வேலுத்தம்பி தளவாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வேலாயுதன் செண்பகராமன் தம்பி (1765 - 1809) திருவனந்தபுரம் சிற்றரசுக்கு மகராஜா பலராம வர்மா குலசேகரப் பெருமாள் மன்னராக வீற்றிருந்த காலத்தில் தளவாய் அல்லது முதன்மை அமைச்சராக இருந்தவர். வேலுத்தம்பி என அறியப்பட்ட இவர் ஒரு தமிழர் ஆவார். பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தை எதிர்த்துப் போரிட்டவர்.

ஆரம்ப கால வரலாறு[தொகு]

வேலாயுதன் செண்பகராமன் தம்பி 1765ம் ஆண்டு விடைத் திங்கள் 16ம் நாள் அன்றைய திருவனந்தபுரம் நாட்டில் ( இன்றைய தமிழ்நாட்டிலுள்ள ) நாகர்கோவிலுக்கு அருகே உள்ள கல்குளம் - தாழைக்குளம் என்னும் ஊரில் பிறந்தவர். இவரது பெற்றோர்கள் திரு குஞ்சு மயிற்றி பிள்ளை, திருமதி வள்ளியம்மை பிள்ளை தங்கச்சி. பிள்ளை சாதியில் தோன்றிய இவர் ஆரம்பகாலங்களில் அரசுக் காரியக்காரராகப் மாவேலிக்கரையில் பணியாற்றியவர். இவரது முழுப்பெயர் இடப்பிரபு குலோதுங்க கதிர்குலத்து முளப்படை அரசரான இறையாண்ட தாளக்குளத்து வலிய வீட்டில் தம்பி செண்பகராமன் வேலாயுதன் ஆகும்.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=வேலுத்தம்பி_தளவாய்&oldid=1448441" இருந்து மீள்விக்கப்பட்டது