பொதக்குடி
| பொதக்குடி | |
| அமைவிடம் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருவாரூர் |
| வட்டம் | நீடாமங்கலம் |
| ஆளுநர் | கொனியேட்டி ரோசையா[1] |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா[2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| ஊராட்சி மன்ற தலைவர் | K.A. கமாலுத்தீன் |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு | 2 ச.கி.மீs (0.77 sq mi) |
|
குறியீடுகள்
|
|
பொதக்குடி (Podakkudi) தமி்ழகத்திலுள்ள திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமம் ஆகும். திருவாரூரிலிருந்து 20 கிமீ தொலைவில் இது அமைந்துள்ளது. இவ்வூரின் இரு ஓரத்திலும் வெண்ணாறு மற்றும் வெட்டாறு பாய்ந்தோடுகிறது. இது, இப்பகுதி மக்கள் வேளாண்மை செய்வதற்கு பெரிதும் உதவுகிறது. இக்கிராமத்திற்கு அருகே கூத்தாநல்லூர் எனும் நகரம் அமையப்பெற்றிருக்கிறது.
இவ்வூரில் கடந்த நூறாண்டுகளுக்கும் மேலாக, அந்நூருல் முஹம்மதிய்யு எனும் பெயரில் அரபிக் கல்லூரி ஒன்று இயங்கி வருகின்றது; இங்கு இசுலாமிய (ஷரீஅத்) சட்டம் குறித்தும், இசுலாமிய மார்க்கம் குறித்தும் மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கப்படுகிறது. இக்கல்லூரியில் வெளியூர்களிலிருந்து மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களிலிருந்தும், இலங்கையிலிருந்தும் மாணவர்கள் இங்கு வந்து, ஏழாண்டுகள்வரை தங்கியிருந்து கல்வி பயின்று, பட்டயம் (ஸனது) பெற்றுச் செல்கின்றனர்.
பொருளடக்கம் |
[தொகு] கல்வி நிறுவனங்கள்
[தொகு] அரசு கல்வி கலாசாலைகள்
|
[தொகு] தனியார் கல்வி நிறுவனங்கள்
|
[தொகு] கடந்தகால நிகழ்வுகள் ஓர் பார்வை
புதுமனைவாழ் பொதுமக்களின் வசதிக்காக, மா பங்கு கமிட்டியின் செலவில் முஹம்மதியாஹ் தெருவிற்கும், ஷௌகத் அலீ தெருவிற்குமிடையே புதியதாக ஒரு பள்ளிவாசலை நிர்மாணித்து, ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் பெயரிட்டு, அதை கடந்த 30.09.2010 வெள்ளிக்கிழமை அன்று, ஊர் பெரியோர்கள் முன்னிலையில் ஹாஜி K.M. அப்துல் கஃபூர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இவ்வூர் பொதுமக்கள் அனைவராலும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட மன்னார்குடி TO பொதக்குடி பேருந்து (B.S. மணியம் டிரான்ஸ்போர்ட்) மேற்படி வழித்தடத்தில் 17.4.1972 முதல், பொதுநல ஆர்வலர் திருவாளர் T.P.M. அப்துல் ஸத்தார் அவர்களுடைய பெருமுயற்சியால் இயங்கத்துவங்கியது.
பொதக்குடி அரசு மருத்துவமனை 31.12.1967 ஞாயிற்றுக்கிழமை மாலை 6:30 மணியளவில் ஹாஜி ம.மு. முஹம்மது யூசுஃப் அவர்கள் தலைமையில் மாண்புமிகு S.J. ஸாதிக் பாட்ஷா (B.Sc., B.L.) தமிழக சுகாதார அமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
பொதக்குடி உயர்நிலைப்பள்ளி 14.7.1962 சனிக்கிழமை காலை 9:30 மணியளவில் உயர்திரு T.S. சுவாமிநாத உடையார் (தமிழ் நாடு சட்டமன்ற உறுப்பினர்) அவர்கள் தலைமையில் மாண்புமிகு M. பக்தவத்சலம் (B.A., B.L.) மாநில கல்வி மற்றும் நிதி அமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இவ்வூரின் அரபுக்கல்லூரியுடன் இணைந்திருருக்கும் மேலப்பள்ளிவாசலின் பழைய கட்டிடம் 10.7.1914 வெள்ளிக்கிழமை அன்று திறந்து வைக்கப்பட்டது. (கடந்த 1999ஆம் ஆண்டு இப்பள்ளிவாசலை இடித்துவிட்டு, மீண்டும் புதிய பிரம்மாண்டமான பள்ளிவாசல் ஒன்றை கட்டி 2001ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.)
[தொகு] ஆதார நூல்கள்
- திருவாரூர் மாவட்ட ஊர்ப் பெயர்கள்
- இஸ்லாமிய கலைகளஞ்சியம்