புவேர்ட்டோ ரிக்கோ விடுதலைக் கட்சி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| புவேர்ட்டோ ரிக்கோ விடுதலைக் கட்சி Partido Independentista Puertorriqueño PIP - Puerto Rican Independence Party |
|
|---|---|
| தலைவர் | ரூபென் மார்ட்டினெஸ் (PIP தலைவர்); ஜூவான் டால்மா (செயலாளர் நாயகம்); பெர்னாண்டோ மார்ட்டின் (நிர்வாக தலைவர்), விக்டர் கார்சியா சான் இனொசென்சியோ (பக்களவைப் பிரதிநிதி) |
| தொடக்கம் | அக்டோபர் 20, 1946 |
| தலைமையகம் | சான் ஜுவான், புவேர்ட்டோ ரிக்கோ |
| அதிகாரப் பட்ச அரசியல் நிலைப்பாடு/ கொள்கை |
தேசிய விடுதலை இயக்கம், சோசியால் லிபரலிசம், சமூக மக்களாட்சி |
| பன்னாட்டுக்கூட்டு | Socialist International (SI) |
| அதிகாரப் பட்ச நிறம் | பச்சை மற்றும் வெள்ளை |
| தளம் | www.independencia.net/ingles/welcome.html |
புவேர்ட்டோ ரிக்கோ விடுதலைக் கட்சி (Puerto Rican Independence Party, ஸ்பானிய மொழி: Partido Independentista Puertorriqueño, PIP) என்பது புவேர்ட்டோ ரிக்கோ நாட்டின் ஓர் அரசியல் கட்சியாகும். இது ஐக்கிய அமெரிக்காவிலிருந்து புவேர்ட்டோ ரிக்கோ நாட்டின் விடுதலைக்காகப் போராடி வருகிறது[1]. புவேர்ட்டோ ரிக்கோவில் உள்ள மூன்று பெரும் அரசியல் கட்சிகளில் இதுவும் ஒன்றாகும். அத்துடன் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளில் இது இரண்டாவது பழமையானதுமாகும்[2],[3].
[தொகு] வரலாறு
இக்கட்சி அக்டோபர் 20, 1946 இல் கில்பேர்ட்டோ டெ கிராசியா என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. நாட்டின் விடுதலையை வேண்டி ஆரம்பிக்கப்பட்ட பிரபல்யமான மக்களாட்சிக் கட்சி பின்னர் விடுதலைக் கோரிக்கையை விட்டுக் கொடுத்தமையால் கிராசியா புதிய கட்சியை ஆரம்பித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ Berrios-Martinez, Ruben; “Puerto rico—Lithuania in Reverse?”; The Washington Post, Pg. A23; May 23, 1990.
- ↑ The New York Times; Mar 18, 1949, pg. 13.
- ↑ Puerto Rico State Electoral Commission (CEE)
[தொகு] வெளி இணைப்புகள்
- www.independencia.net/ingles/welcome.html கட்சியின் அதிகாரபூர்வ இணையத்தளம்