விவேக் ராமசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விவேக் ராமசாமி
2013ல் விவேக் ராமசாமி
பிறப்புவிவேக் கணபதி ராமசாமி
ஆகத்து 9, 1985 (1985-08-09) (அகவை 38)
சின்சினாட்டி, ஒகையோ, ஐக்கிய அமெரிக்கா
கல்விஆர்வர்டு பல்கலைக்கழகம் (இளங்கலை)
யேல் பல்கலைக்கழகம் (சட்டப் படிப்பு)
பணிதொழிலதிபர், எழுத்தாளர்
பட்டம்இணை நிறுவனர், Strive Asset Management
அரசியல் கட்சிகுடியரசுக் கட்சி
வாழ்க்கைத்
துணை
அபூர்வா
பிள்ளைகள்2
வலைத்தளம்
https://www.vivek2024.com/

விவேக் கணபதி ராமசாமி (Vivek Ganapathy Ramaswamy)[1][2] பிறப்பு:9 ஆகஸ்டு 1985), ஐக்கிய அமெரிக்காவின் தொழிலதிபரும், எழுத்தாரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் 2104ல் ரோய்வண்ட் அறிவியல்கள் எனும் மருந்து உற்பத்தி நிறுவனத்தைத் துவக்கி நடத்தினார். பிப்ரவரி 2023ல் விவேக் ராமசாமி 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சியின் சார்பில் வேட்பாளராகத் தன்னை அறிவித்துக் கொண்டார்.[3][4]

இளமை & கல்வி[தொகு]

இந்து சமயத்தைச் சேர்ந்த வி. கணபதி ராமசாமி-கீதா எனும் இந்தியப் பெற்றோருக்கு, ஐக்கிய் அமெரிக்காவின் ஒகையோ மாநிலத்தின் சின்சினாட்டி நகரத்தில் 9 ஆகஸ்டு 1985 அன்று விவேக் பிறந்தார்.[5][6][7][8][9]தமிழ் மொழி பேசும் இவரது பெற்றோர் கேரளாவின் பாலக்காடு அந்தணர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.[5][10][11] இவரது தந்தை வி. கணபதி ராமசாமி, கோழிக்கோடு தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் படித்து பட்டம் பெற்றவர். பின்னர் ஐக்கிய அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். இவராது தாய் கீதா மைசூர் மருத்துவக் கல்லூரியில் மூத்தகுடி மக்களுக்கான உளவியல் படிப்பில் பட்டம் பெற்றவர்.[12]

இவரது பெற்றோர் கேரளாவில் சொந்த ஊரான திருச்சூர் மாவட்டத்திலுள்ள வடக்காஞ்சேரி அக்ரகாரத்திலிருந்து பாலக்காடு மாவட்டத்திற்கு குடியேறியவர்கள்.[13][14]

கல்வி[தொகு]

விவேக் ராமசாமி ஒகையோவில் உள்ளூர் பள்ளிக்கூடத்தில் படித்து வளர்ந்தார்.[15][16] 2003ல் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.[17] பின்னர் கோல்ட்மேன் சாக்ஸ் போன்ற நிதி நிறுவனங்களில் பணிபுரிந்தார். 2011ல் முதுநிலை படிப்பை முடித்தார்.[18] 2013ல் யேல் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்தார்.[19]

தொழில்[தொகு]

2017ல் விவேக் ராமசாமி

2014ல் விவேக் ராமசாமி ரோய்வண்ட் அறிவியல்கள் எனும் மருந்துகள் உற்பத்தி நிறுவனத்தை நிறுவி பெருந்தொகை ஈட்டினார். 2017ல் தான் நிறுவிய நிறுவனத்தை $ 175 மில்லியன் டாலர் மூலதன ஆதாயத்துடன் விற்றார்.

2023ல் விவேக் ராமசாமி பங்குதாரர்கள் சேவை நிறுவனத்தை துவக்கினார். இதனால் விவேக் ராமசாமியின் வருமானம் $750 மில்லியன் டாலராக உயர்ந்தது.

அமெரிக்க அதிபர் வேட்பாளராக பிரச்சாரம் (2023–தற்போது வரை)[தொகு]

2022ல் விவேக் ராமசாமி

மே 2023ல் விவேக் ராமசாமி 2024 அமெரிக்க அதிபர் தேர்லில் போட்டியிடுவதற்கு, குடியரசுக் கட்சியின் வேட்பாளர் போட்டியில் களத்தில் செயல்படுகிறார்.[20][21]

எழுதிய நூல்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Huynh, Anjali (August 24, 2023). "However People Say It, Vivek Ramaswamy Is Happy to Be in the Conversation". New York Times. https://www.nytimes.com/2023/08/24/us/politics/vivek-ramaswamy-name-pronunciation.html. 
  2. "Presidential Candidate Vivek Ramaswamy Wants a Second American Revolution" (Vivek Ramaswamy says his own name at 17m17s), Honestly with Bari Weiss, 1 August 2023.
  3. அமெரிக்க அதிபர் தேர்தல்: யாரிந்த குடியரசுக் கட்சி வேட்பாளர் விவேக் ராமசாமி?
  4. "'Woke, Inc.' author Vivek Ramaswamy enters White House race". AP News. February 21, 2023 இம் மூலத்தில் இருந்து July 13, 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230713125113/https://apnews.com/article/religion-and-politics-united-states-government-2022-midterm-elections-ohio-e1c1cbe47763bd979b6b47557aee043d. "'Ramaswamy, 37, formally launched his bid by decrying what he called a "national identity crisis" that he claims is driven by a left-wing ideology that has replaced faith, patriotism and hard work with "new secular religions" like climate-ism and gender ideology.' He believes that Americans are given the right to make something of themselves and should not be reliant on the government for providing it for them." 
  5. 5.0 5.1 Kolhatkar, Sheelah (December 12, 2022). "The C.E.O. of Anti-Woke, Inc". The New Yorker (in அமெரிக்க ஆங்கிலம்). ISSN 0028-792X. பார்க்கப்பட்ட நாள் June 22, 2023.
  6. Mufson, Steven (April 3, 2023). "He wrote the book on crushing 'wokeism.' Now he's running for president.". The Washington Post இம் மூலத்தில் இருந்து May 28, 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230528151303/https://www.washingtonpost.com/climate-environment/2023/04/03/vivek-ramaswamy-2024-presidential-gop/. 
  7. Strimpel, Zoe (July 10, 2022). "Vivek Ramaswamy: 'Woke capitalism is a cultural cancer'" (in en-GB). தெ டெய்லிகிராப். https://www.telegraph.co.uk/news/2022/07/10/vivek-ramaswamy-woke-capitalism-cultural-cancer/. 
  8. Pahwa, Nitish (May 15, 2023). "The Presidential Hopeful Running as a Younger, More "Anti-Woke" Trump" (in en-US). Slate. https://slate.com/news-and-politics/2023/05/vivek-ramaswamy-assessment.html. 
  9. Harrison, Thomas F. (August 14, 2023). "Here's what's fueling the Ramaswamy boomlet". Courthouse News.
  10. Celarier, Michelle (August 5, 2022). "'He's Making Up a World He Wants to Attack': How Vivek Ramaswamy Became a Right-Wing Culture Warrior". The Information. https://www.theinformation.com/articles/the-making-of-a-conservative-culture-warrior. "The Ramaswamy family belongs to India's elite Brahmin caste, a fact he mentions several times in his book. 'Kings were below us,' he wrote" 
  11. "Vivek, who enters US President fray, used to frequent Kerala". டெக்கான் ஹெரால்டு. February 23, 2023 இம் மூலத்தில் இருந்து March 15, 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230315022327/https://www.deccanherald.com/national/vivek-who-enters-us-president-fray-used-to-frequent-kerala-1194094.html. 
  12. Phandis, Shilpa (August 11, 2017). "Indian-origin biotech entrepreneur Vivek Ramaswarmy raises $1.1 billion". தெ டைம்சு ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து January 7, 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220107103130/https://timesofindia.indiatimes.com/business/india-business/indian-origin-biotech-entrepreneur-vivek-ramaswamy-raises-1-1-billion/articleshow/60015177.cms. 
  13. Satish, A (February 24, 2023). "Palakkad roots that helped shape a US presidential hopeful". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. Archived from the original on March 2, 2023. பார்க்கப்பட்ட நாள் March 2, 2023.
  14. Holzman, Jael; Freedman, Andrew (February 3, 2023). "The right's anti-ESG crusader". Axios. Archived from the original on March 24, 2023. பார்க்கப்பட்ட நாள் February 10, 2023.
  15. "FREOPP Leadership: Vivek Ramaswamy". FREOPP. July 13, 2020. Archived from the original on November 18, 2021. பார்க்கப்பட்ட நாள் July 18, 2023. attended underfunded public schools through 8th grade
  16. Schulte, Becky (July 25, 2015). "July 2015". St. Xavier High School E-news (Mailing list). St. Xavier High School. பார்க்கப்பட்ட நாள் July 26, 2015.
  17. {{cite news|title=36 Southwest Ohio graduates named Robert C. Byrd Scholars|first=Sue|last=Kiesewetter|work=[[The Cincinnati Enquirer|dat=June 18, 2003|page=C3|url=https://www.newspapers.com/article/the-cincinnati-enquirer/48236241/%7Cvia=Newspapers.com}}
  18. Moye, David (May 4, 2023). "Vivek Ramaswamy Campaign Insists Wikipedia Revisions Weren't A 'Scrub'". HuffPost இம் மூலத்தில் இருந்து May 9, 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230509123838/https://www.huffpost.com/entry/vivek-ramaswamy-wikipedia-revisions-comment_n_6453cc52e4b00eb7e63a0057. 
  19. Pengelly, Martin (2023-08-25). "'He's an insider': Ramaswamy's deep ties to rightwing kingpins revealed" (in en-GB). The Guardian. https://www.theguardian.com/us-news/2023/aug/25/vivek-ramaswamy-rightwing-elite-close-ties-leonard-leo-peter-thiel. 
  20. விவேக் ராமசாமி: அமெரிக்க அதிபர் பதவிக்கு ட்ரம்புடன் மோதும்கோடீஸ்வர இந்தியர்
  21. அமெரிக்க அதிபராக ஒரு தமிழர்?

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Vivek Ramaswamy
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விவேக்_ராமசாமி&oldid=3937445" இலிருந்து மீள்விக்கப்பட்டது