பிரியதர்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரியதர்சி
"பிரியதர்சி", அசோகரின் மரியாதைக்குரிய அடைமொழி, பிராமி எழுத்துக்களில், பராபர் குகைகளில்.
பியரிதர்சி அல்லது தேவனாம்பிரியா ("ராஜா பியரிதர்சி") என்ற பெயரில் உள்ள ஆணைகள்:
: அசோகரின் பெரும் பாறைக் கல்வெட்டுக்கள்
: அசோகரின் பெரிய தூண் கல்வெட்டுக்கள்

பிரியதர்சி (Priyadasi, மேலும் Piyadasi அல்லது Priyadarshi ( பிராமி : 𑀧𑀺𑀬𑀤𑀲𑀺 piyadasi, கரோஷ்டி : 𐡐𐡓𐡉𐡃𐡓𐡔 Prydrš), என்பது பண்டைய இந்தியத் துணைக்கண்ட மன்னரின் பெயர். அல்லது ஒரு மரியாதைக்குரிய அடைமொழி ஆகும். இதன் பொருள் "மற்றவர்களை கருணையுடன் பார்ப்பவர்", "மனிதாபிமானி", " நட்புடன் பார்ப்பார்ப்பவர்".[1]

"பிரியதர்சி" என்ற பட்டமானது அசோகரின் பெரும் பாறைக் கல்வெட்டுக்கள் அல்லது அசோகரின் பெரிய தூண் கல்வெட்டுக்கள் என அறியப்படும் பண்டைய கல்வெட்டுகளில் மீண்டும் மீண்டும் காணப்படுகிறது. இது பொதுவாக "தேவனாம்பிரியா" ("கடவுள்களுக்கு பிரியமானவர்") என்ற பட்டத்துடன் "தேவனாம்பிரியா பிரியதாசி" என்று பயன்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.[1][2] சில கல்வெட்டுகளில் "ராஜன் பிரியதர்சி" என்ற பட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது.[1] மேலும் இது காந்தார இருமொழிக் கல்வெட்டில் ( கி.மு. 260), கிரேக்க மொழியிலும், கல்வெட்டுப் பிரகடனத்தில் βασι[λ]εὺς Πιοδασσης ( " பசிலெயசு Piodassēs") என்று குறிப்பிடுகிறது. மேலும் அதே கல்வெட்டில், அராமேய மொழியில் "எங்கள் அரசன் ராஜா பிரியதர்சி" ( காரோஷ்டி : 𐡐𐡓𐡉𐡃𐡓𐡔, நவீன எபிரேய: פרידארש‎ pryd’rš) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.[3]

கிறிஸ்டோபர் பெக்வித்தால், "பிரியதர்சி" என்பது ஒரு ஆரம்பகால இந்தியத் துணைக்கண்ட மன்னரின் இயற்பெயராக இருக்கலாம் எனப்பட்டது. பெரும் பாறைக் கல்வெட்டுகள் அல்லது பெரிய தூண் கல்வெட்டுகளை வெட்டுவித்தவர், அவர் சந்திரகுப்த மௌரியரின் மகன் என்று அடையாளம் காட்டப்பட்டார். இல்லையெனில் கிரேக்க மூலத்தில் அமிடோக்ரேட்ஸ் என்று அறியப்பட்டார்.[1]

பிரின்ஸ்செப் முதலில் பிரியதார்சியை இலங்கையின் மன்னன் தேவநம்பிய தீசன் என்று அடையாளம் கொண்டார். இருப்பினும், 1837 ஆம் ஆண்டில், ஜோர்ஜ் டேனர் இலங்கையில் கண்டுபிடித்த கையெழுத்துப் பிரதிகளைக் கொண்டு ( தீபவம்சம் அல்லது "தீவின் வரலாறு" ) அதன் வழியாக ஆரம்பகால மௌரிய வம்சத்துடன் பியதர்சியை தொடர்புபடுத்தினார்:

இந்த பிரியதர்சி, ஒரு மௌரியர் என்பதால், பௌத்த தரவுகளின்படி அசோகராக இருக்கலாம் என்று கருதப்பட்டது. தீபவம்சத்தில், உள்ள தொடர்புகள் காரணமாக "பிரியதர்சி" என்ற பட்டத்தை இந்திய பேரரசர் அசோகர் (கி.மு. 269-233) தனது கல்வெட்டுகளில் பயன்படுத்தியதாக கருதப்படுகிறது.[2]

கல்வெட்டுகளில், "பிரியதர்சி" என்ற பட்டமானது பெரும்பாலும் தேவனாம்பிரியா " ("கடவுளுக்கு பிரியமானவர்") என்ற பட்டத்துடன் தொடர்புடையது. தனித்தனியாக மஸ்கியில் கண்டுபிடிக்கப்பட்ட அசோகரின் சிறு பாறைக் கல்வெட்டுக்கள் உள்ளதைப் போல, "தேவனம்பிரியா" என்ற பட்டமானது "அசோகா" என்ற பெயருடன் காணப்படுவது, அசோகரை தேவநாம்ப்ரியாவுடன் தொடர்புபடுத்தியது.[2][4]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரியதர்சி&oldid=3931423" இலிருந்து மீள்விக்கப்பட்டது