பண்டைய மிதிலை பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிதிலா பல்கலைக்கழகம்
प्राचीन मिथिला विश्वविद्यालय
இருப்பிடம்மிதிலை பிரதேசம், இந்தியாவின் பிகார் & நேபாளம்
பகுதிமிதிலை
வரலாறு
கட்டப்பட்டதுஜனகர்
கலாச்சாரம்இந்து சமயம்
யாக்யவல்க்கிய முனிவருடன் மிதிலை மன்னர் ஜனகர்
அஷ்டவக்கிரன் மற்றும் மிதிலை மன்னர் ஜனகருக்கு இடையே நடைபெறும் உரையாடல்

மிதிலை பல்கலைக்கழகம் (Ancient Mithila University), பண்டைய இந்தியாவில் முக்கியமாக நியாய சாஸ்திரத்தை கற்பிக்கும் கல்வி நிலையமாக விளங்கியது. மேலும் வேதங்கள், உபநிடதங்கள், நியாய சாஸ்திரம், யோக சாஸ்திரம், சீக்‌ஷா, சந்தஸ், வியாகரணம், நிருக்தம், கல்பம் போன்ற கல்விகளை மாணவர்களுக்கு குருகுலம் அமைப்பில் இப்பல்கலைக்கழகத்தில் கற்பிக்கப்பட்டது. மிதிலை மன்னர் ஜனகர் இப்பல்கலைக்கழகத்திற்கு நிதியுதவி வழங்கினார்.[1][2][3][4][5]

நியாய சாஸ்திர ஆசிரியர்கள்[தொகு]

மதிலைப் பல்கலைக்கழகத்தில் இந்திய மெய்யியலில் வேதங்களை ஏற்கும் ஆறு தத்துவப் பிரிவுகளான நியாயம், வைசேடிகம், சாங்கியம், யோகம், மீமாம்சை, சோதிடம், அரசியல் மற்றும் வேதாந்தம் பயிற்றுவிக்க்கப்பட்டது. குறிப்பாக நியாய சாஸ்திரத்தை கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் கீழ் வருமாறு:

  1. அட்சபாத கௌதமர்
  2. பக்ஷிலஸ்வாமின் வாத்ஸ்யாயனர்
  3. உத்தியோதகரர்
  4. ஜெயந்த பட்டர்
  5. வாசஸ்பதி மிஸ்ரர்
  6. உதயணர்
  7. கணேஷா உபாத்தியாயா
  8. வர்தமான உபாத்தியாயா
  9. பக்சதார மிஸ்ரா
  10. வாசுதேவ சர்வபௌமன்
  11. பத்மநாப மிஸ்ரா
  12. இரகுநாத சிரோண்மணி

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Nalapat, Dr Suvarna (2012-12-15) (in en). Education in Ancient India: Valabhi and Nalanda Universities. D C Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-81699-13-3. https://books.google.com/books?id=oO-vDQAAQBAJ&q=Yajnavalkya+as+head+of+the+Parishad+of+Mithila. 
  2. Jha, Bishwambhar (2010). "Education in Early Mithila: A Reappraisal". Proceedings of the Indian History Congress 71: 160–164. பன்னாட்டுத் தர தொடர் எண்:2249-1937. https://www.jstor.org/stable/44147484. 
  3. "An Official Website of Department of Revenue and Land Reforms, Government of Bihar". lrc.bih.nic.in. Archived from the original on 2021-09-09. பார்க்கப்பட்ட நாள் 2021-09-09.
  4. "अनौपचारिक रूप से प्रसिद्ध विवि थी प्राचीन मिथिला". Hindustan (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2021-09-09.
  5. Team, Pratiyogita Darpan Editorial (in en). Indian History Ancient India. Upkar Prakashan. https://books.google.com/books?id=_SbiUXtBzAsC&dq=university+of+ancient+mithila&pg=PA172.