பிரீமேசன்சு தங்கும் விடுதி கட்டிடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரீமேசன்சு தங்கும் விடுதி கட்டிடம்
Freemasons Lodge Building
Map
பொதுவான தகவல்கள்
கட்டிடக்கலை பாணிகாலனி ஆதிக்கம்
இடம்கராச்சி, பாக்கித்தான்
நாடுபாக்கித்தான்
தற்போதைய குடியிருப்பாளர்சிந்து மாகாண வனத்துறை
துவக்கம்1914
கட்டுவித்தவர்பாக்கித்தான் அரசு
உரிமையாளர்பாக்கித்தான் அரசு

பாக்கித்தானின் கராச்சியில் உள்ள பிரீமேசன்சு தங்கும் விடுதி கட்டிடம் (Freemasons Lodge Building - Karachi)என்பது 1914ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடமாகும். இது பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு ஆட்சியின் போது கட்டப்பட்டது. இது மோலானா தீன் முகம்மது வஃபாய் சாலையில் உள்ள தி. ஜே. சிந்து அரசு அறிவியல் கல்லூரி அருகில் உள்ளது.

பிரீமேசன்சு தங்கும் விடுதி 1914இல் பிரீமேசன் அறக்கட்டளையால் கட்டப்பட்டது. இது மஞ்சள் மணற்கற்களால் கட்டப்பட்டது.[1] பிரீமேசன் சமூகக் கூட்டங்களுக்கு இது பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டது. உள்ளூர் மக்கள் இதை " ஜடூ கர் " என்று அழைத்தனர். இதன் பொருள் "சூனி வீடு" என்பதாகும்.[2][3][4]

1972ஆம் ஆண்டில் ஜனாதிபதி சுல்பிக்கார் அலி பூட்டோவின் ஆட்சியில் பாக்கித்தானில் பிரீமேசன்ரி தடை செய்யப்பட்டு, கட்டடம் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டது.[5] 1990களின் முற்பகுதியில் இது சிந்து மாகாண வனவிலங்கு துறைக்கு ஒதுக்கப்பட்டது.[6] தற்பொழுது இது சிந்து வனவிலங்கு நிதியத்தால் பயன்படுத்தப்படுகிறது.[7] 2001ஆம் ஆண்டில், இது சிந்து கலாச்சார பாரம்பரியச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது. 2009ஆம் ஆண்டின் முற்பகுதியில், கட்டிடத்தின் ஒரு பகுதியை அருங்காட்சியகமாகப் பயன்படுத்துவதற்கான திட்டங்களுடன், புதுப்பித்தல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.[2]

கேலரி[தொகு]

  1. (in en) The Herald. Pakistan Herald Publications.. 1991. பக். 102. https://books.google.com/books?id=XSMaEeuL0oUC&newbks=0&printsec=frontcover&dq=freemasons+lodge+karachi+1914&q=freemasons+lodge+karachi+1914&hl=en. 
  2. 2.0 2.1 Amar Guriro (January 4, 2009). "Renovation of the historical Freemason Lodge initiated". Daily Times (Pakistan). http://www.dailytimes.com.pk/default.asp?page=2009\01\04\story_4-1-2009_pg12_9. 
  3. Peerzada Salman, Masonic mystique[தொடர்பிழந்த இணைப்பு], Dawn.com, Sunday, 13 Dec, 2009
  4. (in en) Handbook of Freemasonry. BRILL. 2014-06-12. பக். 251. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-04-27312-2. https://books.google.com/books?id=x033AwAAQBAJ&newbks=0&printsec=frontcover&pg=PA251&dq=freemasons+lodge+karachi+1914&hl=en. 
  5. Salman, Peerzada (2009-12-13). "Masonic mystique". DAWN.COM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-13.
  6. Amar Guriro, Culture department takes notice of Freemason Lodge Building, Daily Times (Pakistan), Tuesday, September 30, 2008
  7. (in en) An Emancipated Place: The Proceedings of the Conference and Exhibition Held in Mumbai, February 2000 : Women in Architecture, 2000 Plus : a Conference on the Work of Women Architects : Focus South Asia. Hecar Foundation. 2000. https://books.google.com/books?id=Y2pQAAAAMAAJ&newbks=0&printsec=frontcover&dq=freemasons+lodge+karachi+1914&q=freemasons+lodge+karachi+1914&hl=en.