பன்னம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தெரிடொபைற்றா, பன்னம்
Tree fern
மரப் பன்னம்
அறிவியல் வகைபிரிப்பு
இராச்சியம்: தாவர இனம்
Division: தெரிடோபைற்றா
வகுப்புகள்

பன்னம் (அல்லது வித்திலியம், Fern) என்னும் செடி மற்றும் மர வகைகளை அறிவியலில் தெரிடொ-'வைட்டே (Pteridophyte) என்று அழைப்பர். தெரிடொ-ஃபைட்டா (Pteridophyta) என்னும்பிரிவில் வகைப்படுத்தப்பட்டிருக்கும் சுமார் இருபதினாயிரம் நிலைத்திணை வகைகளில் ஒன்றைக் குறிக்கும். இவை பூக்கும் தாவரங்கள் தோன்றும் முன்னரே மிகு பழங்காலத்தில் தோன்றி இன்றும் வளரும் நிலைத்திணை வகை. பன்னங்கள் அல்லது வித்திலியங்கள் எனப்படுவன, வித்துக்களில்லாது, புதிய பரம்பரையை உருவாக்குவதற்காக நுண்வித்துக்கள் (spores) மூலம் இனப்பெருக்கம் செய்யும் குழாயுடைத் தாவரம் (vascular plant) என வரைவிலக்கணம் கூறப்படுகின்றது. உண்மையான இலைகளைக் கொண்டிருப்பதால் இவை லைக்கோபைட்டாக்களிலிருந்து வேறுபடுகின்றன. இவை வித்துக்கள் மற்றும் பூக்களைக் கொண்டிராததால், வித்துத் தாவரத்திலிருந்து வேறுபடுகின்றன.

பன்னத்தின் (அல்) வித்திலியத்தின் வாழ்க்கை வட்டம்[தொகு]

சாதாரணப் பன்னமொன்றின் வாழ்க்கை வட்டம், இரண்டு வேறுபட்ட உருவாக்கக் கட்டங்களைக் கொண்டுள்ளது. இவை பின்வருமாறு:

 1. நுண்வித்திகளை உருவாக்கும் ஸ்போரோபைட்டே கட்டம்.
 2. நுண்வித்திகள் கலப்பிரிவு மூலம் ஹப்லொயிட் புரோதலஸ் (haploid prothallus) ஆக வளர்ச்சியடைகின்றன. (கேம்டோபைட்டே கட்டம்)
 3. புரோதலஸ் உயிர்வித்தினை (gametes) உருவாக்குகின்றது.
 4. ஆண் gamete ஒரு பெண் உயிர்வித்தினைக் (gamete) கருக்கொள்ளச் செய்கிறது.
 5. இது கலப்பிரிவு மூலம் திப்லோயிட் ஸ்போரோபைட்டே பன்னமாக வளர்ச்சியடைகின்றது.

பன்னத்தின் அமைப்பு[தொகு]

பன்னங்கள்
 • தண்டுகள்: பொதுவாக இவற்றின் தண்டுகள் மிகவும் உயரம் குறைவானவை. எனவே நிலக்கீழ் தண்டுகளைக் குறிக்கும் ரைசோம் என்ற பெயரால் இத்தண்டுகள் அழைக்கப்படுகின்றன. எனினும் சில இனங்கள் 20 m உயரம் வரை ளரக்கூடியன.

காழ்க்க்லன் மூலகம் இவற்றின் காழில் காணப்படுவதில்லை. இவற்றின் காழில் பிரதான கடத்தும் ஊடகம் குழற்போலிகளாகும். உரியத்தில் தோழமைக் கலங்கள் காணப்படுவதில்லை. மிகவும் எளிய கடத்தும் கலன்களைக் கொண்ட தாவரங்களாக பன்னங்கள் உள்ளன (லைக்கோபைட்டாக்களும் இது போன்ற எளிய கலன் இலையங்களைக் கொண்டுள்ளன.)

 • இலை: பன்னங்களின் இலைகள் பன்னோலை என அழைக்கப்படும். இவ்விலைகள் விரிக்கப்படும் முன்னர் உருட்டப்பட்டு சுருக்கப்பட்ட வடிவில் காணப்படுகின்றன. இவ்வோலைகளே பன்னங்களின் பிரதான ஒளித்தொகுப்பு நடைபெறும்

பகுதிகளாகும்.

 • வேர்: பன்னங்களின் வேர்கள் ஏனைய தாவரங்களின் வேர்களை ஒத்ததாகும்.

மேலுள்ள கட்டமைப்பு பன்னத்தின் வித்தித் தாவரத்துக்கே (2n தாவரம்) பொருத்தமானதாகும். பன்னத்தின் புணரித்தாவரம் (n தாவரம்) கட்டமைப்பில் மிக எளிமையானதாகும். இது கட்டமைப்பில் ஈரலுருத் தாவரம் போலக் காணப்படும். பன்னத்தின் புணரித்தாவரக் கட்டமைப்பு பின்வருமாறு காணப்படும்:

 • புரோதல்லசு: பச்சை நிறமான ஒளித்தொகுப்பில் ஈடுபடக்கூடிய ஒரு கட்டமைப்பாகும். இது புணரிகளை உருவாக்ககூடியது. இது 3-10 mm நீளமானதுடன் 2-8 mm அகலமானது. இது இதயம் அல்லது சிறிநீரகத்தின் வடிவுடைய மிக மெல்லைய ஒரு கலத் தடிப்புடைய கட்டமைப்பாகும்.
 • அன்தரீடியா: புணரித்தாவரத்தின் விந்துக்களை உருவாக்கும் பகுதி.
 • ஆர்கிகோனியா: புணரித்தாவரத்தின் சூலை (முட்டைக் கலத்தை) உருவாக்கும் பகுதி
 • ரைஸொட்கள்: புணரித்தாவரத்தின் வேர்களாகச் செயற்படும் நீட்டப்பட்ட கலன்களாலான பகுதி. எனினும் இவை உண்மையான வேர்களல்ல. இவை புணரித்தாவரத்தை நிலத்தில் பதித்து அதற்குத் தேவையான நீரையும், கனியுப்புக்களையும் பெற்றுக் கொடுக்கின்றன.

பரிணாமமும் வகைபிரிப்பும்[தொகு]

பொருளாதாரப் பயன்பாடு[தொகு]

தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட பெயர்கள்[தொகு]

வெளியிணைப்புகளும், உசாத்துணைகளும்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பன்னம்&oldid=1614322" இருந்து மீள்விக்கப்பட்டது