மைக்கேல் கேரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைக்கேல் கேரே
பிறப்புமைக்கேல் ராண்டால்ப் கேரே
19-நவம்பர்-1945 (வயது 77)
மனிடோவோக், விசுகான்சின், அமெரிக்கா
தேசியம்அமெரிக்கா
துறைகணினி அறிவியல்
கல்வி கற்ற இடங்கள்விசுகொன்சின்-மாடிசன் பல்கலைக்கழகம்

மைக்கேல் ராண்டால்ப் கேரே (Michael Randolph Garey) கணினி அறிவியல் ஆராய்ச்சியாளர் ஆவார். இவர் 1945 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் தேதி பிறந்தார். மேலும் டேவிட் எசு. சான்சனுடன் கணினிகள் மற்றும் சிக்கலற்ற தன்மை : கோட்பாட்டிற்கு ஒரு வழிகாட்டி தீர்மானமற்ற முழுமையின் பல்லுறுப்புக்கோவை இணை ஆசிரியர் ஆவார். இவரும் சான்சனும் இந்த புத்தகத்திற்காக அமெரிக்கா நாட்டின் செயல்பாட்டு ஆராய்ச்சி சமூகத்தின் 1979 ஆம் ஆண்டு பிரடெரிக் டபிள்யூ. லான்செசுடர் பரிசைப் பெற்றனர். கேரே 1970 ஆம் ஆண்டு விசுகொன்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் தனது முனைவர் பட்டத்தைப் பெற்றார். [1] 1970 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு ஓய்வு பெறும் வரை அல்காட்டெல்-லூசெண்ட் பெல் ஆய்வுக்கூடங்களில் கணித அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்தார். இந்த அமைப்பில் கடைசி 11 ஆண்டுகளாக, அதன் இயக்குநராக பணியாற்றினார். இவரது தொழில்நுட்ப சிறப்புகளில் தனித்த வழிமுறைகள் மற்றும் கணக்கீட்டு சிக்கலானது, தோராயமான வழிமுறைகள், திட்டமிடல் கோட்பாடு மற்றும் வரைபடக் கோட்பாடு ஆகியவை அடங்கும். 1978 ஆம் ஆண்டு முதல் 1981 ஆம் ஆண்டு வரை கணினி இயந்திரங்கள் சங்க பத்திரிக்கையின் தலைமை ஆசிரியராக பணியாற்றினார். 1995 ஆம் ஆண்டு , கேரே கணினி இயந்திரங்களுக்கான சங்கத்தின் கூட்டாளிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டார். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Mathematics Genealogy Project: Michael Randolph Garey".
  2. "ACM: Fellows Award / Michael R Garey". Association for Computing Machinery. பார்க்கப்பட்ட நாள் 2009-01-24.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கேல்_கேரே&oldid=3786821" இலிருந்து மீள்விக்கப்பட்டது