வெண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆபெல்மொஸ்சஸ் எஸ்குலெந்தஸ்
(Abelmoschus esculentus)
வெண்டிச் செடி
வெண்டிச் செடி
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
தாவரம்
பிரிவு: மக்னோலியோபைட்டா
வகுப்பு மக்னோலியோப்சிடா
வரிசை: மல்வாலெஸ்
குடும்பம்: மல்வாசியே
பேரினம்: ஆபெல்மொஸ்சஸ்
இனம்: எஸ்குலெந்தஸ்
இருசொற்பெயர்
ஆபெல்மொஸ்சஸ் எஸ்குலெந்தஸ்
(L.) மோயெஞ்ச்

வெண்டி அல்லது வெண்டை சமையலிற் பயன்படும் வெண்டைக் காய்களை அல்லது வெண்டிக் காய்களைத் தரும் செடியினமாகும். வெண்டி (வெண்டை) மல்லோ என்றழைக்கப்படும் மால்வேசியே (Malvaceae) குடும்பத்தைச் சேர்ந்த, பூக்கும் செடியாகும் (தாவரமாகும்). இதன் அறிவியற் பெயர் அபெல் மோஷஸ் எஸ்க்யுலென்டஸ் (Abelmoschus esculentus) என்பதாகும். அமெரிக்காவில் இதனை ஓக்ரா என்று அழைக்கின்றனர். இது 2 மீ உயரம் வரை வளர்கிறது. வெண்டிக் காய் பெருமளவு விதைகளைக் கொண்டதாக நீண்டு காணப்படும். எத்தியோப்பிய உயர்நிலப்பகுதியே இத்தாவரத்தின் தாயகம் எனப்படுகிறது.


இவ்வினம் ஆண்டுத் தாவரமாகவோ பல்லாண்டுத் தாவரமாகவோ இருக்கலாம். 10 - 20 சதம மீட்டர்கள் வரை நீள அகலங்களைக் கொண்டுள்ள இதன் இலைகள், அங்கை வடிவம் கொண்டவை. 5 - 7 வரையான நீட்சிகளோடு கூடியவை. இத் தாவரத்தின் பூக்கள் 4 - 8 சமீ விட்டங் கொண்டவை. வெள்ளை, மஞ்சள் ஆகிய நிறங்களுக்கு இடைப்பட்ட பல சாயல்களில் காணப்படும் இவற்றின் இதழ்களில் செந்நிறம் அல்லது ஊதா நிறத்தில் புள்ளிகள் இருக்கும்.

வாளி நிறைய வெண்டைக் காய்கள்
வெண்டியின் பூ

இந்தியா, இலங்கை உட்பட உலகின் பல பகுதிகளிலும் வெண்டைக்காய் சமையலில் பயன்படுத்தப்படுகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=வெண்டி&oldid=1377418" இருந்து மீள்விக்கப்பட்டது