யூனிகார்ன் நிறுவனம் (நிதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யூனிகார்ன் நிறுவனம் என்பது 1 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் மூலதனம் கொண்ட ஒரு தனியார் தொடக்கநிலை தொழில் அல்லது வணிக நிறுவனம் நிறுவனமாகும்.[1]:1270[2]

சூன் 2022 நிலவரப்படி உலகம் முழுவதும் 1,170 யூனிகார்ன் நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.[3] $10 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான யூனிகார்ன் நிறுவனங்கள் "டெகாகார்ன்" நிறுவனங்களாக கருதப்படுகிறது.[4] $100 பில்லியன் மதிப்புள்ள தனியார் நிறுவனங்களை, "சென்டிகார்ன்" என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.[5] ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் $1 டிரில்லியன் மூலதனத்துடன் "சூப்பர்யூனிகார்ன்" நிலையை அடைந்துள்ளது.[6]

வரலாறு[தொகு]

ஐலீன் லீ என்பவர் 2013இல் டெக்கிரஞ்சு எனும் இணைய இதழில் "வெல்கம் டு தி யூனிகார்ன் கிளப்: லெர்னிங் ஃப்ரம் பில்லியன் டாலர் ஸ்டார்ட்அப்ஸ்" எனும் கட்டுரையில் யூனிகார்ன் எனும் சொல்லை முதன்முதலில் கையாண்டார்.[7]அந்நேரத்தில், 39 நிறுவனங்கள் யூனிகார்ன்களாக அடையாளம் காணப்பட்டன.[8] ஹார்வர்ட் பிசினஸ் ரிவியூ நடத்திய வித்தியாசமான ஆய்வில், 2012 மற்றும் 2015ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்டகாலத்தில் நிறுவப்பட்ட தொடக்கநிலை தொழில் நிறுவங்கள், 2000 மற்றும் 2003ஆம் ஆண்டுகளுக்கு இடையில் நிறுவப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் மதிப்பீட்டை விட இரண்டு மடங்கு வேகமாக வளர்ச்சியடைந்து வருவதாக கண்டறியப்பட்டது.[9]

2018ஆம் ஆண்டில் 16 நிறுவனங்கள் யூனிகார்ன்களாக மாறியது, இதன் விளைவாக உலகளவில் 119 தனியார் நிறுவனங்கள் $1 பில்லியன் அல்லது அதற்கு மேல் மதிப்பை கொண்டவை.[10]

ஆகஸ்டு 2021 வரை உலகளவில் 803 யூனிகார்ன்கள் இருந்தன. இதில் பைட்டான்ஸ், ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் ஸ்ட்ரைப் ஆகியவை மிகப்பெரியவை டெகாகார்ன் நிறுவங்கள் ஆகும். [11]

யூனிகார்ன் நிறுவனங்களில் எழுச்சி 2021ஆம் ஆண்டிற்கான "விண்கல்" என்று அறிவிக்கப்பட்டது. 340 தொடக்கநிலை புதிய நிறுவனங்களில் $71 பில்லியன் முதலீடு செய்யப்பட்டது. சூன் 2022இல் மொத்தம் 1,170 யூனிகார்ன் நிறுவங்கள் பதிவானது.[12]இஸ்ரேல் 90க்கும் மேற்பட்ட யுனிகார்ன் நிறுவனங்களைக் கொண்டுள்ளது.[13]

2022 ஆண்டின் முடிவில் அமெரிக்கா 2 டிரில்லியன் (2000 பில்லியன்) அமெரிக்க டாலர் மூலதனத்துடன் 666 யூனிகார்ன் நிறுவனங்களுடன் முதலிடத்திலும்; சீனா 1.3 டிரில்லியன் டாலர் மூலதனத்துடன் 441 யூனிகார்ன் நிறுவனங்களும்; இந்தியா 129 யூனிகார்ன் நிறுவனங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. [14][15]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Hirst, Scott; Kastiel, Kobi (2019-05-01). "Corporate Governance by Index Exclusion". Boston University Law Review 99 (3): 1229. https://scholarship.law.bu.edu/faculty_scholarship/601. 
  2. Cristea, Ioana A.; Cahan, Eli M.; Ioannidis, John P. A. (April 2019). "Stealth research: Lack of peer‐reviewed evidence from healthcare unicorns" (in en). European Journal of Clinical Investigation 49 (4): e13072. doi:10.1111/eci.13072. பன்னாட்டுத் தர தொடர் எண்:0014-2972. பப்மெட்:30690709. 
  3. "The Complete List Of Unicorn Companies" (in en). CB Insights. https://www.cbinsights.com/research-unicorn-companies. 
  4. "What Is A Decacorn? The Era Of Decacorn Companies". FourWeekMBA (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-01-25. பார்க்கப்பட்ட நாள் 2021-08-29.
  5. Sheetz, Michael (2019-01-25). "Elon Musk's SpaceX hits $100 billion valuation after secondary share sale" (in en-US). CNBC. https://www.cnbc.com/2021/10/08/elon-musks-spacex-valuation-100-billion.html. 
  6. "Elon Musk's SpaceX wants to remain private to be the first superunicorn before going public" (in en-US). 2022-09-09. https://superangels.com/000001a/000001b/000001c/future+superunicorns.html. 
  7. Welcome To The Unicorn Club: Learning From Billion-Dollar Startups
  8. Fan, Jennifer S. (March 2016). "Regulating Unicorns: Disclosure and the New Private Economy". BCL Rev. 57 (2): 583, note 1. https://lawdigitalcommons.bc.edu/bclr/vol57/iss2/5/. 
  9. "How Unicorns Grow". Harvard Business Review. January–February 2016. pp. 28–30. பார்க்கப்பட்ட நாள் 2017-03-30.
  10. Sumagaysay, Levi (October 9, 2018). "Venture capital: Bay Area's Lucid Motors, Zoox, Uber scored the most in third quarter". The Mercury News. San Jose, Calif. பார்க்கப்பட்ட நாள் October 15, 2018.
  11. "The Global Unicorn Club" (in en). CB Insights. https://www.cbinsights.com/research-unicorn-companies. 
  12. "The Complete List Of Unicorn Companies" (in en). CB Insights. https://www.cbinsights.com/research-unicorn-companies. 
  13. Tech Leaders in Israel Wonder if It’s Time to Leave, New York Times
  14. ஸ்டார்ட் அப் யுனிகார்ன் நிறுவனங்கள் : இந்தியாவுக்கு 3வது இடம்
  15. List of Unicorn Startups in India