மதீச பத்திரன

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதீச பத்திரன
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு18 திசம்பர் 2002 (2002-12-18) (அகவை 21)
கண்டி, இலங்கை
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை விரைவு வீச்சு
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே இ20ப (தொப்பி 96)ஆகத்து 27 2022 எ. ஆப்கானித்தான்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2022–சென்னை சூப்பர் கிங்ஸ்
2022Nondescripts
2022–பெங்கால் டைகர்ஸ்
2023–டெசர்ட் வைப்பர்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ப.அ.து இ.20
ஆட்டங்கள் 3 19
ஓட்டங்கள் 8 9
மட்டையாட்ட சராசரி 8.00 4.50
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 8* 5
வீசிய பந்துகள் 121 367
வீழ்த்தல்கள் 1 20
பந்துவீச்சு சராசரி 125.00 23.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a n/a
சிறந்த பந்துவீச்சு 1/41 3/15
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 6/–
மூலம்: Cricinfo, 27 August 2022

மதீச பத்திரன (Matheesha Pathirana பிறப்பு: டிசம்பர் 18, 2002) ஓர் இலங்கைத் துடுப்பாட்டக்காரர்.[1] லசித் மலிங்க போன்று இவரது பந்துவீச்சு இருப்பதனால் இவர் குழந்தை மலிங்க என்று குறிப்பிடப்படுகிறார். [2] [3] ஆகத்து 2021 இல், இவர் 2021 SLC இன்விடேஷனல் இ20 தொடரில் SLC கிரேஸ் அணியில் இடம் பெற்றார். [4] ஆகத்து 22 , 2021 இல் இருபது 20 போட்டியில் அறிமுகமானார்.[5] பின்னர் 2020 ஆம் ஆண்டில் 19 வயதுக்குட்பட்ட துடுப்பாட்ட உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணியில் இடம் பெற்றார். [6] சனவரி 2022 இல்,மேற்கிந்தியத் தீவுகளில் 2022 ஐசிசி 19 வயதுக்குட்பட்ட துடுப்பாட்ட உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணியில் இடம் பெற்றார். [7] 2023 இந்தியன் பிரீமியர் லீக் கிண்ணம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரராக இருந்தார். அந்தத் தொடரில் 19 இலக்குகளைக் கைப்பற்றினார். ஐபிஎல் கோப்பையை வென்ற இளம் வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை பெற்றார்.

கிளைத் துடுப்பாட்டப் போட்டிகள்[தொகு]

ஏப்ரல் 2022 இல், 2022 இந்தியன் பிரீமியர் லீக்கில் ஆடம் மில்னேவுக்கு மாற்று வீரராக, சென்னை சூப்பர் கிங்ஸால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். [8] குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமாகி [9] [10] முதல் பந்திலேயே, சுப்மன் கில்லின் இலக்கைக் கைப்பற்றிய முதல் இலங்கை மற்றும் சர்வதேச அளவில் ஒன்பதாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். [11] [12] [13] சூலை 2022 இல், லங்கா பிரீமியர் லீக்கின் மூன்றாவது பதிப்பிற்காக கண்டி பால்கன்சுவால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். [14]

சர்வதேச போட்டிகள்[தொகு]

மே 2022 இல், ஆத்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கான இலங்கையின் பன்னாட்டு இருபது20 அணியில் இடம்பிடித்தார். [15] இருப்பினும், எந்தப் போட்டியிலும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை, பின்னர் காயம் காரணமாக அந்தத் தொடரில் இருந்து விலகினார். [16] [17] ஆகத்து 2022 இல், 2022 ஆசியக் கின்னத்திற்கான இலங்கையின் பன்னாட்டு இருபது20 அணியில் இடம்பெற்றார். [18] ஆகத்து 27, 2022 அன்று ஆப்கானித்தானுக்கு எதிராக அறிமுகமானார். [19]

மார்ச் 2023 இல், நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்கான ஒருநாள் மற்றும் பன்னாட்டு இருபது20 அணியில் இடம்பெற்றார். [20]

சான்றுகள்[தொகு]

  1. "Matheesha Pathirana". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 22 August 2021.
  2. "WATCH:'Baby Malinga' Matheesha Pathirana breaks camera lens with explosive bouncer during CSK net session". TimesNow (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 20 May 2022.
  3. "'Big shoes to fill': Next Malinga lights up IPL - and teenage star could take on Aussies next month". Fox Sports (in ஆங்கிலம்). 16 May 2022. பார்க்கப்பட்ட நாள் 20 May 2022.
  4. "Sri Lanka Cricket announce Invitational T20 squads and schedule". The Papare. 4 August 2021. பார்க்கப்பட்ட நாள் 9 August 2021.
  5. "11th Match, Pallekele, Aug 22 2021, SLC Invitational T20 League". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 22 August 2021.
  6. "Sri Lanka squad for the ICC U19 World Cup 2020 announced". The Papare. 6 January 2020. பார்க்கப்பட்ட நாள் 6 January 2020.
  7. "Sri Lanka U19 Team to the World Cup". Cricket Sri Lanka. 2 January 2022. பார்க்கப்பட்ட நாள் 4 January 2022.
  8. "CSK sign up Matheesha Pathirana as replacement for Adam Milne". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 April 2022.
  9. "'Next Malinga' in IPL 2022: Know About Matheesha Pathirana Who Dismissed Gill, Pandya on IPL Debut - WATCH". www.news18.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 20 May 2022.
  10. "Shami and Saha lead the way as Titans ensure top-two finish". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 2022-06-12.
  11. "MS Dhoni: Matheesha Pathirana 'is an excellent death bowler'". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 2022-06-12.
  12. Gautam, Sonanchal (2022-05-15). "CSK vs GT: Watch – Matheesha Pathirana Bags His Maiden IPL Wicket On 1st Ball By Dismissing Shubman Gill" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-12.
  13. "'We have got a junior Malinga': CSK debutant breaks the internet after picking maiden IPL wicket with slingy action". Hindustan Times (in ஆங்கிலம்). 2022-05-15. பார்க்கப்பட்ட நாள் 2022-06-12.
  14. "LPL 2022 draft: Kandy Falcons sign Hasaranga; Rajapaksa to turn out for Dambulla Giants". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 July 2022.
  15. "Sri Lanka call up Matheesha Pathirana, Nuwanidu Fernando for T20I series against Australia". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 1 June 2022.
  16. M, Suryesh. "Sri Lanka's Kasun Rajitha and Matheesha Pathirana ruled out of 3rd T20I vs Australia; replacements named". www.sportskeeda.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-12.
  17. "Injury rules Kasun Rajitha and Matheesha Pathirana out of final T20I vs Australia". Island Cricket (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2022-06-11. பார்க்கப்பட்ட நாள் 2022-06-12.
  18. "Sri Lanka squad for Asia Cup 2022". Sri Lanka Cricket. பார்க்கப்பட்ட நாள் 20 August 2022.
  19. "Group B (N), Dubai (DSC), August 27, 2022, Asia Cup". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 August 2022.
  20. "Sri Lanka name squad for limited-overs leg of New Zealand tour". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 22 March 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதீச_பத்திரன&oldid=3745319" இலிருந்து மீள்விக்கப்பட்டது