பழைய நகரம் (ஐதராபாத்து, இந்தியா)

ஆள்கூறுகள்: 17°21′58″N 78°28′34″E / 17.366°N 78.476°E / 17.366; 78.476
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பழைய நகரம், ஐதராபாத்து
சுவர் நகரம்
சார்மினார், மக்கா பள்ளிவாசல், அரசு நிசாமிய பொது மருத்துவமனை, சுற்ற்யுள்ள சந்தைகளின் ஒரு பரந்தக் காட்சி.
சார்மினார், மக்கா பள்ளிவாசல், அரசு நிசாமிய பொது மருத்துவமனை, சுற்ற்யுள்ள சந்தைகளின் ஒரு பரந்தக் காட்சி.
அடைபெயர்(கள்): முத்துக்களின் நகரம், மினார்களின் நகரம்[1] City of Lakes[2]
பழைய நகரம், ஐதராபாத்து is located in தெலங்காணா
பழைய நகரம், ஐதராபாத்து
பழைய நகரம், ஐதராபாத்து
தெலங்காணாவின் ஐதராபாத்தில் பழைய நகரின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 17°21′58″N 78°28′34″E / 17.366°N 78.476°E / 17.366; 78.476
நாடு India
மாநிலம்தெலங்காணா
பிராந்தியம்தக்காணம்
நிறுவப்பட்டது1592
அரசு
 • நிர்வாகம்பெருநகர ஐதராபாத்து மாநகராட்சி, ஐதராபாத்து பெருநகர மேம்பாட்டு ஆணையம்
 • மேயர்கத்வால் விஜயலட்சுமி
 • ஆணையாளர்எம். மகேந்தர் ரெட்டி, இந்திய ஆட்சிப் பணி
 • மக்களவை உறுப்பினர்அசதுத்தீன் ஒவைசி
பரப்பளவு
 • மொத்தம்260 km2 (100 sq mi)
ஏற்றம்536 m (1,759 ft)
மொழிகள்
 • அலுவல்தெலுங்கு, உருது
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்500 xxx
தொலைபேசி இணைப்பு எண்91–40, 08413, 08414, 08415, 08418, 0845
வாகனப் பதிவுTS 07,08,09, 10, 11, 12, 13, 22, 23, 24
திட்ட நிறுவனம்பெருநகர ஐதராபாத்து மாநகராட்சி, குலி குதுப் ஷா நகர மேம்பாட்டு ஆணையம்
தட்பவெப்ப நிலைஇந்தியாவின் தட்பவெப்ப நிலை (கோப்பென்)
மழை பொழிவு603 மில்லிமீட்டர்கள் (23.7 அங்)
சராசரி ஆண்டு வெப்பநிலை26.0 °C (78.8 °F)
சராசரி கோடை வெப்பநிலை35.9 °C (96.6 °F)
சராசரி குளிகால வெப்பநிலை23.5 °C (74.3 °F)
இணையதளம்www.ghmc.gov.in

ஐதராபாத்தின் பழைய நகரம் (Old City of Hyderabad) என்பது பொ.ச. 1591ஆம் ஆண்டில் குதுப் ஷாஹி சுல்தான் முஹம்மது குலி குதுப் ஷா அவர்களால் மூசி ஆற்றங்கரையில் கட்டப்பட்டது. இது இந்தியாவின் தெலங்காணாவின் ஐதராபாத்து நகரத்தின் சுவர் நகரமாகும். பழைய நகரத்தைச் சுற்றி ஒரு கோட்டைச் சுவர் இருந்தது. அவற்றில் பெரும்பாலானவை அழிக்கப்பட்டுவிட்டன. [3] தக்காணப் பகுதிகளின் முகலாய ஆளுநரான முபாரிஸ் கான் 1712ஆம் ஆண்டில் நகரத்தை பலப்படுத்தியிருந்தார். அதை ஐதராபாத்தின் நிசாமும் தொடர்ந்து விரிவுபடுத்தினார்.[4]

பழைய நகரத்தின் மையத்தில் சார்மினார் உள்ளது. மேலும் இப்பகுதியில் ஷா அலி பண்டா, ஏகத்புரா, தபீர்புரா, அப்சல் குஞ்ச், மொகல்புரா, மலக்பேட்டை, பாலாக்ணுமா உள்ளிட்ட நகரத்தின் முக்கிய சுற்றுப்புறங்கள் உள்ளன. இன்று, ஐதராபாத்து நகரத்தின் எல்லைகள் பழைய நகரத்தின் எல்லைகளுக்கு அப்பாலும் விரிவடைந்துள்ளது. மேலும் நெரிசலான பழைய நகரம் ஹைடெக் நகரத்துடன் பலதரப்பட்ட ஐதராபாத்தின் அடையாள மையமாக உள்ளது. [5] [6] [7] இப்பகுதி ஒரு சுற்றுலா இடமாகவும், ஐதராபாத்து முஸ்லிம் கலாச்சாரத்தின் இதயமாகவும் உள்ளது.

சுவர்[தொகு]

பதின்மூன்று நுழைவாயில்களில் ஒன்றான தபீர்புரா தர்வாசா. [8]

பழைய நகரத்தை சுற்றி ஒரு கருங்கல் சுவர் இருந்தது. 17 மற்றும் 18ஆம் நூற்றாண்டுகளில், குதுப் ஷாஹி, முகலாய மற்றும் நிசாம்களின் காலங்களில் இந்தச் சுவர் கட்டப்பட்டது. சுவரில் 'தர்வாசாக்கள்' என்று அழைக்கப்படும் பதின்மூன்று நுழைவாயில்களும் 'கிர்கிகள்' எனப்படும் பதின்மூன்று சிறிய நுழைவாயில்களும் இருந்தன.

1908ஆம் ஆண்டின் மூசி ஆற்றின் பெரும் வெள்ளத்தின் போது சுவரின் பெரும்பகுதி அழிக்கப்பட்டது. மேலும், 1950கள் மற்றும் 1960களில் அரசாங்கத்தாலும் இடிக்கப்பட்டது. [9]

இன்று, புராண புல் தர்வாசா, தபீர்புரா தர்வாசா என்ற இரண்டு வாயில்கள் மட்டுமே நிற்கின்றன. [10] [11] சுவரின் சில பகுதிகளைத் தவிர வேறு எதுவும் மீதமில்லை. [9] [12]

அடையாளங்கள்[தொகு]

பழைய நகரத்தில் சார்மினார்
பாலாக்ணுமா அரண்மனை
சலார் ஜங் அருங்காட்சியகம் உலகின் மிகப்பெரிய தனி மனித சேகரிப்பினால் உருவானது.

ஐதராபாத்தின் வரலாற்றுப் பகுதியாக, பழைய நகரத்தில் சார்மினார் (அதாவது "நான்கு மினாரெட்டுகள்") உட்பட பல சிறப்புமிக்கக் கட்டிடங்கள் உள்ளன. இது ஒரு பிளேக் நோய் முடிவுக்கு வருவதற்காக குலி குதுப் ஷா பிரார்த்தனை செய்த இடத்திலேயே கட்டப்பட்டது.

சார்மினரைச் சுற்றியுள்ள குதுப் ஷாஹி சகாப்த கட்டமைப்புகள் தென்மேற்கில் அலங்கரிக்கப்பட்ட கருங்கல்லான மக்கா பள்ளிவாசல், வடக்கே குல்சார் ஹூஸ் நீரூற்று ஆகியவை அடங்கும். இது சார் காமன் எனப்படும் நான்கு வளைவு நுழைவாயில்களால் சூழப்பட்டுள்ளது.

சார்மினாருக்கு அருகிலுள்ள நிசாம்களின் நினைவுச்சின்னங்களில் மஹ்பூப் சௌக் கடிகார கோபுரமும் நிசாமியா மருத்துவமனையும் அடங்கும். சௌமகல்லா அரண்மனை நிசாம் வம்சத்தின் இருக்கையாக இருந்தது. அங்கு நிசாம் தனது உத்தியோகபூர்வ விருந்தினர்களையும் அரச பார்வையாளர்களையும் மகிழ்வித்தார்.

நிஜாம் அருங்காட்சியகம், புராணி அவேலி மஹபூப் அலி பாஷாவின் புகழ்பெற்ற அலமாரிக்குச் சொந்தமான இடமாகும். இதிலுள்ள உடைகளை அவர் ஒருபோதும் இரண்டாவது முறை அணியவில்லை என்று கூறப்படுகிறது. இது உலகின் மிக நீளமான அலமாரி ஆகும். இது இரண்டு நிலைகளில் கையால் கட்டப்பட்ட மர உயரம் தூக்கி (லிப்ட்) மூலம் கட்டப்பட்டுள்ளது. இச்சாதனம் அரண்மனையின் ஒரு பகுதியின் முழு நீளத்தையும் ஆக்கிரமித்துள்ளது.

புராணி அவேலி முதலில் நிசாமின் பெற்றோரது அரண்மனையாக இருந்தது. பின்னர் நிசாமின் மகனின் குடியிருப்பாகப் புதுப்பிக்கப்பட்டது. இது ஆங்கில யூ-வடிவ வளாகமாகும். இது ஐரோப்பிய பாணியில் கட்டப்பட்ட ஒற்றை மாடி கட்டிடமாகும்.

சார்மினருக்கு வடக்கே சில நூறு மீட்டர் தொலைவில் உள்ள மதீனா கட்டிடம் 1947 ஆம் ஆண்டில் அலாதின் வக்ஃப் வளாகத்தில் திறக்கப்பட்ட நகரத்தின் மிகப் பழமையான வணிக புறநகர்ப்பகுதிகளில் ஒன்றாகும். மதீனா வளாகத்தில் பழமையான மற்றும் புகழ்பெற்ற கடைகளில் "அப்துல் பூட் ஹவுஸ்" என்பதும் ஒன்றாகும். அந்த நாட்டில் எண்ணெய் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு, ஐதராபாத்து சவூதி அரேபியாவை விட பணக்கார நாடாக இருந்தது. மேலும், மதீனாவிலுள்ள ஏழை முஸ்லிம்களுக்கு உதவுவதற்காக இப்பகுதியின் கட்டிடங்களிலிருந்து பெறப்பட்ட வாடகைகள் சவுதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டன.

மூசி ஆற்றங்கரையில் உள்ள சலார் ஜங் அருங்காட்சியகத்தில் ஐதராபாத்தின் முன்னாள் பிரதமரான மூன்றாம் சலார் ஜங்கின் சேகரிப்புகள் உள்ளன. இந்த அருங்காட்சியகம் உலகின் மிகப்பெரிய தனி மனிதத் தொகுப்பாக புகழ்பெற்றது. [13] அருகிலுள்ள வரலாற்று ஐதராபாத்து உயர் நீதிமன்றம் (1920), உஸ்மானியா பொது மருத்துவமனை (1919), மாநில மத்திய நூலகம் (1936), ஆசா கானா-இ-ஜோஹ்ரா (1930) மற்றும் சிட்டி கல்லூரி (1921) ஆகியவை உள்ளன.

மூசி ஆற்றுக்கு கிழக்கே சில நூறு மீட்டர் தொலைவில் மலக்பேட்டை உள்ளது. ஐதராபாத் குதிரை சவாரி மைதானம் 1886ஆம் ஆண்டில் ஆறாம் நிசாம் தனது அரண்மனையான மஹ்பூப் மாளிகையின் அருகே மாற்றினார். அஸ்மான் கர் அரண்மனை மற்றும் ரேமண்டின் கல்லறை ஆகியவையும் மலக்பேட்டையில் அமைந்துள்ளன.

சார்மினருக்கு தெற்கே சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில், பாலாக்ணுமா அரண்மனை உள்ளது . 1872ஆம் ஆண்டில் விகார்-உல்-உம்ராவால் கட்டப்பட்ட இந்த அரண்மனை அதன் கட்டிடக்கலைக்கு புகழ் பெற்றது. மேலும், நிசாமின் அரண்மனைகளில் மிகவும் செழிப்பானது.

இப்பகுதியில் உள்ள மற்ற பள்ளிவாசல்களில் 300 ஆண்டு பழமையான தோலி பள்ளிவாசல் அதன் கட்டிடக்கலைக்கு புகழ் பெற்றது. மேலும் 400 படிக்கட்டுகள் பார்வையாளர்களை நிசாம்களால் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலத்திற்கு அழைத்து வருகின்றன.

பழைய நகரத்தின் வெகு தொலைவில், மிர் ஆலம் குளம், பழைய நகரத்தின் மிகப்பெரிய ஏரியும் நேரு விலங்கியல் பூங்காவின் 300 ஏக்கர்கள் பல்வேறு வகையான பறவைகளாலும் விலங்குகளாலும் நிரப்பப்பட்ட பகுதியாகும். இந்த குளத்திற்கு ஐதராபாத்தின் பிரதம மந்திரி மிர் ஆலமின் பெயரிடப்பட்டது. மேலும் 21 அரை வட்ட வளைவுகளுடன் ஒரு மைல் தூரத்தை இது கொண்டுள்ளது. [14]

பல்கலைக்கழகம்[தொகு]

கடைசி நிசாம், மிர் உஸ்மான் அலிகானின் காலத்தில் கட்டப்பட்ட உசுமானியா பல்கலைக்கழகம் ஒரு திணிக்கப்பட்ட முகப்பைக் கொண்டுள்ளது. இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, நகரம் கல்வி நிறுவனங்களில் விரைவான வளர்ச்சியைக் கண்டது. தன்னுடைய மாணவர்களுக்கு பல வசதிகளை வழங்கியது. மாணவர்களுக்கு முறையான வசதிகளுடன் கூடிய பல பொறியியல் கல்லூரிகளும் இதில் உள்ளன.

கலாச்சாரம்[தொகு]

இந்த நகரம் இசுலாமிய தாக்கங்களைக் காட்டும் ஒரு தனித்துவமான கலாச்சாரத்தையும், நிசாம்களின் தலைநகராக இருந்த காலத்தின் விளைவாக அரசவையின் முன்னிலையையும் கொண்டுள்ளது. இது பழைய நகரத்தில் மிகவும் தெளிவாகத் தெரிகிறது.

ஐதராபாத்து பிரியாணி

உணவு[தொகு]

பழைய நகரத்தில் ஐதராபாத்து உணவு முறைகளை வழங்கும் பல உணவகங்கள் உள்ளன. இது மசாலாப் பொருள்கள் மற்றும் மூலிகைகள் பயன்படுத்துவதில் குறிப்பிடத்தக்கது. உணவு பல்வேறு வகையான மசாலாப் பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இதில் ஒவ்வொரு மசாலாவும் நவீன தொடுதலுடன் உணவுக்கு ஒரு சிறப்பு சுவை சேர்க்கிறது. அதே நேரத்தில் உணவின் பாரம்பரிய தரத்தையும் பாதுகாக்கிறது. ஐதராபாத்தின் மிகவும் பிரபலமான உணவுகள் ஐதராபாத்து பிரியாணி மற்றும் ஐதராபாத்து கலீம் ஆகியவை மிகுந்த மகிழ்ச்சியுடன் வழங்கப்படுகின்றன. பிஸ்தா ஹவுஸ், பவார்ச்சி, கஃபே பஹார், மாஸ்டர்கெஃப், 555, ஷெராடன் கஃபே ஆகியவை கலீமுக்கு பிரபலமாக அறியப்படுகின்றன. ஷாதாப் ஹோட்டல் நகரத்தின் சிறந்த பிரியாணிகளில் சிலவற்றை வழங்குவதில் பிரபலமானது.

மொழி[தொகு]

பழைய நகரப் பகுதியில் பேசப்படும் முதன்மை மொழியாக உருது இருக்கிறது. மேலும் பொ.ச.1884இல் நிசாம்களின் கீழ் ஐதராபாத்து மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழியாக இருந்தது. [15] பெருமளவில் முஸ்லிம் மக்களால் பேசப்படும் உருது மொழியின் பொதுவான பேச்சு வழக்கு தக்காணி அல்லது தெக்காணி ("தெக்காண மொழி" என்று பொருள்) என்று அழைக்கப்படுகிறது. தெலுங்கும் பரவலாக பேசப்பட்டு புரிந்து கொள்ளப்படுகிறது.

புள்ளிவிவரங்கள்[தொகு]

பழைய ஐதராபாத்து நகரில் 65% முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். [16] 30% இந்துக்கள் இருக்கின்றனர். [17] 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பழைய நகரத்தில் கிறிஸ்தவர்கள் 9,687 ஆகவும், சீக்கியர்கள் 7,166 ஆகவும் உள்ளனர். [18] ஐதராபாத்து மாவட்டத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகை 39.43 லட்சம், இதில் இந்துக்கள் 20.46 லட்சமாகவும் (51.89%), முஸ்லிம்கள் 17.13 லட்சமாகவும் (43.35%) இருக்கின்றனர். [19] [20]

போக்குவரத்து[தொகு]

பழைய நகரம் தொடர் வண்டி, சாலை மற்றும் விமானம் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் நகர பேருந்துகள் நகரத்திற்குள் சுற்றிவருவதோடு, அருகிலுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கும் சேவையை வழங்குகிறது. ஆட்டோ ரிக்சாக்கள் நகரைச் சுற்றி நியாயமான கட்டணத்தில் கிடைக்கின்றன. மகாத்மா காந்தி பேருந்து நிலையம் ஐதராபாத்தின் பழைய நகரத்திலும், அருகிலுள்ள இரயில் நிலையம் ஐதராபாது தக்கான் நிலையமாகவும் உள்ளது. இது இந்தியாவின் பிற பகுதிகளுடன் நல்ல தொடர்புகளை வழங்குகிறது. புதிதாக உருவாக்கப்பட்ட ஷம்ஷாபாத் இராசிவ் காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் பழைய நகரத்திலிருந்து 6 முதல் 8 கிலோமீட்டர் (3.7 முதல் 5.0 மைல்) தொலைவில் உள்ளது.

சார்மினார் அருகே மதீனா கட்டிடம்

பஜார்[தொகு]

வளையல்கள் மற்றும் நகைகளை விற்கும் இலாட் பஜாரில் ஒரு கடை. இலாட்பஜார் மற்றும் சார்மினார் சந்தைப் பகுதி முத்துக்களுக்கு நன்கு அறியப்பட்டவை.

சரோஜினி நாயுடு ஐதராபாத்தின் சந்தைகளைப் பற்றி தி பஜார்ஸ் ஆஃப் ஹைதராபாத் என்ற தனது கவிதையில் விவரிக்கிறார். [21]

ஐதராபாத்து பல நூற்றாண்டுகளாக ஒரு வர்த்தக மையமாக இருந்து வருகிறது. மேலும் பழைய நகரத்தின் சந்தைகள் முத்துக்கள், வைரங்கள் மற்றும் வளையல்களுக்கு உலகப் புகழ் பெற்றவை.

வரலாற்று சிறப்புமிக்க சார்மினாரிலிருந்து செல்லும் நான்கு முக்கிய சாலைகளில் இலாட் பஜார் என்று அழைக்கப்படும் ஒரு சந்தை அமைந்துள்ளது. இது பழைய நகரத்தின் திருமண ஆடைகள் வாங்குவதற்கான சந்தையாகும்.சோனா பாய் எனப்படும் ஐதராபாத்து கண்ணாடி வளையல்கள் இங்கே கிடைக்கின்றன. பழைய நகரத்தின் இந்த வண்ணமயமான வியாபாரச் சந்தை சார்மினாரிலிருந்து வெளியேறும் தெருக்களில் ஒன்றில் செல்கிறது. வளையல்கள், திருமண ஆடைகள், முத்துக்கள், அத்தார் (வாசனை திரவியம்) மற்றும் பாரம்பரிய ஐதராபாத்து கண்ணாடி மற்றும் கல் பதிக்கப்பட்ட வளையல்கள் அனைத்தும் இங்கு விற்கப்படுகின்றன. [22] [23] [24] ஐதராபாத்து மதீனா என்றும் அழைக்கப்படும் மதீனா சந்தை , தெலுங்கானா, வடக்கு கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா பகுதிகளிலிருந்து பொருட்களை வழங்கும் மொத்த துணி சந்தைக்கு பெயர் பெற்றது. [25]

சார்மினார் குல்சார் ஹவுஸின் சந்தைகள் தங்கம், வைரங்கள் மற்றும் முத்துக்களுக்கு சாதகமாக உள்ளன. சிக்கலான வடிவமைப்பின் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளில் பதிக்கப்பட்ட கலாச்சார முத்துக்கள் ஒரு சிறப்பாகும். முத்துக்கள் பல வடிவங்களில் வருகின்றன. குறிப்பாக ஒரு சிறிய வகை 'அரிசி-முத்து'. விலைமதிப்பற்ற "பாஸ்ரா"வும் உள்ளது; தேர்ந்தெடுக்கப்பட்ட கடைகளில் மட்டுமே கிடைக்கும் இது, நிறம் மற்றும் விலையில் ஒப்பிடமுடியாத ஒரு முத்தாகும். முத்துக்கள் சரங்களிலும் விற்கப்படுகிறது, அல்லது தனித்தனியாகவும் கிடைக்கிறது. [26]

சிக்கல்கள்[தொகு]

பழைய நகரம் ஐதராபாத்தின் பழமையான பகுதி என்பதால், புறக்கணிக்கப்பட்டதாக அறியப்படுகிறது. இது நொறுங்கிய உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் அதிக போக்குவரத்து, தண்ணீர்ப் பற்றாக்குறை, மோசமான கழிவு மேலாண்மை, கட்டிடங்களின் மோசமான பராமரிப்பு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. இப்பகுதியில் உள்ள பல பாரம்பரிய கட்டமைப்புகளும் பாழடைந்துள்ளது. மறுசீரமைப்பு தேவைப்படுகின்றன. [27]

புகைப்படத் தொகுப்பு[தொகு]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ababu Minda Yimene (2004). An African Indian community in Hyderabad: Siddi identity, its maintenance. cuvillier verlag. பக். 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:3-86537-206-6. https://books.google.com/books?id=DigPvwHTqJ4C&q=hyderabad+city+of+minarets&pg=PA1. பார்த்த நாள்: 5 October 2011. 
  2. Rubén Camilo Lois González (2006). Urban changes in different scales: systems and structures. University Santiago de Compostela. பக். 611. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:84-9750-639-1. https://books.google.com/books?id=HQxe3HcB9AAC&q=hyderabad+city+of+lakes&pg=PA611. பார்த்த நாள்: 5 October 2011. 
  3. "Tracing the Wall Around Hyderabad Which Took 4 Centuries to Build". https://www.thequint.com/lifestyle/art-and-culture/walled-city-of-hyderabad. 
  4. K. Narayan Reddy. Urban Redevelopment: A Study of High-rise Buildings. https://books.google.com/books?id=FcZQvnvkbfcC&pg=PA34. பார்த்த நாள்: 1 March 2018. 
  5. "The Old City". Hyderabad, India. Archived from the original on 18 ஏப்ரல் 2011. பார்க்கப்பட்ட நாள் 9 June 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. 585 Rani Sarma, Diwan Deodi
  7. "Hyderabad: Colossal Gloss in City of Boom".
  8. "The "Khidki" and "Darwaza" of Hyderabad | The Siasat Daily". archive.siasat.com. பார்க்கப்பட்ட நாள் 2018-10-13.
  9. 9.0 9.1 Singh, T. Lalith (2015-08-31). "The vanishing walls of Hyderabad". The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/cities/Hyderabad/the-vanishing-walls-of-hyderabad/article7597515.ece. 
  10. "Dabeerpura Darwaza freed of encroachments - Times of India". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/hyderabad/dabeerpura-darwaza-freed-of-encroachments/articleshow/64943148.cms. 
  11. "Dabeerpura Darwaza: a sentinel of the past". The Hindu. https://www.thehindu.com/news/cities/Hyderabad/Dabeerpura-Darwaza-a-sentinel-of-the-past/article11185423.ece. 
  12. "Doorways to a rich past". Telangana Today. https://telanganatoday.com/doorways-rich-past-golconda. 
  13. "The glorious city of Hyderabad » Extraordinary Experiences". Experienceindiatravel.com. 18 February 2009. Archived from the original on 25 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 9 June 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  14. "Mir Alam Tank Hyderabad – Mir Alam Tank in Hyderabad India – Tour to Mir Alam Tank of Hyderabad". Hyderabad.org.uk. பார்க்கப்பட்ட நாள் 9 June 2011.
  15. 585 Narendra Luther, Bridging two cultures பரணிடப்பட்டது 24 நவம்பர் 2010 at the வந்தவழி இயந்திரம்
  16. "The Hyderabad Lok Sabha, with all of seven assembly segments, has an electorate of which 65 per cent belong to the minorities—Muslims chiefly".
  17. "In Hyderabad, a tale of two cities".
  18. "Christians third largest community in Old City after Muslims, Hindus".
  19. "'Muslim population 'stabilizing' in Hyderabad'".
  20. "Christian women outnumber men: study".
  21. "In The Bazaars of Hyderabad: English Poems: English Poems for Kids". English-for-students.com. பார்க்கப்பட்ட நாள் 9 June 2011.
  22. "Hyderabad on the Net: Other Attractions". Hyderabad.co.uk. Archived from the original on 7 January 2013. பார்க்கப்பட்ட நாள் 9 June 2011.
  23. "Lad Bazar..the bangle market near Charminar". Hyderabadspider.com. 15 December 2009. Archived from the original on 25 January 2013. பார்க்கப்பட்ட நாள் 9 June 2011.
  24. asiarooms.com. "Lad Bazar Hyderabad Shopping in Hyderabad India Shopping Malls in Hyderabad". Asiarooms.com. Archived from the original on 15 மே 2011. பார்க்கப்பட்ட நாள் 9 June 2011.
  25. "Top 10 Hyderabad Shopping Destinations – Hyderabad City Visitors Guide – Tourism". Hyderabadcityhotels.com. Archived from the original on 26 ஆகஸ்ட் 2011. பார்க்கப்பட்ட நாள் 9 June 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  26. "One Of The Greatest Jewellery Shop – Gold Jewelry,hyderabad,India Classifieds 5241052". Clickindia.com. Archived from the original on 5 அக்டோபர் 2011. பார்க்கப்பட்ட நாள் 9 June 2011.
  27. "Facelift for heritage structures in Old City". The Hans India. பார்க்கப்பட்ட நாள் 2018-07-30.

வெளி இணைப்புகள்[தொகு]