பேச்சு:அருவாள் நாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்புள்ள சூரியப்பிரகாசு, சரியான தலைப்பைத் தவறான தலைப்புக்கு மாற்றியுள்ளீர்கள். இத்தகைய கொடுமையை இனிச் செய்யவேண்டாம். நான் செய்ய விரும்பவில்லை. நீங்களே மீண்டும் பழைய தலைப்புக்கு மாற்றுங்கள். உங்களின் விரிவாக்கத் தமிழிலுள்ள பிழையை நான் திருத்துகிறேன். முதன்முதலில் சுழலும் விண்மீன் வழங்கி என்னைப் பாராட்டியதை நினைவுபடுத்திக்கொள்கிறேன். அன்புள்ள. --Sengai Podhuvan (பேச்சு) 20:09, 13 மார்ச் 2013 (UTC)

ஐயா. அருவாள் நாடு என்பது வழக்கிலுள்ளதா என்று தெரியாமையால் மாற்றிவிட்டேன். நான் "பன்றி அருவா அதன் வடக்கு" என்ற பாடலில் வருவதற்கேற்ப மாற்றினேன். பொறுத்தருள்க. ஒரு வழிமாற்று உருவாக்கி விடுகிறேன். நினைவு படுத்தியமைக்கு நன்றி. மற்றபடி கொடுமையெல்லாம் ஒன்றும் இல்லை :) -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 17:23, 14 மார்ச் 2013 (UTC)

'எண்ணெய்' என்பதை 'எண்ணை' என்று எழுதுவதைக்கூட ஏற்றுக்கொள்ளலாம் என்பது டாக்டர் மு. வ. கற்றுக்கொடுத்த பாடம். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 22:27, 14 மார்ச் 2013 (UTC)

சரியான தலைப்புக்கு மாற்றிய சோடாவுக்கு நன்றி. --Sengai Podhuvan (பேச்சு) 01:04, 16 மார்ச் 2013 (UTC)

வரலாறு[தொகு]

தற்போது தொண்டை நாடு எனப் பொதுவாக அறியப்படும் காஞ்சியைத் தலைநகராகக் கொண்ட பல்லவ நாடு அதற்குமுன், முற்காலச் சோழர் ஆட்சியிலும் இரண்டாம் தலைநகராகக் கொள்ளப்பட்டுச் சிறப்புற விளங்கி இருந்திருக்கிறது. ஏறத்தாழ 700 ஆண்டுகள் பல்லவர்கள் தென்னிந்தியாவில் நிலைத்து ஆட்சி புரிந்திருக்கிறார்கள். இந்திய வரலாற்று நூலாசிரியரான வின்சென்ட் சிமித் என்பவர், தமது 'பழைய இந்திய வரலாறு' என்னும் நூலின் முதற் பதிப்பில், 'பல்லவர் என்பவர் பஃலவர் என்னும் பாரசீக மரபினர்' என்று கூறுகிறார்; பிறகு அவரே மறுபதிப்பில் தம் கூற்றை மறுக்கிறார். எலியட் செவேல் முதலியோர் தொண்டை மண்டலத்துப் பழங்குடியினரான குறும்பர் மரபினரே பிற்காலப் பல்லவர் என்றும் முடிவு செய்தனர்[1].பல்லவர்கள் காடவர் மரபை சேர்ந்தவர்கள் . காடவ மன்னர்கள் தங்களை பள்ளி (வன்னியர் ) என்று ஸ்ரீமுஷ்ணம் கல்வெட்டு , விருத்தாசலம் கல்வெட்டுகளில் குறிப்பிடுகின்றனர் .

மணிமேகலையில் கூறப்படும் ஆதொண்டச்சக்கரவர்த்தி குறும்பரை வென்று, அவர்தம் குறும்பர் பூமியைத் தனதாக்கித் தன் பெயர் இட்டுத் தொண்டை மண்டலம் என வழங்கினான்' என்பது செவிவழி வரும் செய்தியாகும். வடபெண்ணை முதல் தென்பெண்ணை வரை இருந்த நிலப்பரப்பே அக்காலத்தில் தொண்டை மண்டலம் எனப்பட்டது. அது அருவா நாடு, அருவா வடதலைநாடு என இரண்டு பிரிவுகளாக இருந்தது. அருவா நாடு என்பது காஞ்சிநகரம் உட்பட்டது. பின்னது காஞ்சி முதல் வடபெண்ணை வரை இருந்த நாடாகும். இது குன்றுகளும் காடுகளும் சூழ்ந்த இடமாகும்; காளத்தி முதலிய மலையூர்களைத் தன்னகத்தே பெற்றது. அவ்விடம் இன்றும் 'தொண்டைமான் மாகணி' (மாகாணம்) எனப்படும். கரிகால் சோழன் இதனை காடழித்து நாடாக்கினான், விளை நிலங்களை ஆக்கினான், ஏரி, குளங்களை வெட்டுவித்தான்; தொண்டை மண்டலத்தை நாடாக்கினான்; நாகரிகத்தைத் தோற்றுவித்தான் என்று பட்டினப்பாலை முதலிய தமிழ் நூல்கள் கூறுகின்றன. இவ்வாறு தொண்டை மண்டலம் சோழர் ஆட்சிக்கு வந்தது. திரையன் எனும் மன்னன் அருவா வடதலை நாட்டை ஆண்டபோது, இளந்திரையன் அருவா நாட்டை ஆண்டனன் என்பதும் அறியக்கிடக்கிறது. தொண்டைமான் இளந்திரையன் என்பவன் காஞ்சியை ஆண்ட தமிழ் அரசனாகப் பெரும்பாணாற்றுப்படையில் சிறப்பிக்கப்படுகிறான்[1].

விளக்கம்[தொகு]

இந்தக் கருத்துக்கள் தொண்டை நாடு கட்டுரைப் புகுதியில் கருதத்தக்கவை. அருவாள் நாடு வேறு. --Sengai Podhuvan (பேச்சு) 19:47, 8 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

  1. 1.0 1.1 ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! ---- ௧௫ (15)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அருவாள்_நாடு&oldid=1734738" இலிருந்து மீள்விக்கப்பட்டது