முடிவிலி
முடிவிலி என்ற கருத்து கணிதத்துக்கே, கணிதத்துக்கென்றே, கணிதத்தாலேயே உருவாக்கப்பட்ட கருத்து.
என்ற குறியீட்டால் அது குறிக்கப்பட்டு பேசப்படுவதால் அதை 1,2,3, ... போன்று ஒரு எண்ணாக நினைப்பது தவறு. முடிவிலி ஒரு எண்ணல்ல.
முடிவிலி ஒரு எண்ணல்ல[தொகு]
தொடர்வு (Sequence)களை முடிவுறு தொடர்வு என்றும் முடிவுறாத் தொடர்வு என்றும் இருவகைப்படுத்தலாம்.முடிவுறு தொடர்வு என்பது முடிவு தெரிந்த (அல்லது தெரியப்படுத்தப்பட்ட) தொடர்வு என்று கொள்ளலாம். எடுத்துக்காட்டாக,
-
- 1, 2, 3, ..., 10.
என்ற தொடர்வில் 10 உறுப்புகள் உள்ளன.
என்ற தொடர்வில் 100 உறுப்புகள் உள்ளன.
இவை முடிவுறு தொடர்கள் எனப்படும். மாறாக,
-
- 1,2,3, ...
என்று முடிவே இல்லாமல் இருக்கும் தொடர்வு முடிவுறாத்தொடர்வு. இத்தொடர்வில் எவ்வளவு உறுப்புக்கள் உள்ளன என்ற கேள்வி எளிதான கேள்வி அல்ல. 'முடிவிலி' எண்கள் உள்ளன என்று சொல்வதோ அல்லது
என்று சொல்வதோ கணிதமரபில் தவறான செய்கை.
இயற்கணிதத்தில் முடிவிலி[தொகு]
ஒரு எண் அல்ல என்றால் 1,2,3, ... என்ற முடிவுறாத்தொடர்வில் எவ்வளவு உறுப்புக்கள் உள்ளன? கணிதத்தில் இக்கேள்விக்கு விடை என்ன்? ஒரு முடிவிலா கணத்தில் எவ்வளவு உறுப்புக்கள் உள்ளன என்பதை அலசுவதற்குத்தான் எண்ணுறுமை (Countability) எண்ணுறாமை (Uncountability) என்ற கருத்துக்கள் உருவாக்கப்பட்டன.
- 1,2,3, ...
- 2,4,6, ...
- ... -3, -2, -1, 0, 1, 2, 3, ...
ஆக இந்த மூன்று தொடர்வுகளும் ஒரே "எண்ணளவை" யுள்ள கணங்கள் என்ற கருத்து ஒரு நுண்புலக் கணிதக் கருத்து. இதனுடைய விபரங்களை எண்ணுறுமையும் எண்ணுறாமையும் என்ற கட்டுரையில் காண்க.
பகுவியலில் முடிவிலி[தொகு]
கணிதத்தில் வெகு சரளமாக
என்ற மாறி
க்குப்போகிறது என்றும் அதற்குக் குறியீட்டாக
என்றும் கூறும் வழக்கு உண்டு. இங்கும்
என்பதை ஒரு எண்ணாக எடுத்துக் கொள்ள்ளக்கூடாது. x என்ற மாறியின் மதிப்பு அளவிடமுடியாமல் வளர்ந்துகொண்டே போகிறது என்பதைத்தான் இக்குறியீடு சொல்கிறது. இதன் நெளிவு சுளுவுகளை எல்லைப்புள்ளி என்ற கட்டுரையில் காண்க. எல்லை, எல்லைப்புள்ளி என்ற கருத்துக்களின் அடிப்படையில் தான் பகுவியலும் , பகுவியலைப் பயன்படுத்தும் அத்தனை பயன்பாடுகளும் செயல்படுகின்றன.

