பேச்சு:பிரியாணி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுரை மணக்குதே இரவி! :) -- சுந்தர் \பேச்சு 17:26, 22 பெப்ரவரி 2012 (UTC)

உங்களைப் போன்ற துறை சார் வல்லுனர்கள் தான் கட்டுரையை மேலும் கிண்ட வேண்டும் :) திரைப்படம், சோதிடம் போல் சமையலைப் பற்றியும் தமிழர்கள் நிறைய தேடுகிறார்கள். எனவே, இவை குறித்த கட்டுரைகளை உருவாக்குவதும் கூடுதல் வாசகர்களைப் பெற உதவலாம்--இரவி 17:51, 22 பெப்ரவரி 2012 (UTC)
கிண்டிருவோம் இரவி. :) -- சுந்தர் \பேச்சு 03:09, 23 பெப்ரவரி 2012 (UTC)
ரவி, சில ஆய்ந்தமைவில்லாத கருத்துக்கள்...
  1. தமிழர்கள் மட்டுமல்ல, உலகளவிலும்..இருப்பினும் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு தமிழர்களின் நாட்டம் தான் முகனை என்பதை ஒப்புக்கொள்கிறேன்.
  2. உணவு குறித்து என்பதை விட உணவாக்கலை என்பதே உண்மை. எனவே என்னென்ன வகை பிரியாணி என்பதை விட எவ்வாறு சமைப்பது என்றறியவே தேடுகிறார்கள்.
சுந்தர், நீங்கள் சொல்வது சரி தான். அடிப்படைத் தேவைகளை முன்னிட்ட பெரும்பாலான இணையப் போக்குகள் அனைத்து நாடு, இனத்தினருக்கும் பொதுவானது தான். தமிழ் விக்கிப்பீடியாவின் தேவை கருதி தமிழர்கள் என்று குறிப்பிட்டுச் சொன்னேன். சமைப்பதைப் பற்றித் தான் தேடுகிறார்கள் என்றாலும் உணவுகளின் பெயர்கள் முக்கியமான தேடற் சொற்களாக இருக்கும். எனவே, இவை குறித்த கட்டுரைகளை எழுதுவது நன்மை பயக்கும் என்று நம்புகிறேன். --இரவி 11:32, 23 பெப்ரவரி 2012 (UTC)
பிரியாணியைப் பொறுத்தவரை நானும் கிண்ட வருகிறேன் ;)--மணியன் 03:53, 23 பெப்ரவரி 2012 (UTC)
வாங்க வாங்க, மணியன். சேர்ந்து கிண்டுவோம். -- சுந்தர் \பேச்சு 04:14, 23 பெப்ரவரி 2012 (UTC)
கட்டுரையில் உள்ள படங்களைப் பார்க்க நா ஊறுகிறதே...நான் கொஞ்ச நாட்களுக்கு அசைவ உணவு சாப்பிடாமல் இருக்க முயன்று கொண்டிருக்கும் நேரத்திலா எனக்கு இந்தச் சோதனை வர வேண்டும் :) --இரவி 11:32, 23 பெப்ரவரி 2012 (UTC)
பாவம் இரவி! அவர் சில நாட்களுக்கு (?) அசைவ உணவை சாப்பிடாமல் நிறுத்தி வைத்திருந்த நேரத்திலா... இப்படி விதவிதமான பிரியாணிகளையும், படத்தையும் போட்டுக் கலக்க (கட்டுரையை விரிவாக்க) வேண்டும். கலங்கிப் போயிருக்கும் இரவிக்காக ஏதாவது சைவப் பிரியாணி வகைகளையும் சேர்த்து விடுங்கள்... இல்லையேல் அவரது அசைவ உண்ணாநிலை ஆட்டம் கண்டுவிடும்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 04:09, 24 பெப்ரவரி 2012 (UTC)
இந்தப் பாவத்தைப் போக்க அடுத்து பாகற்காய் கட்டுரையை விரிவாக்கலாம், தேனி எம். சுப்பிரமணி. :) -- சுந்தர் \பேச்சு 04:42, 24 பெப்ரவரி 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பிரியாணி&oldid=1034807" இலிருந்து மீள்விக்கப்பட்டது