பயனர் பேச்சு:மகிழ்கலைஞன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், மகிழ்கலைஞன், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- Commons sibi (பேச்சு) 10:12, 18 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]

திரைப்படப் பகுப்புகள்[தொகு]

2023-இல் தொடங்கிய (நிறைவடைந்த) தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்ற பகுப்புகளை உருவாக்கி வருகிறீர்கள். இவை அந்தந்த ஆண்டுத் தாய்ப்பகுப்புகளிலும் வருகின்றன. அவற்றை நீக்கி உப-பகுப்பொன்றில் மட்டும் சேருங்கள். இல்லையேல் இந்தப் பகுப்புகள் அனைத்தும் நீக்கப்பட வாய்ப்புண்டு. இவ்வாறான பகுப்புகளை திலக்சன் என்பவர் உருவாக்கி வந்தார். இப்போது நீங்கள் தொடருகிறீர்கள். இருவரும் ஒருவர் தானா தெரியவில்லை. ஆனாலும் அவர் உருவாக்கிய ஏராளமான இவ்வாறான தேவையற்ற பகுப்புகளை படிப்படியாக நீக்கி வருகிறோம்.--Kanags \உரையாடுக 22:06, 4 சனவரி 2024 (UTC)[பதிலளி]

  • வருந்துகின்றேன் கங்குசு, நான் பழைய பகுப்பை பார்த்து புதிய பகுப்பை உருவாக்கி விட்டேன். தவறு இழைந்து விட்டால் என்னை பெரிய மனது கருதி மன்னிக்கவும். எனது தவறை சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி. பகுப்பு உருவாக்குவதில் மேலும் கவனம் செலுத்திகின்றேன்.--மகிழ்கலைஞன் (பேச்சு) 08:34, 5 சனவரி 2024 (UTC)[பதிலளி]

January 2024[தொகு]

Information icon வணக்கம், விக்கிப்பீடியாவிற்கு தங்களை வரவேற்கிறோம் உங்களது பங்களிப்புகளுக்கு நன்றிகள். உங்களது தொகுக்கும் பாங்கு நீங்கள் விக்கிப்பீடியாவில் பல பயனர் கணக்குகளை வைத்துள்ளீர்கள் அல்லது பிற பயனர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறீர்கள் எனத் தெரிகிறது. பல பயனர் கணக்குகளை வைத்திருப்பது இங்கு பொதுவாக ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. மேலும், அவ்வாறு பல பயனர் கணக்குகளை வைத்திருப்பவர்கள் தடை செய்யப்படலாம். எனவே நீங்கள் பல பயனர் கணக்குகளை வைத்திருந்தாலோ அல்லது பிற பயனர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டாலோ அதனை நிறுத்திக்கொள்ளவும். நன்றி ~AntanO4task (பேச்சு) 15:44, 17 சனவரி 2024 (UTC)[பதிலளி]

    • ~AntanO4task @ அப்படி ஒன்றும் இல்லை, எனது சகோதரர் முதல் தமிழ் விக்கிபீடியாவில் ஒரு கணக்கு வைத்திருந்தார், ஆனால் அந்த கணக்கின் கடவுச்சொல் மற்றும் மின்னஞ்சல் போன்றவற்றை தவற விட்டுள்ளார். அவரின் ஊக்கம் மற்றும் வழிகாட்டல் காரணமாகவே இப்போது நான் விக்கிபீடியாவில் சேவை செய்து வருகின்றேன். ஒரே குடும்பத்தில் இருநபர்கள் விக்கிபீடியாவில் கணக்கு வைத்திருந்தாலும் ஐ பி அட்ட்ரஸ் ஒன்றாகவே காட்டும். இதற்க்கு வேறு வழி இருந்தால் தயவு செய்து உதவ வும். --மகிழ்கலைஞன் (பேச்சு) 15:59, 17 சனவரி 2024 (UTC)[பதிலளி]

நல்ல கட்டுரை- அழைப்பு[தொகு]

வணக்கம், நல்ல கட்டுரைகள் என்பது விக்கிப்பீடியாவில் குறிப்பிட்ட அளவுகோல்களைக் கொண்டிருக்கும் கட்டுரைகள் முன்மொழிவுகள் மூலம் தரமுயர்த்தப்படும் நிலையினைக் குறிக்கிறது. இதன்மூலம், புதிய பயனர்களுக்கும், பயிற்சிப் பட்டறைகளின் போதும், குறிப்பிட்ட துறை சார்ந்த கட்டுரைகள் எவ்வாறு இருக்க வேண்டும் எனும் புரிதலை ஏற்படுத்த அவர்களுக்குக் காண்பிக்க உதவும். தற்போது விக்கிப்பீடியாவில் உள்ள 1,65,693 கட்டுரைகளில் சரியான கட்டுரைகளை நீங்களும் இங்கு முன்மொழியலாம். கட்டுரைகளை மதிப்பாய்வு செய்ய உங்களால் இயலும் எனில் இங்கு உங்களது பெயர்களைப் பதிவு செய்யுங்கள். நன்றி -- MediaWiki message delivery (பேச்சு) 03:40, 18 மே 2024 (UTC)[பதிலளி]