பேச்சு:தமிழர் மெய்யியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழர் மெய்யியல்[தொகு]

சங்க விழுமியங்கள்[தொகு]


திணைக் கோட்பாடு[தொகு]

தமிழர் நிலத்திணைகள்

திராவிட கருத்தியல்[தொகு]

மற்றயவை[தொகு]


தமிழர் மெய்யியலில் பொருள்மையவாதம்[தொகு]

சங்ககாலத்திலும், தற்காலத்திலும் தமிழர் மெய்யியலில் பொருல்மையவாதம் வலுப்பெற்று இருக்கிறது. சங்கலாகத்தில் தமிழர் உலகாயுதப் போக்கை கொண்டிருந்தன என்றும், வீரம், காதல், இன்பம் ஆகியவற்றை போன்றினர் என்றும் சங்க இலக்கியத்தில் இருந்து அறிய முடிகிறது.

ஒப்பீட்டளவில் பொருள்மையாவாதக் கூற்றை பெரும்பான்மை தமிழர் பின்பற்றும் சைவ சமயமும் ஏற்றுக்கொண்டுள்ளது. எடித்துக்காட்டாக திருமந்திரம் என்ற சைவ சிந்தாந்த நூல் பொருள், உயிர், இறை ஆகியவை இருக்கென்று கூறுகிறது. பொருள் உயிர் ஆகியவை வெறும் மாயையே என்ற வேதாந்தக் கூற்றை மறுதலிக்கிறது.

உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்பினுக் உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென் என்று
உடம்பினை யானிருந்(து) தோம்புகின் றேனே.
- திருமந்திரம்

'உலகத்தை நோக்கி வினவுதல்' என்ற தலைப்பில் பாரதி பாடிய பினவரும் பாடல் தமிழ்ச் சூழலில் காணப்பட்ட இரு முரண்பட்ட வாதங்களான உலகு மாயை, உலகு பொருள் என்ற பொருளை மையாக வைத்து பாடப்பட்டது.

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
...
...
காண்பவெல்லாம் மறையுமென்றால் 
மறைந்ததெல்லாம் காண்ப மென்றோ?
வீண்படு பொய்யிலே-நித்தம் விதிதொடர்ந் திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம்-இந்தக் காட்சி நித்தியமாம். 


தற்காலத்தில் தமிழர் இடதுசார் சிந்தனையாளர்களும், திராவிட சிந்தனையாளர்களும் பொருள்மையவாதத்தை முன்னிறுத்தியுள்ளார்கள்.

தமிழர் மெய்யியலில் சமத்துவம்[தொகு]

தமிழர் மரபுவழிச் சிந்தனையில் சமத்துவம் வற்புறுத்தப்படவில்லை. அதாவது அனைவரும் சம வாய்ப்பு பெற்று, வேண்டிய பெற்று சிறப்புற்று இருக்க வேண்டும் என்ற சிந்தனை மரபுவழிச் சிந்தனையில் இல்லை. இயல்பாக மனிதரிடையே திறன்கள் முயற்சி ஆகியவற்றில் ஏற்றதாழ்வுகள் இருக்கும். எனினும் சமவாய்ப்பு என்ற கருத்தியல் இலக்கு சமூக நீதிக்கும், சமூக முன்னேற்றத்துக்கும் அவசியம். குறிப்பாக கல்வி, சுகாதாரம் போன்றவற்றை சமத்துவமாக வழங்கி சமவாய்ப்பை ஏதுவாக்க இந்த கொள்கை அவசியம்.


வரலாற்றின் பெரும்பகுதியில் தமிழ்ச் சமூகம் சாதிய அடுக்கமைவு அமைப்பையே கொண்டிருந்தது. பெண்களுக்கு இணையான உரிமைகள் புறக்கண்ப்பட்டே இருந்தது. தமிழர் அரசியல் முடியாட்சி முறையைக் கொண்டிருந்தது. இது தமிழ்ச் சூழலில் சமத்துவக் கோட்பாடு வலுப்பெற வழிசெய்யவில்லை. தமிழர் பலர் பின்பற்றிய இந்து சமய சிந்தனையில் அனைத்து உயிர்களும் சமமே என்ற கருத்து இருந்த போதிலும், நடைமுறையில், நாளாந்த வாழ்வில் இந்து சமயம் சாதிய அமைப்பையே பேணியது.


தற்காலத்திலேயே சமத்துவ கோட்பாடு தமிழர் சிந்தனையில் விரிவு பெற்றது. பாரதியே சமத்துவம் தொடர்பாக இன்றும் தமிழர் மத்தியில் ஒலிக்கும் முதன்மைக் குரல். "தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்றும், "சாதிகள் இல்லையடி பாப்பா குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவம்" என்றும், "ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம்" என்றும் தனது எளிமையான கவிதைகள் மூலம் தமிழர் சிந்தனையில் சமத்துவ சிந்தனைகளை பாரதி விதைத்தான்.

தாக்கங்களும் மாற்றங்களும்[தொகு]

தமிழர் மற்றைய சமூகங்களோடு சந்தித்துக்கொண்ட போது தமிழரின் மெய்யியலில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. பிற திராவிட, வட இந்திய, இஸ்லாமிய, ஐரோப்பியத் தொடர்புகள் தமிழர் மெய்யியலை மாற்றியமைத்திருக்கின்றன. தமிழர் இடப்பெயர்வுகளும் தமிழரை ஆபிரிக்கர், மாலாயர், அமெரிக்க முதற்குடியினர் எனப் பலரோடு அறிமுகம் செய்து தமிழர் மெய்யிலை பாதித்து இருக்கின்றன.


தமிழர் மெய்யியலின் மாற்றுத்துக்கு எடுத்துக்காட்டக சங்க சூழலில் சாதி அமைப்பு வலுவாக இருக்கவில்லை, பின்னர் சமஸ்கிரத்வாக்கதின் பின் அது வேரூன்றிக்கொண்டது. ஐரோப்பியத் ஆட்சியின் போது கிறீஸ்தவ சமயமும் அறிவியலும் சாதி அமைப்பை கேள்வி உட்படுத்தி திராவிடத்தை உந்தியது.


தமிழர் மெய்யியலில் சமய நம்பிக்கை முக்கிய இடம் பெறுகிறது. பெளத்தம், சமணம், சைவம், வைணவ, இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகியவற்றின் தாக்கத்தை தமிழ் மெய்யியலில் காணலாம். குறிப்பாக மறுபிறவி, அற்புதங்கள், உருப வழிபாடு போன்றவற்றில் பெரும்பான்மைத் தமிழர் நம்பிக்கை உடையவர்களே. அதேவேளை தற்காலத் தமிழர் அறிவியலை ஏற்றுகொண்டு அதனையே நடைமுறை வாழ்வுக்கு உண்மையை அறிய தமது முதன்மை வழிமுறையாக கைகொள்கிறார்கள். அறிவியலின் படி மறுபிறவி, அற்புதங்கள், கடவுள் என்பற்கு ஆதாரங்கள் எதுவுமில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தமிழர்_மெய்யியல்&oldid=2922459" இலிருந்து மீள்விக்கப்பட்டது