கணக்கதிகாரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கணக்கதிகாரம் கொறுக்கையூரைச் சேர்ந்த காரி என்பவர் எழுதிய ஒரு தமிழ்க் கணித நூல். [1]
- கணக்கதிகாரம் 15ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல்.
- இதன் பழைய பதிப்பு 1872-ல் வெளிவந்துள்ளது. [2] இது பிழை மலிந்த பதிப்பு. பிற்காலத்தில் இதன் திருந்திய பதிப்பும் வெளிவந்துள்ளது.
- "கொறுக்கையர் கோமான் புத்தன் புதல்வன் காரி" என்று இவன் குறிப்பிடப்பட்டுள்ளான். [3]
- ஆரிய மொழியிலுள்ள நூலைத் தமிழில் தருவதாக இவர் நூலினுள்ளே குறிப்பிடுகிறார்.
- நூல் அமைதி
- பாயிரம் 17 பாடல்
- நூல் 110 பாடல்
- வெண்பா, நூற்பா, கட்டளைக்கலித்துறை விருத்தம் ஆகிய பாடல் வகைகளால் ஆன நூல்.
பொருளடக்கம் |
நூலில் கூறப்படுபவை [தொகு]
- பின்ன எண்களின் பெயர்கள்
- முழு எண்களின் பெயர்கள்
- எப்படிக் கூட்டினாலும் ஒரே விடை வரும் கட்டக் கணக்குகள்.
- பொழுதுபோக்கு வினாவிடைக் கணக்குகள்
முதலானவை குறிப்பிடத் தக்கவை
கருவிநூல் [தொகு]
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "இவற்றில் காணப்படும் கணித வழிமுறைகள் மக்களின் பொருட்சார்ந்த வாழ்க்கையில் தோய்ந்து, தினசரி உழைப்பின் பரிமாணங்களை கணக்கியல்ரீதியாக அணுகுபவை என்பது குறிப்பிடத்தக்கது." கணக்கதிகாரம் 1850 களில் இருந்து அச்சுப்பதிப்பாக வெளிவந்துள்ளது.த. செந்தில்பாபு. (2008). அறிவியலும் தமிழ்ச்சமூகமும் - சில கேள்விகள். புது விசை [1]
- ↑ சரவண முதலியார் பார்வை, சென்னை விவேக விளக்க அச்சுக்கூடம்
- ↑ கணக்கதிகாரம் பாடல் 12