வலைவாசல்:விளையாட்டுக்கள்/சிறப்புக் கட்டுரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இப்பகுதியிலுள்ளவை விக்கிப்பீடியாவின் விளையாட்டுக்கள் வலைவாசலின் ஒரு பிரிவான சிறப்பு கட்டுரை என்ற பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டவை.

தாங்களும் விளையாட்டுக்கள் வலைவாசலில் காட்சிப்படுத்துவதற்கான சிறப்பு பக்கங்களைப் பரிந்துரைக்கலாம். (காப்பகமானது காட்சிப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் அடுக்கப்பட்டுள்ளது.)

வடிவமைப்பு
{{வலைவாசல்:விளையாட்டுக்கள்/தேர்வுக் கட்டுரை/வடிவமைப்பு
  |படிமம்        =
  |படிம தலைப்பு =
  |உரை         =
  |இணைப்பு     =
  |முகப்பு       = வலைவாசல்:விளையாட்டுக்கள்/தேர்வுக் கட்டுரைகள்
}}

<noinclude>
[[பகுப்பு:சிறப்புக் கட்டுரை - விளையாட்டுக்கள் வலைவாசல்‎]]
</noinclude>

காப்பகம்[தொகு]

1[தொகு]

வலைவாசல்:விளையாட்டுக்கள்/சிறப்புக் கட்டுரை/1

தமிழர்களால் மரபு வழியாக விளையாடப்பட்டு வந்த விளையாட்டுக்கள், அல்லது பரவலாக விளையாடப்படும் விளையாட்டுக்கள் தமிழர் விளையாட்டுகள் ஆகும். இதில் பல விளையாட்டுக்கள் தென்னிந்தியாவில் பரவலாக விளையாடப்படுவை. மேலும் பல உலகமெங்கும் விளையாடப்படுபவை. மட்டைப்பந்து, உதைப்பந்து என தெளிவாக வெளி நாடுகளில் தோன்றிய அனைத்துலக விளையாட்டுக்கள் தமிழர் விளையாட்டுக்களுக்குள் வகைப்படுத்தபடவில்லை. இவற்றை பலவேறு பண்புகளின் அடிப்படைகளில் வகைப்படுத்தலாம். தமிழர் விளையாட்டுக்களில் மிகவும் பிரபலமானவை கிளித்தட்டு, மாட்டு வண்டிச் சவாரி, ஜல்லிக்கட்டு மற்றும் சிலம்பம் போன்றவையாகும்.



2[தொகு]

வலைவாசல்:விளையாட்டுக்கள்/சிறப்புக் கட்டுரை/2

கூடைப்பந்தாட்டம் (Basketball) சுமார் 200 நாடுகளில் ஆர்வத்துடன் விளையாடப்படுகிறது. இது மிக வேகமான, சில வினாடிகளுக்குள் ஆடுகளத்தின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு சென்று திரும்பக்கூடிய ஆட்டம். உடலின் அனைத்து உறுப்புக்களையும் பயன்படுத்தும் வண்ணம் இந்த விளையாட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு அணிக்கு ஐந்து பேர் வீதம் களத்தில் இருப்பார்கள். அணியின் மொத்த பலமான பத்து முதல் 12 பேர்களில் இருந்து எப்பொழுது வேண்டுமானாலும் களத்தில் ஆடும் ஒருவரை வெளியில் அழைத்து, பதிலியாக மற்றொருவரை உள்ளே அனுப்பலாம். பந்தை கையால் எறிந்து எதிரணியினரின் கூடையில் விழ வைப்பதே நோக்கம். வெற்றி, தோல்வி பெரும்பாலும் கடைசி வினாடிகளில் தான் முடிவாகும்.



3[தொகு]

வலைவாசல்:விளையாட்டுக்கள்/சிறப்புக் கட்டுரை/3

துடுப்பாட்டம், (மட்டைப்பந்து, Cricket, கிரிக்கெட்) 19ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்ட விளையாட்டு ஆகும். இது முறையே 11 வீரர்கள் கொண்ட இரு அணிகளுக்கிடையே ஆடப்படும் ஆட்டமாகும். தற்பொழுது, இந்த ஆட்டம் பொதுநலவாய நாடுகளில் பரவலாக ஆடப்பட்டு வருகிறது. இது இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் மிகப் பிரபலமான விளையாட்டு ஆகும். டெஸ்ட் போட்டிகளே துடுப்பாட்டத்தின் பாரம்பரிய ஆட்டமாகும். ஒரு டெஸ்ட் போட்டி ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து நடக்கும். ஒவ்வொரு அணியும் இரு இன்னிங்ஸ் விளையாட வேண்டும். இரு இன்னிங்ஸிலும் அதிக ஓட்டங்கள் எடுத்த அணி வென்றதாக கருதப்படும். இதேபோல ஒருநாள் போட்டிகளும் இருபது 20 போட்டிகளும் துடுப்பாட்டத்தின் வேறுசில வகையான போட்டிகளாகும்.