யாசுமினம் அங்குலரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யாசுமினம் அங்குலரே
இலைகள், Jasminum angulare
பூக்கள்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
J. angulare
இருசொற் பெயரீடு
Jasminum angulare
Vahl.
வேறு பெயர்கள்
  • Jasminum nudiflorum f. nudiflorum
  • Jasminum sieboldianum

யாசுமினம் அங்குலரே (தாவரவியல் வகைப்பாடு: Jasminum angulare, wild jasmine, angular jasmine) என்பது முல்லைக் குடும்பத்திலுள்ள ஒரு வகை பூக்கும் தாவரமாகும். இக்குடும்பத்தில், 29 பேரினங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதில் ஒரு பேரினமான, “மல்லிப் பேரினத்தில்” , 201 இனங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு இனமாக இத்தாவரம் உள்ளது.[1] சீனா, திபெத், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் அகணிய தாவரமாக இவ்வினம் உள்ளது. பரிணாம, மரபியல் ஆய்வுகளின் படி, இத்தாவரத்தின் பெயர், Jasminum nudiflorum f. nudiflorum என்ற துணையினமாக மாற்றப்பட்டுள்ளது. பசுமை மாறா புதர் வகைத் தாவரமாகும்.

பேரினச்சொல்லின் தோற்றம்[தொகு]

அரபி மொழியில், யாச(அ)மின் (ياسمين), என்றும்; இந்த அரபிச்சொல்லுக்கு "இனிய நுறுமணமுள்ள தாவரங்கள்" என்பது பொருளாகும். [2] பாரசீக மொழியில் யாசுசுமின் (یاسمین) என்றும்; உருது மொழியில் یاسمینی அல்லது یاسمین بو என்றும் அழைப்பர். மேலும், மல்லிப்பூவின் வாசனை எண்ணெக்கான பெயர்கள், சில கிரேக்க சொற்களோடு (iasme, iasmelaion) ஒப்பீடும் செய்யப்படுகிறது. 1570 ஆம் ஆண்டுகளில், பிரஞ்சு மொழியில் jasmin என்ற சொல்லும், அதற்கு முன்னர் jessemin என்ற சொல்லும் பயன்பாட்டில் இருந்துள்ளன. பிரஞ்சு மொழியில் இருந்து, பல செருமானிய மொழிகளில் இச்சொல்லின் வேறுபட்ட வடிவங்கள் தோன்றியது எனலாம். பதினாறாம் நூற்றாண்டில் இத்தாவர வகை இங்கிலாந்தில் முதன்முதலாக வளர்க்கப்பட்டதாக அறிய முடிகிறது. [3]

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Jasminum angulare". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI.
    "Jasminum angulare". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO.
  2. Gledhill, David (2008). "The Names of Plants". Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521866453 (hardback), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521685535 (paperback). pp 220
  3. etymonline
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாசுமினம்_அங்குலரே&oldid=3885684" இலிருந்து மீள்விக்கப்பட்டது