வடமேற்கு ஓநாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Eugnathostomata
வடமேற்கு ஓநாய்
மோன்டோனாவின் யெல்லோஸ்டோனில் காணப்பட்ட ஓநாய்.

Apparently Secure  (NatureServe)[1]
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
கேனிசு
இனம்:
துணையினம்:
C. l. occidentalis
முச்சொற் பெயரீடு
Canis lupus occidentalis
சர் ஜான் ரிச்சர்ட்சன், 1829[2]
வேறு பெயர்கள் [4]
  • ater (ரிச்சர்ட்சன், 1829)[3]
  • sticte (ரிச்சர்ட்சன், 1829)[3]

வடமேற்கு ஓநாய் ( Northwestern wolf ), மெக்கன்சி பள்ளத்தாக்கு ஓநாய் என்றும்,[5] அலாஸ்கா மர ஓநாய்,[6] அல்லது கனடிய மர ஓநாய்,[7] என்றும் அறியப்படும் இது மேற்கு வட அமெரிக்காவில் உள்ள சாம்பல் ஓநாயின் ஒரு கிளையினமாகும் . உலகின் மிகப்பெரிய சாம்பல் ஓநாய் கிளையினம் என்றும் கருதலாம். இது அலாஸ்காவிலிருந்து, மேல் மெக்கென்சி ஆற்றுப் பள்ளத்தாக்கிலிருந்து வருகிறது. வடமேற்கு அமெரிக்காவிலும் புல்வெளி நிலப்பரப்புகளைத் தவிர மேற்கு கனடிய மாகாணங்கள் முழுவதும் இது காணப்படுகிறது.[6]

வகைபிரித்தல்[தொகு]

இந்த ஓநாய் உலகின் பாலூட்டி சிற்றினங்களில் (2005) ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது . 1829 ஆம் ஆண்டில் இசுகொட்லாந்திய இயற்கையியலாளர் சர் ஜான் ரிச்சர்ட்சன் என்பவரால் இந்த கிளையினங்கள் முதன்முதலில் வகைப்படுத்தப்பட்டன. அவர் அதன் புவியியல் இருப்பிடத்தைக் குறிக்கும் வகையில் அதற்கு ஆக்ஸிடெண்டலிஸ் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தார். அதை அதன் நிறத்தால் குறிபிடுவதற்குப் பதிலாக, அது மிகவும் மாறக்கூடியதாக இருந்தது.[2]

விளக்கம்[தொகு]

வடமேற்கு ஓநாய்கள் ஓநாய்களின் மிகப்பெரிய கிளையினங்களில் ஒன்றாகும். கனடாவின் பிரித்தானிய கொலம்பியாவில், ஐந்து வயது வந்த பெண் ஓநாய்கள் சராசரியாக 38.6 முதல் 42.5 கிலோ வரையிலும், பத்து வயதான ஆண் ஓநாய்கள் சராசரியாக 47.6 முதல் 51.7 கிலோ வரையிலும் எடைகளைக் கொண்டுள்ளன.[8] யெல்லோஸ்டோன் தேசிய பூங்காவில், வயது வந்த பெண் ஓநாய்கள் சராசரியாக 40 கிலோ எடையிலும் வயது வந்த ஆண் ஓநாய்கள் சராசரியாக 50கிலோ வரையிலும் இருக்கின்றன.[9] சமீபத்திய ஆய்வுகள், அமெரிக்காவின் வடமேற்கில் உள்ள ஓநாய்களின் உயரம் மற்றும் எடை விவரங்களில் மாறுபாட்டைக் கொண்டிருந்தன. இருபால் ஓநாய்களும் தோள்பட்டையிலிருந்து 75 முதல் 95 செமீ உயரம் வரை இருந்தன. இங்கு ஆண் ஓநாயின் எடை 55 முதல் 82 கிலோவாகவும், பெண் ஓநாயின் எடை 45 முதல் 60 கிலோவாகவும் பதிவாகியுள்ளது.

இலாங்லீட்,[10] வோபர்ன்,[11] மற்றும் பார்க் ஒமேகா உள்ளிட்ட கனடிய மற்றும் பிரித்தானிய வனவிலங்குப் பூங்காக்களில் ஓநாய்கள் உள்ளன.[12]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Canis lupus occidentalis". explorer.natureserve.org.
  2. 2.0 2.1 Richardson, J. (1829) Fauna boreali-americana, or, The zoology of the northern parts of British America, London : J. Murray [etc.], pp. 60-65
  3. 3.0 3.1 Wozencraft, W. Christopher (16 November 2005). "Order Carnivora (pp. 532-628)". In Wilson, Don E., and Reeder, DeeAnn M., eds (ed.). [http://books.google.com/books?id=JgAMbNSt8ikC&printsec=frontcover&source=gbs_v2_summary_r&cad=0#v=onepage&q&f=false Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference] (3rd ed.). Baltimore: Johns Hopkins University Press, 2 vols. (2142 pp.). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-8221-0. {{cite book}}: |editor= has generic name (help); External link in |title= (help)CS1 maint: multiple names: editors list (link)
  4. Wozencraft, W. Christopher (16 November 2005). "Order Carnivora (pp. 532-628)". In Wilson, Don E., and Reeder, DeeAnn M., eds (ed.). [http://books.google.com/books?id=JgAMbNSt8ikC&printsec=frontcover&source=gbs_v2_summary_r&cad=0#v=onepage&q&f=false Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference] (3rd ed.). Baltimore: Johns Hopkins University Press, 2 vols. (2142 pp.). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-8221-0. {{cite book}}: |editor= has generic name (help); External link in |title= (help)CS1 maint: multiple names: editors list (link)
  5. Mech, L. David (1970), The wolf: The Ecology and Behaviour of an Endangered Species, Natural History Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-307-81913-0
  6. 6.0 6.1 Mech, L. David (1981), The wolf: The Ecology and Behaviour of an Endangered Species, University of Minnesota Press, p. 352, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8166-1026-6
  7. "An account of the taxonomy of North American wolves from morphological and genetic analyses". North American Fauna 77: 1–67. 2012. doi:10.3996/nafa.77.0001. "The findings and conclusions in this article are those of the author(s) and do not necessarily represent the views of the U.S. Fish and Wildlife Service.". 
  8. Table listing the 1996 Northwestern wolves introduced into Idaho பரணிடப்பட்டது 2019-06-07 at the வந்தவழி இயந்திரம்.
  9. Metz, M. C., Vucetich, J. A., Smith, D. W., Stahler, D. R., & Peterson, R. O. (2011).
  10. "Longleat|Wolf Wood". பார்க்கப்பட்ட நாள் 2022-08-06.
  11. Canadian Timber Wolf
  12. "Grey wolf- Parc Oméga". பார்க்கப்பட்ட நாள் 2017-01-23.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Canis lupus occidentalis
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=வடமேற்கு_ஓநாய்&oldid=3925679" இலிருந்து மீள்விக்கப்பட்டது