ஜூலியும் 4 பேரும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜூலியும் 4 பேரும்
இயக்கம்ஆர். வி. சதீஷ்
இசைரகு ஷ்ரவண் குமார்
நடிப்புஅமுதவாணன்
ஜியார்ஜ் விஜய்
ஆர். வி. சதீஷ்
யோகானந்த்
ஆல்யா மானசா
ஒளிப்பதிவுகே. ஏ. ரோவின் பாஸ்கர்
படத்தொகுப்புஷரன் சண்முகம்
வி. ஏ. மழை தாசன்
கலையகம்காவ்யா சினிமாஸ்
ரீச் மீடியா சொல்யூசன்ஸ்
வெளியீடு7 ஏப்ரல் 2017 (2017-04-07)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஜூலியும் 4 பேரும் (Julieum 4 Perum) இது 2017 இல் வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். திரைப்படத்தை ஆர். வி. சதீஷ் இயக்கியுள்ளார். அமுதவாணன், ஜார்ஜ் விஜய், ஆர். வி. சதீஷ், யோகானந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஆல்யா மானசாவும் நடித்துள்ளார். தயாரிப்புப் பணி 2016 இல் ஆரம்பிக்கப்பட்டு 2017 ஏப்ரல் 7 அன்று நிறைவுற்றது. அறிமுக நாயகன் திரு.ஹர்ஷா ராஜ் சிறப்புத் தோற்றத்தில் இடம் பெற்றிருந்தார். திரைப்படம் சுமார் 1 மணி நேரம் 50 நிமிடங்கள் நேரம் கொண்டதாகும் [1]

நடிப்பு[தொகு]

  • அமுதவாணன்
  • ஜியார்ஜ் விஜய்
  • ஆர். வி. சதீஷ்
  • யோகானந்த்
  • ஆல்யா மானசாஹர்ஷா ராஜ்
  • ரீனா
  • மகாநதி சங்கர் - இடிஅமீன்
  • யோதிஷ் சிவன்
  • பில்லி முரளி
  • ரியோ ராஜ்

தயாரிப்பு[தொகு]

ஆர். வி. சதீஷ் அமெரிக்கவில் தான் பார்த்து வந்த ஒரு வேலையை விட்டுவிட்டு இயக்குனராகும் ஆசையில் இராதாகிருஷ்ணன் பார்த்திபனிடம் உதவியாளாராக பணி புரிந்தார். இயக்குனர் ஒரு முக்கிய பாத்திரத்தில் லக்கி என்ற பெயரில் நாய் ஒன்று நடித்துள்ளதாகவும், நகைச்சுவைக் காட்சிகளில் தான் அதிக கவனம் செலுத்தியுள்ளதாகவும் கூறினார்.[2] இப்படத்திற்கான கதைக்களம் 2014 ஆம் ஆண்டில் கலிபோர்னியாவில் ஏற்பட்ட உண்மைச் சம்பவமேயாகும்.[3] தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த அமுதவாணன் இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். ஜியார்ஜ் விஜய் மணிரத்தினத்தின்' கடல் (2013) மற்றும் பாலாஜி மோகனின்' மாரி (2015), போன்ற படங்களில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார்.[4]

ஒலித்தொகுப்பு[தொகு]

இப்படத்தின் இசை ரகு ஷ்ரவண் குமார், இதன் பாடல் இசைத்தட்டு உரிமை டிரென்ட் மியூசிக் பெற்றது . 5 பாடல்கள் இதன் தொகுப்பு 2016 செப்டம்பர் 5 அன்று வெளிவந்தது.

பாடல் விவரம்
# பாடல்பாடியோர் நீளம்
1. "சென்னைவாசி"  மதன் ராப்கிங், ரகு ஷ்ரவண் குமார் 3:47
2. "நாலுக்காலு"  கானா பாலா 3:02
3. "ஹைக்கோ"  அக்‌ஷயா ராம்னாத் 4:40
4. "நூத்துக்கு நூறு"  மதன் ராப்கிங் 0:58
5. "சிஎம்பிடி கோமிங்கு"  பேபி தக்‌ஷிணி, எஸ். எஸ். பி, மதன் ராப்கிங், ரகு ஷ்ரவண் குமார் 3:16

வெளியீடு[தொகு]

இப்படம் 2017 ஏப்ரல் 7 அன்று தமிழகமெங்கும் மணிரத்னத்தின் காற்று வெளியிடை படத்துடன் வெளியானது தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இவ்வாறு எழுதியது." படத்தின் எடுக்கப்பட்டவிதம் சரியாக இருக்கிறது. இந்த படத்தில் தன்னியல்பான தன்மை அனைத்தையும் கொண்டுள்ளது, மற்றும் ஒவ்வொரு காட்சியும் மிகவும் வேடிக்கையாக நகர்கிறது".[5] தி நியூ இண்டியன் எக்ஸ்பிரசு பத்திரிகையில் எழுதிய ஒரு விமர்சகர், " குறைந்த தயாரிப்பு செலவில் எடுக்கப்பட்டத் திரைப்படம் என்பது வெளிப்படையாக தெரிகிறது" என்று எழுதியது, ஒரு அறிமுக இயக்குனர் என்ற வகையில் இது ஒரு நல்ல முயற்சி " இவ்வாறு எழுதினார்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Friday Fury- April 7". sify.com. Archived from the original on 7 ஏப்ரல் 2017. பார்க்கப்பட்ட நாள் 14 April 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. tabloid!, Mythily Ramachandran, Special to (7 September 2016). "'Julieum 4 Perum' is a dog's tale in Tamil". gulfnews.com. பார்க்கப்பட்ட நாள் 14 April 2017.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  3. M, Ramakrishnan. "Canine tales". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 14 April 2017.
  4. "From social worker to actor - Times of India". indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 14 April 2017.
  5. "Julieum 4 Perum Review {1.5/5}: Right from the writing to the filmmaking, this film has amateurishness written all over it". indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 14 April 2017.
  6. "Julieum 4 Perum Review: A mildy amusing shaggy dog story". newindianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 14 April 2017.

வெளிப்புற இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜூலியும்_4_பேரும்&oldid=3660987" இலிருந்து மீள்விக்கப்பட்டது