வலைவாசல்:வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தமிழ் | பண்பாடு | வரலாறு | அறிவியல் | கணிதம் | புவியியல் | சமூகம் | தொழில்நுட்பம் | நபர்கள்


வரலாற்று வலைவாசல்
Seppupattayam1.jpg

வரலாறு என்ற சொல் இறந்தகாலத்தைப்பற்றிய தகவல்கள் என்னும் பொருளிலேயே பொதுப்படையாகப் பயன்படுகிறது. ஒரு கற்கைத்துறையைக் குறிக்கும் போது, பதிவுசெய்யப்பட்ட மனித சமுதாயங்களின் கடந்தகாலமான, மனிதவரலாற்றையே குறிக்கின்றது.

வரலாற்றறிஞர்கள், எழுதப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட பதிவுகள், நேர்காணல் (வாய்மொழி வரலாறு), மற்றும் தொல்பொருளியல் உள்ளிட்ட பலவகையான மூலங்களைப் பயன் படுத்துகிறார்கள். மனிதனால் பதிவு செய்யப்படுவதற்குமுன் நிகழ்ந்தவை வரலாற்றுக்கு முற்பட்டவை எனப்படுகின்றன.

இங்கே பதியப்படக்கூடிய வரலாற்றுத் தகவல்கள் ஏராளமாக உள்ளன. அவற்றை வகைப்படுத்துவதற்கான பல்வேறு முறைகள் கீழே தரப்படுகின்றன.

அடிக்குறிப்பு
சிறப்புக் கட்டுரை
IVC Map.png

சிந்துவெளி நாகரிகம் (Indus valley civilization), எகிப்து, மெசொப்பொத்தேமியா, சீனா போன்ற இடங்களில் தழைத்தோங்கியிருந்த, உலகின் மிகப் பழைய நாகரிகங்களையொத்த தொன்மையான ஒரு நாகரிகமாகும். இன்றைய பாகிஸ்தானிலுள்ள சிந்து நதியை அண்டித் தழைத்தோங்கியிருந்த இந்த நாகரிகம் மிகப் பரந்ததொரு பிரதேசத்தில் செல்வாக்குச் செலுத்திவந்தது. கி.மு 3000 க்கும் கி.மு 2500 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் உச்ச நிலையிலிருந்த இந்த நாகரிகம், இன்னும் தெளிவாக அறியப்படாத ஏதோவொரு காரணத்தினால் சடுதியாக அழிந்து போய்விட்டது. இங்கு வாழ்ந்த மக்களினம் பற்றியோ, அவர்கள் பேசிய மொழிகள் பற்றியோ ஆய்வாளர்களிடையே கருத்தொற்றுமை கிடையாது. தொல்லியல் ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான முத்திரைகள் காணப்படுகின்ற, அவர்களுடைய மொழியை எழுதப்பயன்படுத்திய குறியீடுகளையும் எவரும் இன்றும் வாசித்தறிய முடியவில்லை.

வரலாற்று பகுப்புகள்


மேற்கோள்கள்



"உலக வரலாறு என்பது சுதந்திரம் பற்றிய பிரக்ஞையின் வரலாறு என்பதே அன்றி வேறில்லை"

-ஹெகல்
உங்களுக்குத் தெரியுமா?
Trugannini 1866.jpg
  • ...நேபாளத்தில் ஏற்பட்ட மக்கள் புரட்சியை முன்னிட்டு 2008 மே 28ல் அதன் மன்னர் கயனேந்திரா பதவி விலகினார். இதன் மூலம் நேபாளத்தின் 240 ஆண்டு கால ஷா வம்சத்தின் ஆட்சி முடிவுக்கு வந்தது ?
  • ... போரில் புறமுதுகிட்ட சங்கத் தமிழ் மன்னர்கள், தங்கள் பழியை துடைக்க பட்டினி கிடந்து உயிர் விட்டனர். புறநானூறு இதை வடக்கிருத்தல் எண்ற பெயரில் பதிவு செய்துள்ளது?
  • ... சுமார் 5000 என்ற எண்ணிக்கையில் இருந்த தாசுமேனிய பழங்குடிகளின் மக்கள் தொகை, கிபி 1800 வாக்கில் அங்கு குடியேரத் தொடங்கிய ஆங்கிலேயர்களின் இனவெறித் தாக்குதல்களால் முப்பதே ஆண்டுகளில் 75ஆக குறைந்தது. இவ்வினத்தின் கடைசிப் பெண்ணான துருகானினி (படம்) 1876ல் ஆங்கிலேயச் சிறையில் இறந்ததை தொடர்ந்து இவ்வினம் உலகில் இருந்து முற்றிலுமாக அழிந்தது?
  • ... டிராசிக் அல்லது திராசிக் (Triassic) என்பது 251± 0.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்தொடங்கி 199.6± 0.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வரையான நிலவியல் காலத்தையும் அதன் முறைமையையும் குறிக்கும். இந்த காலத்தில்தான் பவளப் பாறைகள், பூக்கும் தாவரங்கள் மற்றும் பறக்கும் இயலுமையக் பெற்ற முதுகெலும்பிகளான டெரசோர் போன்றவை தோன்றின?
  • ... மங்கோலியப் பேரரசு அதன் உச்சநிலையில் 36 மில்லியன் சதுர கிமீ பரந்தும், ஏறத்தாழ 100 மில்லியன் மக்கள் தொகையை கொண்டதாகவும் இருந்தது. மேலும் இதுவே உலக வரலாற்றில் மிகப்பெரிய தொடர்நிலப்பரப்பு பேரரசும், மொத்த பரப்பளவு அடிப்படையில் பிரித்தானியப் பேரரசுக்கு அடுத்தாக இரண்டாவது பெரிய பேரசும் ஆகும்?
சிறப்புப் படம்
Dutch Tuticorin.jpg
படிம உதவி: Jungpionier
டச்சுக்காரர்களின் காலத்தில் தூத்துக்குடி துறைமுகம். 1752ல் வரையப்பட்ட படம்.

சேமிப்பீயின் தேக்க்கத்தைப் போக்க

"http://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:வரலாறு&oldid=1117380" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்