முதலாம் பரமேஸ்வரவர்மன்
| பல்லவ மன்னர்களின் பட்டியல் | |
|---|---|
| முற்காலப் பல்லவர்கள் | |
| பப்பதேவன் | சிவகந்தவர்மன் |
| விசய கந்தவர்மன் | புத்தவர்மன் |
| இடைக்காலப் பல்லவர்கள் | |
| விட்ணுகோபன் I | குமாரவிட்ணு I |
| கந்தவர்மன் I | வீரவர்மன் |
| கந்தவர்மன் II | சிம்மவர்மன் I |
| விட்ணுகோபன் II | குமாரவிட்ணு II |
| கந்தவர்மன் III | சிம்மவர்மன் II |
| புத்தவர்மன் | நந்திவர்மன் I |
| விட்ணுகோபன் III | குமாரவிட்ணு III |
| சிம்மவர்மன் III | |
| பிற்காலப் பல்லவர்கள் | |
| சிம்மவிஷ்ணு | கிபி 555 - 590 |
| மகேந்திரவர்மன் I | கிபி 590 - 630 |
| நரசிம்மவர்மன் I (மாமல்லன்) | கிபி 630 - 668 |
| மகேந்திரவர்மன் II | கிபி 668 - 672 |
| பரமேஸ்வரவர்மன் | கிபி 672 - 700 |
| நரசிம்மவர்மன் II (ராஜசிம்மன்) | கிபி 700 - 728 |
| பரமேஸ்வரவர்மன் II | கிபி 705 - 710 |
| நந்திவர்மன் II (பல்லவமல்லன்) | கிபி 732 - 796 |
| தந்திவர்மன் | கிபி 775 - 825 |
| நந்திவர்மன் III | கிபி 825 - 850 |
| நிருபதுங்கவர்மன் | கிபி 850 - 882 |
| அபராஜிதவர்மன் | கிபி 882 - 901 |
| தொகு | |
முதலாம் பரமேஸ்வரவர்மன் தென்னிந்தியாவை ஆண்ட பல்லவ மன்னர்களில் ஒருவன் ஆவான்.
இரண்டாம் மகேந்திரவர்மனுக்குப் பிறகு பல்லவ மன்னனாக முதலாம் பரமேஸ்வரவர்மன் பதவியேற்றான். இம்மன்னனின் பாட்டனார் முதலாம் நரசிம்மவர்மன் காலத்தில் பல்லவர்கள், சாளுக்கியர்களையும், வாதாபி மன்னர்களையும் வென்று தென்னிந்தியாவில் பலம் வாய்ந்த பல்லவர் ஆட்சியை நிருவியிருந்தான். பரமேஸ்வரவர்மன் அரசியல் மற்றும் போர் விவகாரங்களில் தேர்ந்த மன்னனாக இருந்தான். இலக்கியங்களில் ஆர்வம் கொண்டிருந்த இவன் சிவபெருமானுக்கு பல ஆலயங்கள் எழுப்புவித்தான்.
இம்மன்னனின் ஆட்சிக் காலத்தில் தொடர்ச்சியா, முதலாம் விக்கிரமாதித்யன் தலைமையிலான சாளுக்கிய படைகளுடன் போர்கள் நடந்த வண்ணம் இருந்தன. முதலாம் விக்கிரமாதித்யன், பரமேஸ்வரவர்மனின் பாட்டனான முதலாம் நரசிம்ம வர்மனுடன் போர்கள் புரிந்தவன், மேலும் கன்னட மன்னர்கள் மற்றும் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களுடன் தோழமை கொண்டிருந்தான்.