மின்பூச்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மின்பூச்சு (Electro Deposition) என்பது மின்னாற்பகுப்பு முறையில் ஏதேனுமொரு மின்கடத்தும் பரப்பின் மீது மற்றொரு உலோகத்தை மெலிதான அடுக்காக படியச் செய்யும் செயல்முறையே மின்பூச்சு செய்தல் எனப்படும். மின்பூச்சு செய்யப்படும்போது எப்பொருளின் மீது மற்றொரு உலோகத்தைப் படிய வைக்க வேண்டுமோ அப்பொருள் எதிர்மின்வாயாகவும், பூச்சு செய்யப் பயன்படும் உலோகம் நேர்மின்வாயாகவும் எடுத்துக் கொள்ளப்படும்.[1]

மின்பூச்சு செய்தலின் பயன்கள்[தொகு]

தொழிற்சாலைகளில் மின்பூச்சு அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.மகிழுந்துகளின் பாகங்கள், சக்கரங்களில் பயன்படும் உலோகப்பகுதிகள், குளியலறைக் குழாய்கள் போன்றவை இரும்பின் மீது குரோமியம் உலோகத்தால் மின்பூச்சு செய்யப்பட்டவை ஆகும்.சாப்பாட்டு மேசையில் பயன்படும் பொருள்கள் மற்றும் மின்தொடர்பு சாதனங்கள் போன்றவை வெள்ளியால் மின்பூச்சு செய்யப்படுகின்றன. இயந்திரங்களில் காணப்படும் உருண்டைத் தாங்கிகளிலும் இவை பயன்படுகின்றன. தங்கமுலாம் பூசப்பட்ட ஆபரணங்கள் கைக்கடிகாரங்கள் மிக அதிக அளவில் பயன்படுத்தப் படுகின்றன.இரும்பு துருப்பிடித்தலைத் துத்தநாக முலாம் பூசுவதன் மூலம் தடுக்கலாம். தானியங்கிகள் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்களில் நிக்கல் மற்றும் குரோமிய முலாம் பூசப்பட்டப் பொருள்கள் பயன்படுகின்றன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Dufour & 2006 IX-1.
  2. தமிழ்நாடு அரசு சமச்சீர் கல்வி புத்தகம், எட்டாம் வகுப்பு . பக்க எண் (200,201)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்பூச்சு&oldid=1975064" இலிருந்து மீள்விக்கப்பட்டது