், சிங்கபுர அரசவையில் தன் வலிமையை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Dr. John Leyden (1821). Malay Annals: Translated from the Malay Language. London: Longman, Hurst, Rees, Orme, and Brown. பக். 44–49. https://archive.org/details/dli.granth.35061. 
  2. *Tsang, Susan; Perera, Audrey (2011), Singapore at Random, Didier Millet, p. 120, ISBN 978-9-814-26037-4
  3. Dr. John Leyden (1821). Malay Annals: Translated from the Malay Language. London: Longman, Hurst, Rees, Orme, and Brown. பக். 44–49. https://archive.org/details/dli.granth.35061. 
ஸ்ரீ ராணா விக்கிரமா
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர்
ஸ்ரீ விக்கிரம வீரா
சிங்கப்பூர் அரசர்
1362–1375
பின்னர்
ஸ்ரீ மகாராஜா

மேலும் காண்க[தொகு]

  • Ruling House of Malacca-Johor. Christopher Buyers. October 2008. Retrieved 2010-10-08.
  • Studying In Singapore. Search Singapore Pte Ltd. Retrieved 2006-04-14.
  • Sang Nila Utama (PDF). 24hr Art. Retrieved 2006-04-14.

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீ_ராணா_விக்கிரமா&oldid=3583611" இலிருந்து மீள்விக்கப்பட்டது