மகாநதி சங்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாநதி சங்கர்
பிறப்பு16 சனவரி 1955 (1955-01-16) (அகவை 69)
இந்தியா இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1994–தற்போது

மகாநதி சங்கர் என்பவர் ஒரு இந்திய நாடக மற்றும் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ் மொழி திரைப்பபடங்களில் துணை நடிகராகவும் எதிர்மறை வேடங்களிலும் தோன்றியுள்ளார். மகாநதி (1994), பாட்ஷா (1995), ரட்சகன் (1997), அமர்க்களம் (1999) மற்றும் தீனா (2001) உள்ளிட்ட படங்களில் இவருடைய நடிப்பு கவனிக்கப்பட்டது. மகாநதி படத்தில் அறிமுகமானதால் படத்தின் பெயரை ஒரு முன்னொட்டாகப் பயன்படுத்தினார்.[1][2]

தொழில்[தொகு]

சங்கர் மகாநதியில் (1994) நடிகராக அறிமுகமானார்.[3] பிறகு, சங்கர் 1990, 2000 மற்றும் 2010 களில் பல தமிழ் படங்களில் துணை நடிகராக பணியாற்றியுள்ளார்., பெரும்பாலும் ஒரு வில்லனாக அல்லது நகைச்சுவை வில்லனாக நடித்துள்ளார்.[4][5]

தீனா திரைப்படத்தில் நடிகர் அஜித்குமாரை தல என இவர் அழைக்கும் வசனம், பிற்காலத்தில் அஜித்தின் ரசிகர்கள், திரைதுறையினர் என அனைவரும் அழைக்கும் அளவிற்கு புகழ்பெற்றது.[6]

திரைப்பட வரலாறு[தொகு]

தொலைக்காட்சி[தொகு]

ஆண்டு தலைப்பு பங்கு மொழி தெலைக்காட்சி குறிப்புக்கள்
2010-2015 நாதஸ்வரம் நெல்லையாண்டவர் தமிழ் சன் டிவி
2018 மாயா பசுபதி (சலப்பா) தமிழ் சன் டிவி
2018 நந்தினி சத்யநாராயணன் தமிழ் சன் டிவி சண்முகராஜனின் மாற்றீடு

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாநதி_சங்கர்&oldid=3461519" இலிருந்து மீள்விக்கப்பட்டது