முப்புரோமோசிலேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முப்புரோமோசிலேன்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டிரைபுரோமோசிலேன்
வேறு பெயர்கள்
சிலிக்கோபுரோமோஃபார்ம்; முப்புரோமோவொருசிலேன்
இனங்காட்டிகள்
7789-57-3 Y
ChemSpider 74222
InChI
  • InChI=1S/Br3HSi/c1-4(2)3/h4H
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82244
SMILES
  • Br[SiH](Br)Br
பண்புகள்
Br3HSi
வாய்ப்பாட்டு எடை 268.81 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

முப்புரோமோசிலேன் (Tribromosilane) என்பது சிலிக்கான், ஐதரசன் மற்றும் புரோமின் சேர்ந்து உருவாகும் ஒரு வேதியியல் சேர்மமாகும் .உயர் வெப்பநிலைகளில் இச்சேர்மம் சிதைவடைந்து சிலிக்கானைத் தருகிறது. மற்றும் குறைகடத்தித் தொழிற்சாலையில் பயன்படும் மீத்தூய சிலிக்கானில் இருந்து தயாரிக்கப்படும் தூய முக்குளோரோசிலேனுக்கு இது மாற்றாகவும் பயன்படுகிறத

சிலிக்கான் படியவைக்கும் சூமேக்கர் செயல்முறையில் முப்புரோமோசிலேன் வாயு பாலிசிலிக்கான் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. பாலிசிலிக்கான் தயாரிக்கப் பயன்படும் சிமென்சு செயல்முறையினைக் காட்டிலும் இம்முறையில் செலவு மற்றும் பாதுகாப்பு நன்மைகள் உண்டு[1]

படிக சிலிக்கானுடன் வாயுநிலை ஐதரசன் புரோமைடை உயர் வெப்பநிலைகளில்[2] சேர்க்கும் பொழுது முப்புரோமோசிலேன் உருவாகிறது. காற்றுடன் தொடர்பு ஏற்பட்டால் இச்சேர்மம் தன்னிச்சையாக எரியத் தொடங்கும்[3] .

மேற்கோள்கள்[தொகு]

  1. The Schumacher Process
  2. Schumb WC, Young RC (April 1930). "A study of the reaction of hydrogen bromide with silicon". Journal of the American Chemical Society 52 (4): 1464–1469. doi:10.1021/ja01367a025. 
  3. Schumb WC (December 1942). "The Halides and Oxyhalides of Silicon". Chemical Reviews 31 (3): 587–595. doi:10.1021/cr60100a004. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=முப்புரோமோசிலேன்&oldid=1946695" இலிருந்து மீள்விக்கப்பட்டது