பிறிஸ்பேன் செல்வ விநாயகர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செல்வ விநாயகர் கோயில் அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தின் தலைநகரான பிறிஸ்பேனிலிருந்து 45கிமீ தெற்காக உள்ள தெற்கு மக்லீன் (South Maclean) என்னுமிடத்தில் லோகன் ஆற்றுக்கு அண்மையில் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

இக்கோயில் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட கோயில் கட்டிடக் கலைஞர்களாலும் சிற்பிகளாலும் சிற்ப சாத்திரங்களுக்கும் சிவாகமம் கூறும் விதிமுறைகளுக்கும் அமைய வடிவமைக்கப்பட்டுள்ளது. 1995 பெப்ரவரி 5 ஆம் திகதி இக்கோயிலின் குடமுழுக்கு(கும்பாபிஷேகம்) நடைபெற்றது.

அமைப்பு[தொகு]

கோயிலில் செல்வ விநாயகர் மூலஸ்தானத்தில் அமைக்கப்பட்டிருக்க, அவரது வலதுபுறத்தில் அபிராமி சமேதரராக சிவனும், இடப்புறத்தில் விஷ்ணுவும் அமர்ந்திருக்கின்றனர். மூலஸ்தானத்தின் பின்புறத்தில் உரிய இடத்தில் முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. நவக்கிரகங்களும் வைரவரும் வாசலுக்கு அருகில் அவரவர்க்குரிய இடத்தில் அமர்ந்துள்ளனர். சிவனுக்கு வலது புறத்தில் பஞ்சலோகத்தில் அமைக்கப்பட்ட திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும், கருங்கல்லில் அமைக்கப்பட்ட ராமகிருஷ்ணரும் அமர்ந்துள்ளனர். தினசரி காலையிலும் மாலையிலும் பூசை நடைபெறுகி்றது.

ஏனைய நடவடிக்கைகள்[தொகு]

இக்கோயில் கல்விநிலையமாக விளங்கி பிள்ளைகளுக்கான பல சமய வகுப்புக்களை நடத்தி வருவதுடன் நூலக வசதிகளையும் கொண்டுள்ளது. 'கோயில்மணி' என்ற பெயரில் ஒரு செய்தி மடல் ஆண்டிற்கு இரு முறை வெளியிடப்படுகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

பிரிஸ்பேன் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம்