மாதுரிமா துலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாதுரிமா துலி
பிறப்பு19 ஆகத்து 1986 (1986-08-19) (அகவை 37)[1]
இந்திய ஒன்றியம், ஒடிசா
பணி
  • Actress
  • model
செயற்பாட்டுக்
காலம்
2007 – தற்போது வரை
அறியப்படுவது
  • சந்திரகாந்தா
  • பேபி
  • நாச் பாலியே
  • பிக்பாஸ் 13
  • அவ்ரோத் தி சியிக் வித்தின்

மாதுரிமா துலி (Madhurima Tuli) என்பவர் ஓர் இந்திய நடிகை, வடிவழகி ஆவார், இவர் முதன்மையாக இந்தி மொழி திரைப்படங்கள், தொலைக்காட்சிகளில் பணியாற்றுகிறார்.[2][3] 2007 இல் கஸ்தூரி என்ற இந்தி தொலைக்காட்சித் தொடரில் நடிப்பதன் மூலம் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார்.

ஜீ தொலைக்காட்சியின் கும்கும் பாக்யா (2014) தொடரில் தனுஷ்ரீ மேத்தாவாகவும், கலர்ஸ் தொலைக்காட்சியில் சந்திரகாந்தா (2017–18) தொடரில் இளவரசி சந்திரகாந்தா சிங் பாத்திரத்தில் நடித்ததற்காக இவர் பரவலாக அறியப்படுகிறார்.[4] மேலும் ஃபியர் ஃபேக்டர்: கத்ரான் கே கிலாடி (2010), நாச் பாலியே (2019), பிக் பாஸ் (2019–20) போன்ற உண்மை நிலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

சிகரெட் கி தாரா (2012) படத்தின் மூலம் இந்தி திரைப்படத் துறையில் அறிமுகமானார். பின்னர் அவர் பேபி (2015), நாம் ஷபானா (2017), ஹமாரி ஆதுரி கஹானி (2017) போன்ற படங்களில் தோன்றினார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

துலி ஒடிசாவில் பிறந்தவர் என்றாலும் இவர், உத்தரகண்ட் மாநிலத்தின் டெராடூனைச் சேர்ந்தவர். கல்லூரியில் படித்தபோது மிஸ் உத்திராஞ்சல் போட்டியில் வென்றார்.[5] இவரது தந்தை டாடா ஸ்டீலில் பணிபுரிகிறார், இவரது தாயார் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணிபுரிகிறார், இவருக்கு ஒரு தம்பி இருக்கிறார்.[6]

தொழில்[தொகு]

தெலுங்கு திரைப்படமான சத்தா (2004) படத்தில் சாய் கிரானுக்கு ஜோடியாக துலி நடிகையாக அறிமுகமானார்.[7] பின்னர் மும்பைக்குச் சென்ற இவர் கிஷோர் நமித் கபூர் நடிப்புப் பள்ளியில் பயின்றார். பின்னர் கோத்ரேஜ், ஃபியாமா டி வில்ஸ், ஏர்டெல், லெனோவா, அல்ட்ராடெக் சிமென்ட், டோமினோ பிஸ்ஸா, கார்பன் செல்பேசிகள் போன்ற வணிகப் பொருட்களுக்கு விளம்பரம் செய்யும் ஒரு வடிவழகியாக பணியாற்றினார்.[8] 

2008 ஆம் ஆண்டு, ஹோமம் படத்தில் அழகான பெண்ணான சத்யாவாக இவர் ஒரு துணை வேடத்தில் நடித்தார்,[9][10][11] அது ஜே. டி. சக்ரவர்த்தி எழுதி இயக்கிய ஒரு இந்திய பரபரப்பூட்டும் படமாகும்.[12] மேலும் அது 2006 ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் திரைப்படமான மார்ட்டின் ஸ்கோர்செசி இயக்கிய தி டிபார்ட் படத்தினால் ஈரக்கபட்டு உருவாக்கப்பட்டது.[13]

டாஸ் (2009) படம் இவரது அடுத்த படமாகும். அதில் இவர் ஷெர்ரி என்ற பாத்திரத்தில் நடித்தார்,[14][15] மேலும் ஜீ தொலைக்காட்சியின் அமானுஷ்ய தொடரான ஸ்ரீ (2008-2009) இல் பிந்தியா என்ற சிறிய பாத்திரத்தில் நடித்தார். பிறகு , பிறகு, துலி ஸ்டார் ஒன்னின் தொலைக்காட்சி தொடரான ரங் படால்தி ஒதானி (2010 -2011) இல் நடிதார்.[16]

பிரசாந்த் நாராயணனுடன் [17][18] சிகரெட் கி தாரா (2012) படத்திலும் துலி முன்னணி பாத்திரத்தில் நடித்தார், மேலும் அனிக் சிங்கலின் ஆங்கில குறும்படமான லெட்டல் கமிஷன் (2012) இல் நடாஷா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.[19][20]

கே. சிவசூர்யா இயக்கிய மாரிச்சா (2012) படத்தில் நடித்தார்.[21] கன்னடம் மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்ட இப்படத்தில் துலிக்கு ஜோடியாக மிதுன் தேஜஸ்வி முக்கிய பாத்திரத்தில் நடித்தார்.[22]

இந்தி பரபரப்பூட்டும் 3டி படமான வார்னிங் (2013) படத்தில் துலி குஞ்சன் தத்தா என்ற பாத்திரத்தில் நடித்தார்.[23][24][25] ஹேமந்த் ஹெக்டே இயக்கி, சுபாஷ் காய் தயாரித்த நிம்பே ஹூலி படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படத்தில் துகி , கோமல் ஜா மற்றும் நிவேதிதா ஆகியோருடன் ஹெக்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.[26] 2015 ஆம் ஆண்டு பேபி படத்தில் அஞ்சலி சிங் ராஜ்புத் ( அக்‌ஷய் குமாரின் மனைவி) வேடத்திலும் நடித்தார்.[27] ஜீ டிவியின் உண்மை நிலை நிகழ்ச்சியான ஐ கேன் டூ தட் நிகழ்ச்சியில் துலி பங்கேற்றார். இவர் தி பிளாக் பிரின்ஸ் (2017) படத்தில் ஷபனா ஆஸ்மியின் (மகாராஜா துலீப் சிங்கின் தாய்) இளைம் வயது பாத்திரத்தில் நடித்தார், இது சீக்கிய பேரரசின் கடைசி மன்னர் மகாராஜா துலீப்பின் வரலாறை அடிப்படையாகக் கொண்டது.

பின்னர் கலர்ஸ் தொலைக்காட்சித் தொடரான சந்திரகாந்தாவில் இளவரசி சந்திரகாந்தாவாக நடித்தார்.[28]

திரைப்படவியல்[தொகு]

படம்[தொகு]

ஆண்டு படம் பாத்திரம் மொழி குறிப்பு
2008 ஹோமம் [29] சத்யா தெலுங்கு
எல்லாம் அவன் செயல் மாதுரிமா தமிழ்
பச்னா ஏ ஹசீனோ இந்தி
2009 டாஸ் ஷெர்ரி
2010 காலோ ருக்மிணி
2011 கியா கரீன் கியா நா கரைன் நிஷா
2012 லேதல் கமிசன் [30] நடாஷா ஆங்கிலம் குறும்படம்
மாரிச்சா கன்னடம்
தமிழ்
சிகரெட் கி தாரா ஜெசிகா இந்தி
2013 வார்னிங் குஞ்சன் தத்தா
2014 நிம்பே ஹுலி ஜனகி கன்னடம்
2015 பேபி [31] அஞ்சலி சிங் ராஜ்புத் இந்தி
ஹமாரி ஆதூரி கஹானி அவ்னி பிரசாத்
2017 நாம் ஷபானா அஞ்சலி சிங் ராஜ்புத்
பிளாக் பிரின்ஸ் மகாராணி ஜிந்தா ஆங்கிலம்
2020 பாஸ்தா [32] நிம்மி இந்தி குறும்படம்

தொலைக்காட்சி[தொகு]

ஆண்டு தலைப்பு பங்கு
2007-2008 கஸ்தூரி தனு சிங்கானியா
2008 ஸ்ரீ பிந்தியா
2009 ஜான்சி கி ராணி காயத்ரி
2010 ரங் படால்தி ஒதானி குஷி சர்மா
அச்ச காரணி: கத்ரோன் கே கிலாடி 3 டினோ மோரியாவுடன் போட்டியாளர் (2 வது இடம்)
2011 பரிச்சே - நயீ ஜிந்தகி கே சப்னோ கா ரிச்சா தக்ரால்
2014 கும்கும் பாக்யா தனுஷ்ரி (தனு) மேத்தா
2015 டாஃபா 420 இன்ஸ்பெக்டர் தன்யா சிவாலே
ஐ கேன் டூ தட் போட்டியாளர் (2 வது இடம்)
2016 24 (இந்திய தொலைக்காட்சி தொடர் பருவம் 2) டாக்டர் தேவயானி பௌமிக்
2017 சாவித்ரி தேவி காலேஜெ & ஆஸ்பிடல் நைனா
2017–2018 சந்திரகாந்தா - ஏக் மாயாவி பிரேம் காதா இளவரசி சந்திரகாந்தா
2018 26 ஜனவரி இன்சியா
2018–2019 கயாமத் கி ராத் சஞ்சனா
2019 நாச் பாலியே 9 விஷால் ஆதித்யா சிங்குடன் போட்டியாளர் (2 வது இடம்)
2019–2020 பிக் பாஸ் 13 போட்டியாளர் (நாள் 65 முதல் 112 வரை)
2020 இஷ்க் மே மர்ஜவன் 2 நேஹா
கபில் சர்மா நிகழ்ச்சி விருந்தினர்

வலை[தொகு]

ஆண்டு பெயர் பங்கு நடைமேடை
2020 அவ்ரோத்: தி சிக் வித்தின் [33] நம்ரதா ஜோஷி சோனி லிவ்

குறிப்புகள்[தொகு]

  1. "Bigg Boss 13 fame Madhurima Tuli rings in her birthday with family;in pics and videos". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
  2. Khan, Asad (15 December 2012). "She has been selected for role of heroine in Hindi film Baby opposite Akshay Kumar who is one of the biggest star of Bollywood. Madhurima Tuli is on the roll". பார்க்கப்பட்ட நாள் 3 November 2013.
  3. Dasgupta, Piyali (15 September 2011). "Anik Singal a US citizen is all set to shoot in India". Archived from the original on 4 November 2013. பார்க்கப்பட்ட நாள் 3 November 2013.
  4. "Kumkum Bhagya actress Madhurima Tuli raises the temperature with her bikini pic". India Today. 16 January 2017. http://indiatoday.intoday.in/story/kumkum-bhagya-madhurima-tuli-bikini-tanu-bali-lifetv/1/858746.html. 
  5. "Madhurima Tuli takes a leap, goes to big screen : Glossary". 31 August 2013. பார்க்கப்பட்ட நாள் 15 November 2013.
  6. "Meet the pretty face of horror!". Rediff.com. 17 December 2010. பார்க்கப்பட்ட நாள் 15 November 2013.
  7. "Saththaa (2004) - Movie Review, Story, Trailers, Videos, Photos, Wallpapers, Songs, Trivia, Movie Tickets". Gomolo.com. Archived from the original on 2 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 15 November 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. "Bigg Boss 13: From winning Miss Uttaranchal contest to being a part of Akshay Kumar's film; a look at Madhurima Tuli's lesser-known facts". The Times of India (in ஆங்கிலம்). 2019-12-04. பார்க்கப்பட்ட நாள் 2021-03-02.
  9. "Homam music launch - Telugu cinema - Jagapati Babu, JD Chakravarthy, Mamata Mohandas & Madhurima". Idlebrain.com. 3 August 2008. Archived from the original on 19 May 2014. பார்க்கப்பட்ட நாள் 15 November 2013.
  10. Date : 27 August 2008 22:00:00 GMT (27 August 2008). "'Homam' Review: Something New That Appeals A Few". Greatandhra.com. Archived from the original on 2 January 2014. பார்க்கப்பட்ட நாள் 15 November 2013.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  11. "Homam - Review - Oneindia Entertainment". Entertainment.oneindia.in. 29 August 2008. Archived from the original on 2 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 15 November 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  12. "Homam | Sai and Shujath talk Cinema". Saiandshujathtalkcinema.wordpress.com. 5 September 2008. பார்க்கப்பட்ட நாள் 15 November 2013.
  13. "Interview with JD on Homam". Totaltollywood.com. 27 August 2008. Archived from the original on 8 September 2008. பார்க்கப்பட்ட நாள் 14 November 2013.
  14. iBaburao. "Toss 2009 Hindi Movie". Ibaburao.com. Archived from the original on 15 November 2013. பார்க்கப்பட்ட நாள் 15 November 2013.
  15. Aakash (28 August 2009). "Toss (2009) - Movie Review, Story, Trailers, Videos, Photos, Wallpapers, Songs, Trivia, Movie Tickets". Gomolo.com. Archived from the original on 17 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 15 November 2013.
  16. "Madhurima Tuli enters in Rang Badalti Odhani on Star One | News". Metromasti.com. 20 June 2011. Archived from the original on 10 ஜூன் 2015. பார்க்கப்பட்ட நாள் 15 November 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  17. "'Madhuri is a complete actor': Madhurima Tuli - Daily The Shadow Newspaper Jammu Kashmir". Theshadow.in. 16 December 2012. Archived from the original on 17 May 2014. பார்க்கப்பட்ட நாள் 15 November 2013.
  18. Hyderabad Deccan News. "Movie Review - Cigarette Ki Tarah". Newswala.com. Archived from the original on 18 May 2014. பார்க்கப்பட்ட நாள் 15 November 2013.
  19. "Lethal Commission".
  20. "Lethal Commission (full movie official) - Free Movie Videos, Movie Trailers, Film Trailers, Interviews and Gossip". Nme.Com. பார்க்கப்பட்ட நாள் 15 November 2013.
  21. "Vivek in Kannada And Tamil 'Maaricha'". Supergoodmovies.com. 26 November 2011. Archived from the original on 14 October 2013. பார்க்கப்பட்ட நாள் 15 November 2013.
  22. Y Maheswara Reddy (29 November 2011). "Maaricha: A thriller on honeymoon". பார்க்கப்பட்ட நாள் 10 November 2013.
  23. "Warning 3D Movie Review". Koimoi.com. 27 September 2013. பார்க்கப்பட்ட நாள் 15 November 2013.
  24. "A film that's all at sea". The Hindu. 29 September 2013. http://www.thehindu.com/todays-paper/tp-miscellaneous/tp-others/a-film-thats-all-at-sea/article5180990.ece. 
  25. "Warning : Danger ahead!". Starblockbuster. 28 September 2013. Archived from the original on 21 May 2014. பார்க்கப்பட்ட நாள் 15 November 2013.
  26. Sharanya CR (29 January 2013). "Nimbe Huli audio launched". Archived from the original on 10 November 2013. பார்க்கப்பட்ட நாள் 10 November 2013.
  27. Bhattacharya, Roshmila (8 September 2014). "Madhurima Tuli to play Akshay Kumar's wife in Baby". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 30 July 2016.
  28. "Madhurima Tuli is Ekta Kapoor's Chandrakanta." (in en-US). DNA India. 2 April 2017. http://www.dnaindia.com/entertainment/report-madhurima-tuli-is-ekta-kapoor-s-chandrakanta-2378077. 
  29. "Homam - It's All About the Telugu Movie Review". Tollywood.AllIndianSite.com. 28 August 2008. Archived from the original on 9 February 2014. பார்க்கப்பட்ட நாள் 15 November 2013.
  30. "Want to get famous? STRIP!". 17 February 2012. https://www.rediff.com/movies/slide-show/slide-show-1-want-to-get-famous-strip/20120217.htm#8. 
  31. "Baby Movie at bollywoodhungama".
  32. Hindi, Dainik Bhaskar (18 September 2020). "मधुरिमा तुली, शरद मल्होत्रा शॉर्ट फिल्म पास्ता में आएंगे नजर". https://www.bhaskarhindi.com/entertainment/news/madhurima-tuli-sharad-malhotra-to-appear-in-short-film-pasta-164220. 
  33. "Avrodh: Who plays who in the web series on 2016 surgical strike". The Indian Express (in ஆங்கிலம்). 2020-07-28. பார்க்கப்பட்ட நாள் 2021-06-07.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதுரிமா_துலி&oldid=3946603" இலிருந்து மீள்விக்கப்பட்டது