லுத்யானைடீ
| லுத்யானைடீ | ||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
லுத்யானசு கிப்பசு (Lutjanus gibbus)
|
||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||
|
||||||||||||
| பேரினங்கள் | ||||||||||||
|
கட்டுரையில் பார்க்கவும். |
லுத்யானைடீ (Lutjanidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இவை பெரும்பாலும் கடல் மீன்கள் ஆயினும், கயவாய்ப் (ஆற்றுக் கழிமுகம்) பகுதிகளில் வாழும் சில இனங்கள் உணவுக்காக நன்னீருக்குச் செல்கின்றன. இக் குடும்பத்து இனங்கள் பல உணவாகக் கொள்ளப்படுகின்றன.
இவை எல்லாப் பெருங்கடல்களினதும் வெப்பவலய, துணை வெப்பவலயப் பகுதிகளில் காணப்படுகின்றன. பெரும்பாலானவை புறவோட்டு உயிரினங்களை அல்லது பிற மீன்களை இரையாகக் கொள்கின்றன. மிதவைவாழிகளை உணவாகக் கொள்ளும் சில இனங்களும் இக் குடும்பத்தில் உள்ளன. இவை காட்சியகங்களில் வைக்கப்படுவது உண்டு எனினும், இவை மிக விரைவாக வளர்வதால் இவை அதிகம் விரும்பப்படுவது இல்லை. இவை பொதுவாக 450 மீட்டர் ஆழம் வரை வாழ்கின்றன.
பொருளடக்கம் |
வகைப்பாடு [தொகு]
இக் குடும்பத்தில் தற்போது 16 பேரினங்களுக்குள் அடங்கும் 100 இனங்கள் உள்ளன. இப் பதினாறு பேரினங்களும் பின்வருமாறு:
- அஃபாரியசு (Aphareus)
- ஆப்ரியன் (Aprion)
- ஆப்சிலசு (Apsilus)
- எத்தேலிசு (Etelis)
- ஏமிலத்யானசு (Hemilutjanus)
- ஓப்புளோபாக்ரசு (Hoplopagrus)
- லிப்போக்கீலசி (Lipocheilus)
- லுத்யானசு (Lutjanus)
- மாக்கலர் (Macolor)
- ஓசியுரசு (Ocyurus)
- பரசீசியோ (Paracaesio)
- பின்யாலோ (Pinjalo)
- பிரிசுத்திபோமோய்டீசு (Pristipomoides)
- ராண்டலிக்தீசு (Randallichthys)
- ரொம்போப்லைட்டீசு (Rhomboplites)
- சிம்ஃபோரசு (Symphorus)
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
உசாத்துணை [தொகு]
- ஃபிஷ்பேஸ்.ஆர்க் (ஆங்கிலத்தில்)