மலாக்கா நுழைவாயில்

ஆள்கூறுகள்: 2°10′44″N 102°15′21″E / 2.1790°N 102.2557°E / 2.1790; 102.2557
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலாக்கா நுழைவாயில்: மலாக்கா கடற்கரையில் உருவாக்கப்படும் செயற்கைத் தீவுகள்

மலாக்கா நுழைவாயில் (மலாய்: Gerbang Melaka; ஆங்கிலம்: Melaka Gateway; சீன மொழி: 马六甲皇京港; பின்யின்: Mǎliùjiǎ huáng jīng gǎng) என்பது மலேசியா, மலாக்கா மத்திய மலாக்கா மாவட்டம், மலாக்கா நீரிணையின் கரையோரத்தில் உருவாக்கப்படும் செயற்கை தீவுகளின் பெயராகும்.

இந்தச் செயற்கைத் தீவுகள் 7 பிப்ரவரி 2014 அன்று மலேசியப் பிரதமர், டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் அவர்களால் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது.

மலாக்கா முதலமைச்சர் இட்ரிஸ் அருண் அவர்களும் அந்தத் தொடக்க விழாவில் கலந்து கொண்டார். 2018-இல் திறக்கப்பட்ட இந்தச் செயற்கைத் தீவுகளின் கட்டுமானம் 2025-இல் முழுமையாக நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[1]

பொது[தொகு]

நவம்பர் 2020-இல், இந்தத் திட்டம் மலாக்கா மாநில அரசால் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.[2][3] பின்னர், அப்போதைய மலாக்கா முதலமைச்சர் சுலைமான் அலி, மலாக்காவின் செயற்கைத் தீவுத் திட்டம் கைவிடப்படாது என்று கூறினார்.

புதிய மேம்பாட்டரால் அத்திட்டம் மேற்கொள்ளப்படும். என்றும்; அதே வேளையில் சில தொழில்நுட்பச் சிக்கல்கள் சரி செய்யப்பட்டும் என்றும் அறிவித்தார்.[4][5][6] கேஏஜே மேம்பாட்டு நிறுவனம் சீன மொழி: 凯杰发展有限公司; பின்யின்: Kǎi jié fāzhǎn yǒuxiàn gōngsī) தற்போது, இந்தத் திட்டத்தின் திட்டத்தின் முதன்மை குத்தகையாளராகச் செயல்பட்டு வருகிறது.[7]

23 பிப்ரவரி 2022 அன்று மலாக்கா மாநில அரசாங்கத்திடம் இருந்து ஒப்புதல் பெற்ற பிறகு மீண்டும் அந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.[8] 2025-ஆம் ஆண்டு இறுதியில் இந்தத் திட்டம் நிறைவுபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "RM40b Malacca Gateway to open doors in 2018". Thesundaily.my. பார்க்கப்பட்ட நாள் 9 November 2014.
  2. Hazlin Hassan (2020-11-20). "Controversial Melaka port project scrapped by state govt". Straits Times. https://www.straitstimes.com/asia/se-asia/controversial-melaka-port-project-scrapped-by-state-govt. 
  3. Lee Hong Liang (2020-11-23). "Malaysia scraps mega port project off Melaka". Seatrade Maritime News. https://www.seatrade-maritime.com/ports-logistics/malaysia-scraps-mega-port-project-melaka. 
  4. Sebastian Strangio (2020-11-19). "In Malaysia, a Gargantuan Chinese-Backed Development Bites the Dust". The Diplomat. https://thediplomat.com/2020/11/in-malaysia-a-gargantuan-chinese-backed-development-bites-the-dust/. 
  5. P PREM KUMAR (2020-12-03). "Canceled $10.5bn Malaysia port project plays down China role". Nikkei Asia. https://asia.nikkei.com/Business/Transportation/Canceled-10.5bn-Malaysia-port-project-plays-down-China-role. 
  6. "Melaka cruise terminal project to be revived, says Transport Minister". The Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-08-11.
  7. "Melaka Gateway secures 5 foreign investors". www.thesundaily.my (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-08-11.
  8. "KAJ DEVELOPMENT RESUMES MELAKA GATEWAY PROJECT". BERNAMA (in ஆங்கிலம்). 2022-08-03. பார்க்கப்பட்ட நாள் 2023-08-11.
  9. Ignatius, Cynthia (2023-06-20). "Dato' Mircle Yap Joins KAJ Development As Non-Executive Director - BusinessToday". Business Today (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-08-11.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலாக்கா_நுழைவாயில்&oldid=3910179" இலிருந்து மீள்விக்கப்பட்டது