மலாக்கா தீவு

ஆள்கூறுகள்: 2°10′50″N 102°15′5″E / 2.18056°N 102.25139°E / 2.18056; 102.25139
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலாக்கா தீவு
உள்ளூர் பெயர்:
Malacca Island
மலாக்கா தீவு is located in மலேசியா
மலாக்கா தீவு
மலாக்கா தீவு
      மலாக்கா தீவு
      மலேசியா
புவியியல்
அமைவிடம்மலாக்கா நீரிணை
ஆள்கூறுகள்2°10′50″N 102°15′5″E / 2.18056°N 102.25139°E / 2.18056; 102.25139
தீவுக்கூட்டம்மலாக்கா; தீபகற்ப மலேசியா; மலேசியா
பரப்பளவு1 km2 (0.39 sq mi)

மலாக்கா தீவு (மலாய்: Pulau Melaka; ஆங்கிலம்: Malacca Island) என்பது மலேசியா, மலாக்கா மாநிலத்தில், மலாக்கா நீரிணையில் அமைந்து உள்ள ஒரு தீவு. இது மனிதர்களால் உருவாக்கப்பட்ட தீவாகும்.

மலேசியாவின் தாலாம் நிறுவனத்தின் (Talam Corporation Berhad) துணை நிறுவனமான புலாவ் கெம்பார் (Pulau Kembar Sdn Bhd.) நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட மாநகர் இருதீவுகள் மையம் (Twin Island City Centre) எனும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

பொது[தொகு]

இந்த நீர்முனை மேம்பாட்டுத் திட்டமானது இரண்டு தீவுகளை மீட்டு எடுப்பதை உள்ளடக்கியது. மலாக்கா நகரின் கடற்கரையில் இருந்து சுமார் 0.5 கி.மீ. தொலைவில் 40 எக்டேர் மற்றும் 50 எக்டேர் பரப்பளவில் உள்ளது. 2002-ஆம் ஆண்டில் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றன.[1][2]

தீவின் தெற்கு கரையில் ஒரு பள்ளிவாசல்; கலங்கரை விளக்கம் போன்ற கோபுரத்துடன், கடலுக்கு மேலே நெடுவரிசையில் கட்டப்பட்டு உள்ளது. இதற்கு மலாக்கா நீரிணை பள்ளிவாசல் (Malacca Straits Mosque) என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Melaka Island
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=மலாக்கா_தீவு&oldid=3909862" இலிருந்து மீள்விக்கப்பட்டது