பேச்சு:மேலக்கால்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேலக்கால் வீரபத்தரன்[தொகு]

மேலக்கால் வீரபத்தரன் பற்றிய தனிக்கட்டுரை இருந்தால் நன்றாக இருக்கும். அவருடைய படத்தையும், பிறப்பு வளர்ப்பு பற்றியும் சேகரித்து ஆவணப்படுத்தினால் நல்லது.--செல்வா 02:41, 3 ஆகஸ்ட் 2009 (UTC)

அன்பின் செல்வா,

உறுதியாக. கொஞ்ச நாட்களுக்கு அறிவியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம் என நினைக்கிறேன். எழுத வேண்டிய கட்டுரைகள் நிறைய..... பணி, தட்டச்சு செய்வதில் துரிதம் இல்லாமை மற்றும் பல கரணியங்களால் மிகையான கட்டுரை தர முடியவில்லை. பொறுமையாக நம் தமிழுக்கு வளம் சேர்ப்போம். -- மகிழ்நன் 02:53, 3 ஆகஸ்ட் 2009 (UTC)

மகிழ்நன், பொறுமையாகவே, இயன்றவாறு, இயன்றபொழுது பணியாற்றுங்கள். உண்மைதான் மிகவும் நிறைய பணிகள் உள்ளன. ஆனால், தொடர்ந்து பங்களிக்க வேண்டுமெனில் விரைவாக பங்களிப்பதைவிட, சீராக, இயன்றபொழுது நம் முதற்பணிகள், முதற்கடமைகளுக்கு ஊறு ஏதும் விளையாதவாறு பங்களிப்பது மிகவும் தேவை. நீங்கள் காட்டும் ஈடுபாடும் ஆக்கங்களும் வியப்பூட்டுகின்றன. --செல்வா 03:22, 3 ஆகஸ்ட் 2009 (UTC)

திரு செல்வா, மிகவும் நன்றி. ஜனாப்.முஹம்மது பிலால்மேலக்கால் வீரபத்திரன் அவர்களைப் பற்றி மேலும் பல தகவல்கள் விரவில் தொகுக்கபடும்

சேர்க்கக் கூடிய தகவல்கள்[தொகு]

  • சோழவந்தான் கட்டுரையில் உள்ளது போன்ற தகவல்சட்டம்
  • மேலக்கால் எனும் பெயர் ஏன் ஏற்பட்டது? வைகையிலிருந்து பிரிந்து செல்லும் வாய்க்காலின் காரணமாகவா?
  • வேளாண்மை தவிர வேறு தொழில்கள் என்னென்ன?

-- சுந்தர் \பேச்சு 05:11, 5 ஆகஸ்ட் 2009 (UTC)

சுந்தர் கழுவேற்றுதல் (மேலக் கழு) என்னும் சொல்லில் இருந்து மேலக்கால் வந்தது என்பார்கள். அதற்க்கான ஆதாராம் இல்லை. மேலும் நீங்கள் கேட்கும் தகவல்களை பின் நாளில் சேர்க்கிறேன் . நன்றி -- மகிழ்நன் 05:24, 5 ஆகஸ்ட் 2009 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மேலக்கால்&oldid=1380401" இலிருந்து மீள்விக்கப்பட்டது