பாங்கி கொமுட்டர் நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 KB09 

பாங்கி கொமுட்டர் நிலையம்
Bangi Komuter Station
பொது தகவல்கள்
அமைவிடம்பாங்கி, சிலாங்கூர், மலேசியா
ஆள்கூறுகள்2°54′14″N 101°47′10″E / 2.90389°N 101.78611°E / 2.90389; 101.78611
உரிமம் மலாயா தொடருந்து
இயக்குபவர்மலாயா தொடருந்து நிறுவனம்
தடங்கள் (கேடிஎம் கொமுட்டர்)
 பத்துமலை-புலாவ் செபாங் 
மலாயா மேற்கு கடற்கரை
நடைமேடை1 பக்க நடைமேடை; 1 தீவு நடைமேடை
இருப்புப் பாதைகள்3
கட்டமைப்பு
தரிப்பிடம்Parking
துவிச்சக்கர வண்டி வசதிகள்உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்Handicapped/disabled access உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு KB09 
வரலாறு
திறக்கப்பட்டது KB09  1995
மறுநிர்மாணம்1995
மின்சாரமயம்1995
சேவைகள்
முந்தைய நிலையம்   பாங்கி கொமுட்டர் நிலையம்   அடுத்த நிலையம்
யூகேஎம் நிலையம்
<<<
பத்துமலை நிலையம்
 

பத்துமலை
புலாவ் செபாங் வழித்தடம்
 
பத்தாங் பெனார் நிலையம்
>>>
புலாவ் செபாங் தம்பின்
அமைவிடம்
Map
பாங்கி நிலையம்

பாங்கி கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Bangi Komuter Station; மலாய்: Stesen Komuter Bangi) என்பது மலேசியா, சிலாங்கூர், உலு லங்காட் மாவட்டம், பாங்கி லாமா, நகர்ப்பகுதியில் அமைந்துள்ள கொமுட்டர் நிலையம் ஆகும். இந்த நிலையம் பாங்கி எனும் நகரத்தில் அமைந்துள்ளதால் அந்த நகரத்தின் பெயரில் அதற்கும் பெயரிடப்பட்டது.[1]

சிரம்பான் வழித்தடம் அல்லது காஜாங் வழித்தடம் என்று முன்பு அழைக்கப்பட்ட புலாவ் செபாங் வழித்தடம் மூலமாக இந்த நிலையம் சேவை செய்யபடுகிறது.[2]

பொது[தொகு]

இந்த நிலையத்தில் மூன்று தொடருந்து பாதைகள்; 1 பக்க நடைமேடை; 1 தீவு நடைமேடைள் உள்ளன. பத்துமலை-புலாவ் செபாங் வழித்தடத்தில் அமைந்துள்ள இந்த நிலையம் கேடிஎம் கொமுட்டர் தொடருந்துகளால் சேவை செய்யப்படுகிறது. இந்த நிலையம் 1995-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.[3][4]

நிலையத்தில் பயணச் சீட்டு வழங்கிடம் மற்றும் இரண்டு பயணச் சீட்டு விற்பனை இயந்திரங்களும் உள்ளன. இந்த நிலையம் ஒரு சிறிய தொடருந்து ஊழியர் குழுவினரைக் கொண்டு செயல்படுகிறது.

பாங்கி நகரத்திற்கு அருகாமையில் இருப்பதால், இந்த நிலையம் நியாயமான எண்ணிக்கையிலான பயணிகளைப் பெறுகிறது. இந்த நிலையத்தின் வாகன நிறுத்துமிடம் பெரியதாகவும் வசதியாகவும் உள்ளது. நிலையத்திற்கு வெளியே சிறிய அங்காடிக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் பழங்கள், குளிர்பானங்கள் விற்கப்படுகின்றன.

மேலும் காண்க[தொகு]

பாங்கி நிலையக் காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bangi KTM Komuter Station is a KTM Komuter train station located at and named after the small town of Bangi, Selangor. The Station is situated on the northeast tip of the town, and is primarily assigned to serve Seremban Line train services". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 4 April 2024.
  2. "This KTM station is situated on the northeast tip of the town, and is primarily assigned to serve Batu Caves – Tampin / Pulau Sebang Line KTM train services". klia2 info. 29 October 2017. பார்க்கப்பட்ட நாள் 4 April 2024.
  3. "The station was completed and opened to the public on 1995" (PDF). பார்க்கப்பட்ட நாள் 4 April 2024.
  4. "Bangi station is situated along three lanes of railway lines". RailTravel Station. பார்க்கப்பட்ட நாள் 4 April 2024.

வெளி இணைப்புகள்[தொகு]