பேச்சு:பவழமல்லி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


காயத்திரி, இக்கட்டுரையின் தலைப்பை பவழமல்லி என்று மாற்றி, பவளமல்லி என்று வழிமாற்றும் தரவேண்டும் என எண்ணுகிறேன். பவழம், பவளம் இரண்டுமே சரியான சொற்கள் எனினும், பவழம் சிறப்பான சொல். நீங்கள் அருமையான தலைப்புகளில் நல்ல ஆக்கங்கள் செய்வது கண்டு மகிழ்கின்றேன். இப் பூவுக்கு தனிச் சிறப்பான நறுமணம் உண்டு அதனைக் கட்டுரையில் சேர்க்கின்றேன். --செல்வா 12:09, 17 மார்ச் 2007 (UTC)

அனிச்சம் பூ என்று தமிழில் சொல்லப்படுவதும் இதுதான் என்று நினைக்கிறேன். திருக்குறளில், மோப்பக் குழையும் அனிச்சம் என்று குறிபிடப்படுவதும் இதுவே. உண்மையில் இத்தகைய இயல்பு இந்தப் பூவுக்கு உண்டா என்று தெரியவில்லை. இல்லாவிட்டாலும், இப்படியொரு கருத்துத் தமிழர் மத்தியில் இருந்தது பற்றிக் குறிப்பிடலாம். Mayooranathan 12:17, 17 மார்ச் 2007 (UTC)

செல்வா, தலைப்பைத் திருத்த & பவளமல்லி என வழிமாற்றும் தர உதவுங்களேன். எப்படிச் செய்வது என்று தெரியவில்லை. (தலைப்பில் மாற்றினால் சரியா?) எனக்கு எதை (பவழ/பவள) இடுவது என்று குழப்பமாகவிருந்தது. வலைப்பதிவில் பலரும் பவளமல்லி என்று எழுதக்கண்டுதான் பவழமல்லி என்று எழுதிக் கொண்டிருந்ததை பவளமல்லி ஆக்கினேன்.

அனிச்சம் பூவைப்பற்றித் தெரியவில்லை மயூரநாதன்.. நிச்சயமாகத் தெரிந்தால் கட்டுரையில் சேர்க்கலாம். - காயத்திரி 13:17, 17 மார்ச் 2007 (UTC)

பவழமல்லியை முதன்மைப்படுத்தியுள்ளேன்.--Kanags 13:24, 17 மார்ச் 2007 (UTC)

பாரிஜாதம், பாரம் எனப்படுவதும் பவழமல்லி தானா?--Kanags \உரையாடுக 23:22, 9 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பவழமல்லி&oldid=1876004" இலிருந்து மீள்விக்கப்பட்டது