மனைவியை சுமக்கும் போட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மனைவியை சுமத்தல் ( Wife carrying ) என்பது ஒரு வகை போட்டியாகும். இதில் ஆண் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தனது பெண் துணையை சுமந்து கொண்டு பந்தயத்தில் ஓடுகிறார்கள். பெண்ணை தடைகள் நிறைந்த பாதையில் ஆண்கள் பெண்களை அதிவேக நேரத்தில் கொண்டு செல்வதே விளையாட்டின் குறிக்கோள். இந்த விளையாட்டு முதலில் பின்லாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.[1]

பல வகையான சுமந்து செல்லும் நடைமுறைகளும் இதில் பின்பற்றப்படும்: பாரம்பரியமாக முதுகில் சுமந்து செல்லுதல், தோள்பட்டைக்கு மேல் சுமந்து செல்லுதல் தலைகீழாக தனது மனைவி அல்லது இணையை தலைகீழாக தனது முதுகில் செல்லுதல் போன்றவை.

ஆத்திரேலியா, அமெரிக்கா, ஆங்காங், இந்தியா, செருமனி, இங்கிலாந்து மற்றும் பின்லாந்து மற்றும் அருகிலுள்ள சுவீடன், எசுத்தோனியா மற்றும் லாத்வியா உட்பட உலகின் பிற பகுதிகளில் மனைவியை சுமக்கும் போட்டிகள் நடந்துள்ளன. மேலும் இந்த விளையாட்டு கின்னஸ் உலக சாதனைகளிலும் ஒரு வகையைப் பெற்றுள்ளது.[2] [3] [4]

விதிகள்[தொகு]

ஆரம்பத்தில் அசல் பாதையானது வேலிகள் மற்றும் ஓடைகள் கொண்ட கரடுமுரடான, பாறை நிலப்பரப்பாக இருந்தது. ஆனால் அது நவீன நிலைமைகளுக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டுள்ளது. இப்போது முழு பாறைகள், வேலிகள் மற்றும் தண்ணீரால் நிரப்பப்பட்ட குளம் போன்ற சில வகையான பகுதிகளுக்கு பதிலாக மணல் உள்ளது. இவை சர்வதேச மனைவியை சுமக்கும் போட்டி விதிகள் குழுவால் அமைக்கப்பட்ட பின்வரும் விதிகள்:

  • மனைவியை சுமக்கும் போது வேடிக்கையாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியமான விதியாகும்
  • அதிகாரப்பூர்வ பாதையின் நீளம் 253.5 மீட்டர்கள் (832 அடி) கொண்டதாக இருக்கும்.
  • பாதையில் இரண்டு உலர் தடைகள் மற்றும் ஒரு மீட்டர் ஆழத்தில் தண்ணீர் தடை இருக்கும்.
  • சுமக்கப்படும் மனைவி உங்களுடையவராக இருக்கலாம், அல்லது அண்டை வீட்டாராகவும் இருக்கலாம் அல்லது நீங்கள் அவரை வெளியிலும் கண்டுபிடித்திருக்கலாம்; இருப்பினும், அவருக்கு 17 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.
  • மனைவி என்பது பாலினமற்ற சொல்லாகும். இது சுமந்து செல்லும் நபரின் மீது பயன்படுத்தப்படும் (பாலின விதி பிப்ரவரி 2023 இல் மாற்றப்பட்டது)
  • சுமந்து செல்லும் மனைவியின் குறைந்தபட்ச எடை 49 கிலோகிராம் (108 எல்பி) என இருக்க வேண்டும். அவரது எடை 49 கிலோவுக்குக் குறைவாக இருந்தால், தேவைப்படும் கூடுதல் சுமையை சுமக்கக் கூடுதல் எடையைக் கொண்ட ஒரு பை அவரது முதுகில் வைக்கப்படும்.
  • பங்கேற்பாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
  • தூக்குபவர் அணியின் பட்டை மற்றும் சுமந்து செல்பவர்கள் அணியும் தலைகவசம் ஆகியவை மட்டுமே அனுமதிக்கப்படும் உபகரணங்கள்.
  • போட்டியாளர்கள் ஒரு நேரத்தில் இரண்டு இணைகளை பந்தயத்தில் ஓடவிடுவார்கள். எனவே ஒவ்வொரு ஓட்டமும் ஒரு போட்டியாகும்.
  • ஒவ்வொரு போட்டியாளரும் அவருடைய/அவளுடைய பாதுகாப்பை கவனித்துக்கொள்ளவேண்டும். மேலும், தேவைப்பட்டால், காப்பீடு செய்து கொள்ளலாம்.
  • மேலும், மிகவும் பொழுதுபோக்கு இணைக்கு சிறந்த ஆடை, மற்றும் வலுவான சுமப்பவர் என்ற சிறப்பு பரிசு வழங்கப்படும்.

அனைத்து போட்டிகளுக்கும் சர்வதேச விதிகள் அடிப்படையாக இருந்தாலும், ஒவ்வொரு போட்டிக்கும் விதிகள் மற்றும் பரிசுகள் மாறுபடும்.

மனைவியை சுமக்கும் உலக வாகையாளர் போட்டிகள் 1992 முதல் ஆண்டுதோறும் பின்லாந்தில் (இங்கு பரிசு என்பது பீரில் மனைவியின் எடைக்கு ஈடாக பியர் வழங்கப்படுகிறது ). [5] [6]

இந்தியா[தொகு]

சுற்றுச்சூழல் விழிப்புணர்வை உருவாக்குவதற்கான ஒரு சமூகமான ஈகோரன் இன்டியா என்ற அமைப்பு, 1 ஜனவரி 2011 அன்று இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள, திருவனந்தபுரத்தில் மனைவியை சுமக்கும் போட்டியை ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்வு “பார்யாசமேதம்” என்று உள்ளூர் மொழியான மலையாளத்தில் தோராயமாக 'உங்கள் மனைவியுடன்' என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த சங்கம் திட்டமிட்டுள்ளது. ஆசியாவில் மனைவியை சுமப்பது “மட்டுகினினா” என்றும் அழைக்கப்படுகிறது.

தம் லெகா கே ஐசா என்ற பாலிவுட் திரைப்படத்தில் மனைவியை சுமக்கும் பந்தயம் இடம் பெற்றிருந்தது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. English, Nick (16 November 2016). "Wife Carrying Is the Latest Strength Sport for Couples". BarBend. பார்க்கப்பட்ட நாள் 31 May 2017.
  2. "The Strange Sport of Wife Carrying | bettor.com". Archived from the original on February 19, 2011.
  3. "Wife Carrying World Championship".
  4. "Maine couple wins North American Wife Carrying Championship at Sunday River Ski Resort".
  5. Jurvetson, Steve (2004-09-29), World "Wife Carry" Championships, பார்க்கப்பட்ட நாள் 2021-03-17
  6. "Plantation couple win beer, silver medal at Wife Carrying World Championships".

வெளி இணைப்புகள்[தொகு]