பெருவயிற்றுக் கடற்குதிரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெருவயிற்றுக் கடற்குதிரை
ஹிப்போகாம்பசு அப்டாமினாலிசு (மீன் வரைபட புத்தகத்திலிருந்ர்ஹு க்வுட், 1832)
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
ஆக்டினோப்டெரிஜீ
குடும்பம்:
சின்கனிதிடே
பேரினம்:
ஹிப்போகாம்பசு
இனம்:
ஹி. அப்டாமினாலிசு
இருசொற் பெயரீடு
ஹிப்போகாம்பசு அப்டாமினாலிசு
லெசன், 1827
வேறு பெயர்கள்
  • ஹிப்போகாம்பசு பிளிக்கேரிபெளர், 1907
  • ஹிப்போகாம்பசு ஆக்னிசேயிபெளர், 1907
  • ஹிப்போகாம்பசு கிரேசிலிபார்மிசுமெக்குளோச், 1911

பெருவயிற்றுக் கடற்குதிரை (Big Belly Seahorse) அல்லது பானை வயிற்றுக் கடல் குதிரை என்பது ஹிப்போகாம்பசு அப்டாமினாலிசு (Hippocampus abdominalis) என்ற சிற்றினத்தினைக் குறிக்கின்றது.[2] உலகில் வாழும் பெரிய கடற்குதிரைகளுள் இதுவும் ஒன்றாகும். பெருவயிற்றுக் கடற்குதிரை 35 செமீ நீளம் வர வளரக்கூடியது. இப்பெரிய கடற்குதிரை ஆத்திரேலியாவில் கண்டறியப்பட்டது .[3] கடற்குதிரையானது எலும்பு மீன்களில் சைனாத்திடே குடும்பத்தினைச் சார்ந்ததகும். இவை ஆத்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் காணப்படுகின்றன. இந்த கடற்குதிரை சிட்டெசு பட்டியல் எனப்படும் காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களின் ஆபத்தான உயிரினங்களில் சர்வதேச வர்த்தகத்திற்கான மாநாடு இணைப்பு 2 இல் வைக்கப்பட்டுள்ளது.[4]

வாழ்விடம்[தொகு]

பெருவயிற்றுக் கடற்குதிரை பாசி, கடல் புற்கள், மற்றும் பாறை திட்டுகள் நிறைந்த பகுதிகளில் ஆழம் குறைந்த இடங்களில் பஞ்சுயிரிகள் மற்றும் ஹைட்ராய்டு கூட்டமைப்புடன் இணைந்து வாழ்கின்றது. இவை கடற்கரை ஓரங்களில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட படகுக்குழாம் உள்ளிட்ட செயற்கை அமைப்புகளிலும் கழிமுகங்களிலும் கூட்டமாகக் காணப்படும். பொதுவாக இவை 50 அடுக்கும் குறைவான ஆழப்பகுதிகளில் வாழ்கின்றன; ஆனால் 104 அடி ஆழமான பகுதிகளிலும் கண்டறியப்பட்டுள்ளது.[5] இளம் உயிரிகள் மிதவை உயிரிகளாகவும், கடற்பாசி ஒட்டியும் காணப்படும்.

விளக்கம்[தொகு]

பானைவயிற்று கடல் குதிரைகள், செட் மீன்காட்சி சாலை

பெருவயிற்றுக் கடல் குதிரை முன்னோக்கிச் சாய்ந்த, நீண்ட முகத்துடன் கூடிய தலையுடன், நீளமான, சுருண்ட வாலுடன் காணப்படும். இது செங்குத்து நிலையில் முதுகு துடுப்பினைப் பயன்படுத்தி நீந்துகிறது. நீந்தாமல் நிலையாக இருக்கும்போது, கடற்பாசி போன்ற பொருத்தமான பொருள் ஒன்றில் தன்னுடைய வாலினைப் பயன்படுத்திப் பற்றிக்கொள்ளும். இவ்வாறு நிலையாக இருக்கும்போது அருகே வரும் மிதவை உயிரிகள் உள்ளிட்ட பிற விலங்குகளை உண்ணுகிறது. இவை தம்முடைய வாயின் நுனிப்பகுதியினை உறிஞ்சும் அமைப்பு போலச் செயல்படுத்தி உணவினை உண்ணுகின்றது. அதிகமாக உணவு உண்ணும் இந்த கடல் குதிரைகளின் முக்கிய இரையாக இறால் போன்ற ஓடுடைய கணுக்காலிகள் மற்றும் கடற்பாசி மத்தியில் வாழும் பிற சிறிய விலங்குகளான கோபிபாடுகள் மற்றும் ஆம்பிபோட்கள் ஆகும். இவற்றை மெல்ல மெல்ல அசையிட்டு உண்ணுகின்றது. இவற்றில் குடல் சிறியதாக இருப்பதால் மெல்ல மெல்ல உண்ணுகின்றது. இதனுடைய ஒவ்வொரு கண்ணும் தனித்தனியாக நகரும் தன்மையுடையதால், இதனால் உணவு மற்றும் எதிரிகளைக் காண்பது எளிதாகிறது.

பெண் கடற்குதிரைகளிடமிருந்து ஆண்களை வேறுபடுத்தி அறிவது எளிதானது: ஆணின் அடிவயிற்றின் மென்மையான பை போன்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் வயிறு, வாலுடன் இணைகிறது. இப்பகுதியில் ஆண்களுக்கு துடுப்பு ஒன்று உள்ளது. ஆனால் இது தெளிவாகத் தெரிவதில்லை. பெண் கடல் குதிரையின் அடிப்பகுதியில் கூர்மையான வயி்று தெளிவான துடுப்புடன் உள்ளது.

இனப்பெருக்கம்[தொகு]

இயற்சூழலில் கடல் குதிரைகள் இனப்பெருக்கத்தினை ஒருவருட வயதில் தொடங்குகிறது. ஆனால் இது வளரிடத்தில் எட்டு மாதத்திலே தொடங்கிவிடுகிறது. ஆண்டு முழுவதும் பெரிய வயிற்றுக் கடல் குதிரைகளில் இனப்பெருக்கம் நடைபெறுகிறது. ஆனால் வெப்பம் அதிகமாகக் காணப்படும் மாதங்களில் இனப்பெருக்க விகிதம் அதிகமாக உள்ளது.[3]

இனப்பெருக்க ஈர்ப்பின் துவக்கத்தில் தொடர்ச்சியான வண்ண மாற்றங்கள் மற்றும் உடல் தொற்ற மாறுபாடு காட்சிகள் அடங்கியுள்ளன. அடைகாக்கும் பையைச் சற்று .திறந்து நீர் நிரப்புவதன் மூலம் பலூன் போன்ற அமைப்பினை ஏற்படுத்தி நீந்தவும், பின்னர் பை திறப்பை மூடுவதன் மூலமாகவோ பையை உயர்த்துகிறது. இந்நேரத்தில், தனது பையின் நிறத்தினை வெள்ளை அல்லது வெளிர் மஞ்சள் நிறமாக ஒளிரச் செய்கிறர். ஆண் தனது ஒட்டுமொத்த உடல் நிறத்தையும் பிரகாசமாக்கி, மஞ்சள் நிறத்தை அதிகமாக்கும். ஆண் ஒன்று மீண்டும் மீண்டும் தலையைக் கீழே சாய்த்துக்கொண்டு முதுகு துடுப்பு மற்றும் மார்பு துடுப்புகளை வேகமாக அசைத்துக்கொண்டு தான் தேர்ந்தெடுத்த பெண் கடல் குதிரையினை அணுகும்.

உலர்ந்த பெரிய-வயிற்று கடல் குதிரை மாதிரி

இச்செயலினை அந்த பெண் கடற்குதிரை ஏற்றுக்கொள்ளவில்லை, மற்றொரு சாத்தியமான துணையைத் தேடி ஆண் கடற்குதிரை செல்லும். எந்த ஒரு பெண் கடற்குதிரையும் ஏற்றுக்கொள்ளாவிட்டால், ஆண் தன்னுடைய செயல் பாடுகளை நிறுத்திகொண்டு, பையைத் திறந்து, முன்னோக்கி வளைத்து, தண்ணீரை வெளியேற்றுவதன் மூலம் பையை நீக்குகிறது. ஒரு பெண் ஒரு ஆண் ஆணுக்கு ஏற்றுக் கொண்டால், பெண் கடற்குதிரை வண்ண மாற்றங்கள் மற்றும் தலை குனிவதன் மூலம் இசைவினைப் பரிமாறிக் கொள்ளும். பொதுவாக மஞ்சள் மற்றும் வெள்ளை வண்ணங்களை அதிகமாக்கும். ஆண் பெண் கடற்குதிரைகள் ஒன்றாக நீந்தி, வால்கள் மூலம் ஒன்றையொன்று பிணைத்துக் கொள்கின்றன. இச்செயலானது 'நடனம்' என விவரிக்கப்படுகிறது. சிறிது ஓய்வுக்குப் பின் ஆண் தனது மூக்கை மீண்டும் மீண்டும் மேல்நோக்கி சுட்டிக்காட்டி பெண்ணுடன் நீர் மேற்பரப்பை நோக்கி நீந்த முயற்சிக்கும்.

பெண் தனது விருப்பத்தினை தன் மூகத்தினை மேல்நோக்கி காட்டி பதில் அளிக்கின்றது. இது இறுதி நிலையாகு, இப்பொழுது ஆண் மற்றும் பெண் கடற்குதிரைகள் இரண்டும் நீரின் மேற்பரப்பை நோக்கி நீந்துகின்றன. இரு உயிரிகளின் தலைகள் மேல் நோக்கியும் வால்கள் நேராகவும் இருக்கும். இவை நீரின் மேற்பரப்பை அடைந்தவுடன் ஒன்று அல்லது இரண்டு கடல் குதிரைகளை நாம் அடிக்கடி காணலாம். பெண் தனது முட்டைகளை ஆணுக்கு மாற்றம் செய்ய, ஆணுக்குச் சற்று மேலே, ஆணின் பைக்கு எதிராகத் தனது அடிவயிற்றின் அடிப்பகுதியை அழுத்தி, தந்து முட்டைகளை ஆணின் நீளமான பைக்குத் தள்ளிவிடும்.

ஆண் கடல் குதிரை 300-700 குட்டிகளை ஒரே நேரத்தில் அடைகாக்கும் தன்மையுடையது. கோடைக் காலத்தில் நான்கு முறைகள் வரை அடைகாக்கும்.[3] இவற்றின் வண்ணம் பழுப்பு நிறத்திலிருந்து மாறுபட்டு, மஞ்சள்-பழுப்பு மற்றும் இருண்ட பட்டைகளுடன் காணப்படும். வால் பெரும்பாலும் மஞ்சள் வளையப் பட்டைகளுடன் காணப்படும். ஆழமான பகுதிகளில் காணப்படும் பஞ்சுயிரி, ஹைட்ராய்டுகள் போன்ற பிற அமைப்புகள் மீது வாலினைப் பயன்படுத்திப் பிணைப்பு செய்து நிலைநிறுத்திக்கொள்கிறது.

மீன் வளர்ப்பு[தொகு]

உலரவைக்கப்பட்ட பெருவயிற்று கடற்குதிரைகள் ஆசியாவில் பாரம்பரிய மருந்தாக விற்கப்படுகின்றன.[3] இவை கடல்களிலிருந்து பிடிக்கப்பட்டும், மீன் வளர்க்கும் இடங்களிலிருந்தும் பெறப்படுகின்றன. மீன் வளரிடங்களில் இவற்றைச் சிறிய இறால் மற்றும் ஓடுடைய கணுக்காலி போன்ற விலங்குகளை உணவாக வழங்கி வளர்ப்பது எளிதானது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Pollom, R. (2017). "Hippocampus abdominalis". IUCN Red List of Threatened Species 2017: e.T10057A54903879. doi:10.2305/IUCN.UK.2017-3.RLTS.T10057A54903879.en. https://www.iucnredlist.org/species/10057/54903879. 
  2. Scales, Helen. Poseidon's Steed: The Story of Seahorses, From Myth to Reality. https://books.google.com/books?id=4Wifibfq2rMC&pg=PT136. பார்த்த நாள்: 9 June 2019. 
  3. 3.0 3.1 3.2 3.3 Bray, Dianne; Thompson, Vanessa. "Bigbelly Seahorse, Hippocampus abdominalis". Fishes of Australia. Archived from the original on 6 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 30 September 2014.
  4. "Species Hippocampus abdominalis Lesson". FishWisePro. 1827. பார்க்கப்பட்ட நாள் 18 April 2020.
  5. Lourie, S. A., Foster, S. J., Cooper, E. W. T. and Vincent, A. C. J. 2004. A Guide to the Identification of Seahorses. Project Seahorse and TRAFFIC. 114 pp.
  • A. B. Wilson and K. M. Martin-Smith (2007) Genetic monogamy despite social promiscuity in the pot-bellied seahorse (Hippocampus abdominalis), Molecular Ecology, 16, 2345–2352.
  • "Hippocampus abdominalis". FishBase. Ed. Ranier Froese and Daniel Pauly. May 2006 version. N.p.: FishBase, 2006.
  • Tony Ayling & Geoffrey Cox, Collins Guide to the Sea Fishes of New Zealand, (William Collins Publishers Ltd, Auckland, New Zealand 1982) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-00-216987-8
  • Chris M. C. Woods, National Institute of Water and Atmospheric Research, Received 16 July 2002; received in revised form 16 October 2002; accepted 14 November 2002 pp. 538. Effects of varying Artemia enrichment on growth and survival of juvenile seahorses, Hippocampus abdominalis. (Aquaculture 220 (2003)).
  • Chris M. C. WOODS, New Zealand Journal of Marine and Freshwater Research, 2000, Vol. 34 pp. 475–485. Preliminary observations on breeding and rearing the seahorse Hippocampus abdominalis (Teleostei: Syngnathidae) in captivity. (The Royal Society of New Zealand 2000).
  • Chris M. C. Woods, New Zealand Journal of Marine and Freshwater Research, 2002, Vol. 36: 655–660. Natural diet of the seahorse Hippocampus abdominalis. The Royal Society of New Zealand 2002
  • Chris M. C. Woods, New Zealand Journal of Marine and Freshwater Research, 2005, Vol. 39: 881–888 Reproductive output of male seahorses, Hippocampus abdominalis, from Wellington Harbour, New Zealand: implications for conservation. (The Royal Society of New Zealand 2005).
  • Chris M. C. Woods, National Institute of Water and Atmospheric Research, Received 17 December 1999; received in revised form 2 May 2000; accepted 9 May 2000. pp 377–388. Improving initial survival in cultured seahorses, Hippocampus abdominalis Leeson, 1827 (Teleostei: Syngnathidae) (Aquaculture 190, 2000).
  • Chris M. C. Woods & FiammaValentino, National Institute of Water and Atmospheric Research,Wellington, New Zealand. Naples Zoological Station‘A. Dohrn’,Villa Comunale1, Naples, Italy. Frozen mysids as an alternative to live Artemia in culturing seahorses Hippocampus abdominalis (Aquaculture Research, 2003 34, 757-763).
  • Gay, P. (2002, October 18). About seahorses. Southland Times, The. Retrieved March 12, 2008, from Australia/New Zealand Reference Centre database.
  • Hutchings, C. (1997, January). Secret life of seahorses. Geographical, 69(1), 31. Retrieved March 12, 2008, from Academic Search Premier database.
  • Schleichert, E. (2000, May). Seahorses. Ranger Rick, 34(5), 30. Retrieved March 12, 2008, from MAS Ultra – School Edition database.
  • Steeman, M. (2001, December 5). Plan to export seahorses to Asia. Dominion Post, The. Retrieved March 12, 2008, from Australia/New Zealand Reference Centre database.

புற இணைப்புகள்[தொகு]