பொட்டாசியம் ஐதரோசல்பைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொட்டாசியம் ஐதரோசல்பைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பொட்டாசியம் ஐதரோசல்பைடு
வேறு பெயர்கள்
பொட்டாசியம் பைசல்பைடு, பொட்டாசியம் சல்பைதரேட்டு, பொட்டாசியம் ஐதரசன் சல்பைடு
இனங்காட்டிகள்
1310-61-8 Y
ChemSpider 92246 N
EC number 215-182-9
InChI
  • InChI=1S/K.H2S/h;1H2/q+1;/p-1 N
    Key: ZOCLAPYLSUCOGI-UHFFFAOYSA-M N
  • InChI=1/K.H2S/h;1H2/q+1;/p-1
    Key: ZOCLAPYLSUCOGI-REWHXWOFAJ
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 102109
SMILES
  • [SH-].[K+]
UNII SX1L03AL9I Y
பண்புகள்
KHS[1]
வாய்ப்பாட்டு எடை 72.171 கி/மோல்
தோற்றம் வெண் திண்மம்
அடர்த்தி 1.68–1.70 கி/செ.மீ3
உருகுநிலை 455 °C (851 °F; 728 K)
கரையும்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் தீப்பற்றும் திண்மம், துர்நாற்றம் வீசும், ஐதரசன் சல்பைடை வெளிவிடும்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் பொட்டாசியம் ஐதராக்சைடு
ஏனைய நேர் மின்அயனிகள் சோடியம் ஐதரோசல்பைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

பொட்டாசியம் ஐதரோசல்பைடு (Potassium hydrosulfide) என்பது KHS என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இந்த நிறமற்ற உப்பில் K+ மற்றும் பைசல்பைடு [SH] அயனிகள் உள்ளன.

தயாரிப்பு[தொகு]

நீரிய பொட்டாசியம் ஐதராக்சைடுடன் ஐதரசன் சல்பைடு சேர்த்து வினைபுரியச் செய்யும்போது அரை நடுநிலையாக்க விளைபொருளாக பொட்டாசியம் ஐதரோசல்பைடு உருவாகிறது.[2] பொட்டாசியம் சல்பைடின் நீர்கரைசல்கள் பொட்டாசியம் ஐதரோசல்பைடு மற்றும் பொட்டாசியம் ஐதராக்சைடு ஆகியவற்றின் கலவையைக் கொண்டுள்ளன. பொட்டாசியம் சல்பைடுடன் அதிகப்படியான ஐதரசன் சல்பைடு சேர்த்து வினைபுரியச் செய்தும் தொகுப்புமுறையில் பொட்டாசியம் ஐதரோசல்பைடு தயாரிக்கப்படுகிறது.

கட்டமைப்பு[தொகு]

பொட்டாசியம் ஐதரோசல்பைடின் கட்டமைப்பு பொட்டாசியம் குளோரைடின் கட்டமைப்பை ஒத்திருக்கிறது.[3] [SH] அயனிகளின் கோளமற்ற சமச்சீர்தன்மையால் இவ்வமைப்பு சிக்கலானதாக உள்ளது.

பயன்கள்[தொகு]

சில கரிமக் கந்தகச் சேர்மங்களின் தயாரிப்புகளில் இந்த சேர்மம் பயன்படுத்தப்படுகிறது.[4] கந்தகம் கூடுதலாக சேர்க்கப்பட்டால் இருபொட்டாசியம் பெண்டாசல்பைடு கிடைக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Lide, David R., தொகுப்பாசிரியர் (2009). CRC Handbook of Chemistry and Physics (90th ). Boca Raton, Florida: CRC Press]isbn = 978-1-4200-9084-0. பக். 4-82. 
  2. Kurzer, F.; Lawson, A. (1962). "Thiobenzoylthioglycolic Acid". Organic Syntheses 42: 100. doi:10.15227/orgsyn.042.0100. http://www.orgsyn.org/demo.aspx?prep=CV5P1046. ; Collective Volume, vol. 5, 1973, p. 1046
  3. Haarmann, F; Jacobs, H.; Roessler, E.; Senker, J. (2002). "Dynamics of Anions and Cations in Hydrogensulfides of Alkali Metals (NaHS, KHS, RbHS): A Proton Nuclear Magnetic Resonance Study". Journal of Chemical Physics 117 (3): 1269–1276. doi:10.1063/1.1483860. Bibcode: 2002JChPh.117.1269H. 
  4. Dittmer, Donald C. (2001). Encyclopedia of Reagents for Organic Synthesis. Ed. Paquette, L.. J. Wiley & Sons, New York. DOI:10.1002/047084289X.rp227. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0471936235.