பட்டறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பட்டறை
கொல்லம் பட்டறையில் இரும்பை வார்த்தெடுத்தல்

பட்டறை என்பது பண்டைக் காலங்கள் தொட்டு நடந்து வரும் உபயோகப் பொருட்கள் உற்பத்தி செய்யும் இடம் ஆகும். இங்கு பெரும்பாலும் உலோகங்கள் கொண்டே தயாரிக்கப்படுகிறது. இரும்பு, ஈயம், துத்தம், வெள்ளி, தங்கம் போன்ற உலோகங்களைப் பயன்படுத்தி பண்ட பாத்திரங்கள், ஆயுதங்கள், கருவிகள், உபகரணங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்யும் இடம் ஆகும். இதை கொல்லப் பட்டறை என்றும் கூறுவர்.

மரங்களைக் கொண்டு நாற்காலி, கட்டில், மேசை, அலமாரி, கதவு, சாளரம் போன்ற பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் இடம் தச்சுப் பட்டறை என்றழைக்கப்படுகிறது.

வரலாறு[தொகு]

பட்டறைகள் பண்டைகாலங்களிலேயே மிகவும் சிறப்புமிக்க ஒரு தொழிலாக இருந்து வருகிறது . பண்டைகாலங்களில் அரசர்களின் பல்லக்கில் இருந்து போர்வாள் வரை அனைத்தும் உருவாக்க அல்லது வடிவம் அமைக்க பட்டறைகள் தேவைப்பட்டு இருக்கிறது . அதன் காரணமாகவே பட்டறைகள் உருவாயின . பின் கொல்லன் பட்டறை , தச்சன் பட்டறை என்று பல துறைகள் உருவாயின .

உலோகங்களை கொண்டு பித்தளை , வெண்கலம் போன்ற கூட்டுப் பொருள்களையும் தமிழர்களும் உருவாக்கிருக்கிறார்கள் .தமிழ் கணித நூலான கணக்கதிகாரத்தில் , வெண்கலம் பித்தளை பிறப்பிக்கும் விவரம் பற்றிய ஒரு செய்யுள் காணப்படுகிறது .

எட்டெடை செம்பி லிரெண்டை யீயமிடில்
திட்டமாய் வெண்கலமாஞ் சேர்ந்துருக்கி - லிட்டமுடன்
ஓரேழு செம்பி லொருமூன் றுதுத்தமிடில்
பாரறியப் பித்தளையாம் யார்.

ஈயம் , துத்தம் - உலோகங்கள் ; பலம் - பழந்தமிழர் எடை அளவு (40.8 கிராம்).
இச்செய்யுளுக்கு அந்நூலிலேயே கொடுத்துள்ள விளக்கம் பின் வருமாறு .

வெண்கலம் பித்தளை பிறப்பிக்கும் விவரம் எட்டுப்பலஞ் செம்பிலே இரண்டு பலம் ஈயமிட்டுருக்க வெண்கலமாம் . ஏழலரைப் பலஞ் செம்பிலே மூன்று பலந் துத்தமிட்டுருக்க பித்தளையாம் என்று .

இக்குறிப்பில் இருந்து , 321.6 கிராம் செம்பும் , 81.6 கிராம் ஈயமும் ஒரு உலையில் போட்டு நன்கு கலவை செய்து உருக்கி வருவது வெண்கலம் என்றும் , 306 கிராம் செம்பும் , 122.4 கிராம் துத்தமும் உலையில் போட்டு உருக்கி வருவது பித்தளை என்றும் தெரிகிறது . ஆனால் கிடைக்கும் வெண்கலமும் , பித்தளையும் எவ்வளவு எடை இருக்கும் என்ற குறிப்பு காணப்பட வில்லை . ஆகையால் இதன் எடைகளை கூட்டி , ஏறக்குறைய 400 கிராம் வெண்கலமும் , 425 கிராம் பித்தளையும் கிடைக்கும் எனலாம்.

பட்டறை கட்டமைப்பு[தொகு]

கடந்த காலங்களில் இருந்து இன்றும் பெரும்பாலான , கிராம புற பட்டறைகள் ஒரு சிறிய கொட்டகையில் தான் அமைந்திருக்கின்றன . கொல்லம் பட்டறையில் ஒரு குழியில் நெருப்புருவாக்கி உலோகங்களை காய்ச்சும் படியாக எளிய முறையிலேயே அமைந்திருக்கும் . அந்த நெருப்பை வளர்ப்பதற்காக ஊதாங்குழல் போல் மணல் மூடிய ஒரு சிறிய சக்கரமும் அதனோடு இணைத்த ஒரு பெரிய சக்கரமும் இருக்குமாறு அமைந்திருக்கும் . சக்கரத்தை சுற்றுவதற்கு ஒரு ஆளும் உலோகத்தை காய்ச்சுவதற்கு ஒரு ஆளுமாக இரண்டு பேரு போதுமானதாகும் . பின் காய்ச்சிய உலோகத்தை வடிமைக்க ஒருவர் பிடிப்பதற்கும் , ஒருவர் அடிப்பதற்கும் என்று செயல்படுவர் . இதனால் ஒரு கொல்லம் பட்டறைக்கு இரண்டில் இருந்து மூன்று ஆட்கள் தேவையாகும் .

இவ்வகையான பட்டறைகள் சிலநேரங்களில் நகர் தொழிலாகவும் அமைகின்றது . உதாராணமாக ஈயம் பூசுதல் , கத்தி முனை தீட்டுதல் போன்ற தொழில்கள் ஆகும் .

தச்சுப் பட்டறைகள் சிலவகையான உளிகள் , சுத்திகள் , ரம்பம் , போன்றவற்றை கொண்டன . தச்சர்கள் ஒன்றில் இருந்து ஐந்து பேர்கள் கொண்ட ஒரு அமைப்பாகும் . கொல்லம் பட்டறையை போன்று இதுவும் ஒரு சிறு கொட்டகையிலேயே அமைக்கலாம் . மரங்களை இளைப்பதற்கு ஒரு கருவியும் அம்மரங்களை உயரத்தில் வைத்து இளைப்பதற்காக , இரட்டைக் கால் மேடையும் தச்சு பட்டறையில் இருக்கும் .

பட்டறை வகைகள்[தொகு]

நவீனங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டறை&oldid=3036103" இலிருந்து மீள்விக்கப்பட்டது