மெயின் பி சௌகிதார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மெயின் பி சௌகிதார் (Main Bhi Chowkidar, பொருள்:  "நானும் ஒரு காவலாளி" ) என்பது 2019 இந்தியப் பொதுத் தேர்தலுக்கான பரப்புரையில் பாரதிய ஜனதா கட்சியால் பயன்படுத்தப்பட்ட இந்தி முழக்கம் ஆகும். இந்திய தேசிய காங்கிரசு தலைவர் இராகுல் காந்தியின் முழக்கத்துக்கு எதிர் முழக்கமாக பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோதி இந்த முழக்கத்தை உருவாக்கினார். இது அரசு, நிறுவனங்கள், ஆட்சேர்ப்பு பகுப்பில் இஇஎப்எப்இ வெள்ளி விருது 2020 பெற்றது. மோடியுடன் தங்கள் உள்ளதைக் காட்ட மில்லியன் கணக்கான பாஜகவினர் சமூக ஊடகங்களில் தங்கள் சுயவிவரங்களை மாற்றினர்.

வரலாறு[தொகு]

14 மார்ச் 2019 அன்று, இராகுல் காந்தியின் சௌகிதார் சோர் ஹை என்ற கேலிக்கு பதிலளிக்கும் விதமாக மோடி, அவரது ஆதரவாளர்களிடம் " மை பி சௌகிதார் " என்ற முழக்கத்துடன் பிரச்சாரத்தைத் தொடங்கினார். இது அனைவரும் ஊழலுக்கும், சமூக தீமைகளுக்கும் எதிரான போராளிகள் என்பதைக் குறிப்பதாகும். நரேந்திர மோடி என்ற தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் அவரது பெயரை சௌகிதார் நரேந்திர மோடி என்று மாற்றினார். இந்த முழக்கம் எதிர்ப்பாளர்களிடம் பெரும் ஏளனத்திற்கு உள்ளானது, அவர்கள் இதை "புதிய நாடகம்" என்று முத்திரை குத்தினர்.

ஒருங்கிணைந்த பரப்புரையின் ஒரு பகுதியாக, பாஜக தலைவர் அமித் சா, முதல்வர்கள் மற்றும் பிற ஒன்றிய அமைச்சர்கள் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் தங்கள் டிவிட்டர் சுயவிவரப் பெயர்களில் " சௌகிதார் " என்ற முன்னொட்டைச் சேர்த்து மாற்றி அமைத்தனர். [1] இறுதியில், லட்சக்கணக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆதரவாளர்களும் சமூக ஊடகங்களில் தங்கள் பெயர்களை அதற்கேற்ப மாற்றிக்கொண்டனர். [2] பரப்புரையின் ஒரு பகுதியாக ஒலி இணைப்பில் ஏராளமான காவலாளிகள் குழுவிடம் மோடி உரையாற்றினார். [3]

சௌகிதார் சோர் ஹை என்ற உண்மையை மாற்ற முடியாது என்று ராகுல் காந்தி கூறி பாஜகவின் தேர்தல் முழக்கத்தை காங்கிரசு கட்சி விமர்சித்தது. காங்கிரசு கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா, மோடியின் முழக்கத்திற்கு பதிலளித்து, "ஒரே சௌகிதார் ஒரே திருடன்" என்று குற்றம் சாட்டினார். [4] மோடியின் ஆட்சியில் காணப்படும் வேலையில்லாத் திண்டாட்டத்தை முன்னிலைப்படுத்தவும், மெயின் பி சௌகிதார் பரப்புரையை எதிர்கொள்ளவும் காங்கிரசின் சமூக ஊடகக் குழு " மைன் பி பெரோஸ்கர் " (நானும் வேலையில்லாமல் இருக்கிறேன்) என்ற முழக்கத்தை எதிராக வைத்தது. [5]

நாடு முழுவதும் சௌகிதார் ஆக வேண்டும் என்று மோடி விரும்புகிறார் என்றும், தங்கள் குழந்தைகளை வாட்ச்மேன் ஆக விரும்புபவர்கள் மோடிக்கு வாக்களிக்க வேண்டும் என்றும், தங்கள் குழந்தைகள் மருத்துவர், பொறியாளர், வழக்கறிஞர் என ஆக வேண்டும் என்று விரும்புபவர்கள் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். [6]

சௌகிதார் சோர் ஹை பரப்புரையை விட மெயின் பி சௌகிதார் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியதாக கருதப்படுகிறது. [7] [8] [9]

2020 பீகார் தேர்தலுக்கு, நிதிஷ் குமார் தனது பரப்புரையின் ஒரு பகுதியாக மெயின் பியான பி நிதீஷ் குமார் (நானும் நிதிஷ் குமார் தான்) என்று இதையே முன்மாதிரியாகக் கொண்டு ஒரு முழக்கத்தை உருவாக்கினார். [10]

மேற்கோள்கள்[தொகு]

  1. "मोदी 'चौकीदार' तो 'चौकीदार का मालिक' कौन" (in hi). 2019-03-19. https://www.bbc.com/hindi/social-47623166. 
  2. "In A New Gimmick, PM Changes Twitter Profile Name To 'Chowkidar Narendra Modi'" (in en). 2019-03-17. https://www.huffingtonpost.in/entry/in-a-new-gimmick-pm-changes-twitter-profile-name-to-chowkidar-narendra-modi_in_5c8e0464e4b0db7da9f454a7. 
  3. "To counter 'chowkidar chor hai' jibe, PM launches 'Main Bhi Chowkidar' campaign". Rediff. 16 March 2019. https://www.rediff.com/news/report/pm-launches-main-bhi-chowkidar-campaign/20190316.htm. 
  4. "Youth Cong's 'Main Bhi Berozgar' campaign to counter BJP's 'Main Bhi Chowkidar' - Times of India". The Times of India. 30 March 2019. https://timesofindia.indiatimes.com/elections/news/youth-congs-main-bhi-berozgar-campaign-to-counter-bjps-main-bhi-chowkidar/articleshow/68649541.cms. 
  5. "Lok Sabha elections 2019 | 'If you want your child to become chowkidar, vote for Narendra Modi': Arvind Kejriwal". Hindustan Times (in ஆங்கிலம்). 2019-03-20. பார்க்கப்பட்ட நாள் 2020-08-16.
  6. "Main Bhi Chowkidar campaign wins Effie Silver 2020". Outlook India. 2020-01-29. பார்க்கப்பட்ட நாள் 2020-08-16.
  7. "'Main bhi Chowkidar' was way ahead of "Chowkidar Chor Hai' campaign online". Tribuneindia News Service (in ஆங்கிலம்). May 29, 2019. பார்க்கப்பட்ட நாள் 2020-08-16.
  8. Bhattacharya, Ananya (April 9, 2019). "Modi's #MainBhiChowkidar versus Gandhi's #ChowkidarChorHai—who won?". Quartz India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-16.
  9. Ranjan, Abhinav (2020-08-03). "'Main bhi Nitish Kumar': JD(U) shapes campaign around Bihar CM ahead of Assembly elections". The Financial Express (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெயின்_பி_சௌகிதார்&oldid=3751167" இலிருந்து மீள்விக்கப்பட்டது