மாங்கனீசு(III) பாசுபேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாங்கனீசு(III) பாசுபேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
  • மாங்கனிக்கு பாசுபேட்டு
  • மாங்கனீசு ஒற்றைபாசுபேட்டு
இனங்காட்டிகள்
10236-39-2
InChI
  • InChI=1S/Mn.H3O4P/c;1-5(2,3)4/h;(H3,1,2,3,4)/q+3;/p-3
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 14389607
  • [O-]P(=O)([O-])[O-].[Mn+3]
பண்புகள்
MnPO4
வாய்ப்பாட்டு எடை 149.91 கி/மோல் (நீரிலி)
167.92 கி/மோல் (ஒற்றைநீரேற்று)
தோற்றம் ஊதா (நீரிலி)
வெளிர் பச்சை (ஒற்றைநீரேற்று)
அடர்த்தி 3.4 கி/செ.மீ3 (நீரிலி)
3.16 கி/செ.மீ3 (ஒற்றைநீரேற்று)
உருகுநிலை 400 °C (752 °F; 673 K)[1] (சிதையும், நீரிலி)
கரையாது[1]
கரைதிறன் அசிட்டோநைட்ரைல், எத்தனால், மற்றும் அசிட்டோன் கரைப்பான்களில் கரையாது[1]
கட்டமைப்பு
படிக அமைப்பு செஞ்சாய்சதுரம்
புறவெளித் தொகுதி Pmna
Lattice constant a = 9.65 Å, b = 5.91 Å, c = 4.78 Å
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மாங்கனீசு(III) பாசுபேட்டு (Manganese(III) phosphate) என்பது MnPO4 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இது ஒரு நீருறிஞ்சும் சேர்மமாகும். ஊதா நிறத்தில் திண்மநிலையில் காணப்படுகிறது. ஈரப்பதத்தை உறிஞ்சி வெளிறிய-பச்சை நிற ஒற்றைநீரேற்றாக உருவாகிறது.[1] இருப்பினும் நீரிலி மற்றும் ஒற்றை நீரேற்று வடிவங்கள் ஒவ்வொன்றும் தனித்தனி தயாரிப்பு முறைகளால் தயாரிக்கப்படுகின்றன.

தயாரிப்பு[தொகு]

மாங்கனீசு(II) சல்பேட்டு போன்ற Mn(II) உப்புடன் பாசுபாரிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்து தொடர்ந்து நைட்ரிக் அமிலத்தைப் பயன்படுத்தி ஆக்சிசனேற்றம் செய்து மாங்கனீசு பாசுபேட்டு ஒற்றைநீரேற்று தயாரிக்கப்படுகிறது. பெர்மாங்கனேட்டு, Mn(II) உப்பு, மற்றும் பாசுபாரிக் அமிலம் ஆகியவற்றைச் சேர்த்து வினைபுரியச் செய்தும் மாங்கனீசு பாசுபேட்டு ஒற்றைநீரேற்று தயாரிக்கப்படுகிறது. ஒரே தனிமத்தைக் கொண்ட ஆனால் வெவ்வேறு ஆக்சிசனேற்ற எண்களைக் கொண்ட இரண்டு வினைகள், இடைநிலை ஆக்சிசனேற்ற எண்ணைக் கொண்ட சேர்மம் உருவாக்கும் வினைக்கு இது எடுத்துக்காடாகும்:[2][3][4]

MnO4 + 4 Mn2+ + 10 PO43– + 8 H+ → 5 [Mn(PO4)2]3– + 4 H2O

வினையில் உருவான இருபாசுபோமாங்கனேட்டு(III) அயனி மெதுவாக ஒற்றைநீரேற்றாக மாறுகிறது. இந்த ஒற்றைநீரேற்றை சூடாக்குவது நீரற்ற வடிவத்தை அளிக்காது. மாறாக, இது 420 °செல்சியசு வெப்பநிலையில் மாங்கனீசு(II) பைரோபாசுபேட்டாக (Mn2P2O7) சிதைவடைகிறது.:[3]

4 MnPO4·H2O → 2 Mn2P2O7 + 4 H2O + O2

இலித்தியம் மாங்கனீசு(II) பாசுபேட்டை மந்த வாயுச் சூழலில் நைட்ரோனியம் டெட்ராபுளோரோபோரேட்டுடன் சேர்த்து ஆக்சிசனேற்ற வினைக்கு உட்படுத்தினால் நீரற்ற வடிவத்தை உருவாக்க இயலும்.[1]

நீரற்ற வடிவம் ஈரப்பதத்திற்கு உணர்திறன் கொண்டதாகும். ஈரப்பதம் இல்லாத நிலையில், இது 400 °செல்சியசு வெப்பநிலையில் சிதைவடைகிறது. ஆனால் ஈரப்பதம் இருக்கும் போது, மெதுவாக உருவமற்ற நிலைக்கு மாறி 250 °செல்சியசு வெப்பநிலையில் சிதைகிறது.[1]

கட்டமைப்பு[தொகு]

இயற்கையாகத் தோன்றும் பர்பூரைட்டு என்ற கனிமம், MnPO4

நீரற்ற வடிவம் ஓர் ஆர்த்தோசிலிக்கேட்டு வகையான ஓலிவைன் என்ற கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இயற்கையாகவே கனிம பர்புரைட்டு என்ற கனிமமாகத் தோன்றுகிறது. ஒற்றைநீரேற்று மக்னீசியம் சல்பேட்டு ஒற்றைநீரேற்றைப் போலவே ஓர் ஒற்றைச்சரிவச்சு படிக அமைப்பைக் கொண்டுள்ளது. ஆனால் இயான்-டெல்லர் விளைவு காரணமாக எண்முக மாங்கனீசு மையத்தில் உருக்குலைவு காணப்படுகிறது. இயற்கையாகவே ஒற்றைநீரேற்று வடிவம் செர்ராபிராங்கைட்டு என்ற கனிமமாகத் தோன்றுகிறது.[5][6][7]

a = 6.912 Å, b = 7.470 Å, β = 112.3°, மற்றும் Z = 4 என்ற செல் அளவுருக்களுடன் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட சிதைந்த மறுபக்க -[Mn(PO4)4(H2O)2] எண்முகங்களை ஒற்றைநீரேற்று வடிவம் கொண்டுள்ளது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Yiqing Huang; Jin Fang; Fredrick Omenya; Martin O'Shea; Natasha A. Chernova; Ruibo Zhang; Qi Wang; Nicholas F. Quackenbush et al. (2014). "Understanding the stability of MnPO4" (in en). Journal of Materials Chemistry A 2 (32): 12827–12834. doi:10.1039/C4TA00434E. 
  2. Eiichi Narita; Taijiro Okabe (1982). "Inhibition of catalytic decomposition of acid permanganate solutions" (in en). Industrial & Engineering Chemistry Product Research and Development 21 (4): 662–666. doi:10.1021/i300008a030. 
  3. 3.0 3.1 Narita Eiichi; Okabe Taijiro (1983). "The Thermal Decomposition of Manganese(III) Phosphate Monohydrate" (in en). Bulletin of the Chemical Society of Japan 56 (9): 2841–2842. doi:10.1246/bcsj.56.2841. https://archive.org/details/sim_bulletin-of-the-chemical-society-of-japan_1983-09_56_9/page/2841. 
  4. Slobotka Aleksovska; Vladimir M. Petruševski; Bojan Šoptrajanov (1997). "Infrared spectra of the monohydrates of manganese(III) phosphate and manganese(III) arsenate: relation to the compounds of the kieserite family" (in en). Journal of Molecular Structure 408-409: 413–416. doi:10.1016/S0022-2860(96)09720-7. 
  5. 5.0 5.1 Philip Lightfoot; Anthony K. Cheetham; Arthur W. Sleight (1987). "Structure of manganese(3+) phosphate monohydrate by synchrotron x-ray powder diffraction" (in en). Inorganic Chemistry 26 (21): 3544–3547. doi:10.1021/ic00268a025. 
  6. "Purpurite". mindat.org. mindat.org. பார்க்கப்பட்ட நாள் 5 September 2023.
  7. "Serrabrancaite". mindat.org. mindat.org. பார்க்கப்பட்ட நாள் 5 September 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாங்கனீசு(III)_பாசுபேட்டு&oldid=3962987" இலிருந்து மீள்விக்கப்பட்டது