பாரம் (ஊர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரம் எனப்படும் மலர்

குறிஞ்சிப்பாட்டு என்னும் சங்ககால நூல் 99 மலர்களின் பெயர்களைத் தொகுத்துக் கூறுகிறது. அவற்றுள் ஒன்று பாரம் என்னும் மலர். இக்காலத்தில் பாரிசாதம் என்னும் பெயரால் வழங்கப்படும் மலர் இது ஆகலாம்.[1] இந்தப் பாரம் மலர் மிகுதியாகப் பூத்திருந்த ஊர் பாரம். இப்போது கேரள மாநிலம் கசரக்கோடு மாவட்டத்தில் அக்காலத்தில் இருந்த ஊர் பாரம் என எண்ணிப்பார்க்க முடிகிறது.

பாரம் பற்றிய செய்திகள்[தொகு]

  • சந்தன மரத்தைக் காவல்மரமாகக் கொண்ட நன்னன் பாரம் என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்துவந்தான். [2]
  • பாரம் என்னும் ஊரை மிஞிலி என்பவன் பாதுகாத்துவந்தான்.[3]
  • தொல்காப்பியத்துக்குப் பாயிரம் தந்துள்ள பனம்பாரனார் வாழ்ந்த ஊர் பனைமரங்களும் பாரமலர்களும் மிக்க பனம்பாரம். இது கடலால் கொள்ளப்பட்டது.
  • பதிற்றுப்பத்து மூன்றாம் பத்தின் தலைவன் பல்யானைச் செல்கெழு குட்டுவனைத் துறவு பூணச் செய்து தன்னோடிருந்து தவம் மேற்கொள்ள அழைத்துச் சென்ற நெடும்பாரதாயனார் இந்தப் பாரம் ஊரில் வாழ்ந்தவர்.
  • பாரம் என்னும் சொல் சுமை என்னும் பொருளில் சங்கநூல்களிலும் கையாளப்பட்டுள்ளது.[4]

சான்றுகள்[தொகு]

  1. குறிஞ்சிப்பாட்டு 92
  2. பாரத்துத் தலைவன் ஆர நன்னன் – பரணர் - அகம் 152
  3. பரணர் நற்றிணை 265
  4. பகடு புறந்தருநர் பாரம் ஓம்பி - புறம் 35 \ பசித்தும் வாரேம் பாரமும் இலமே - புறம் 145
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரம்_(ஊர்)&oldid=1010371" இலிருந்து மீள்விக்கப்பட்டது