நிம்ரூஸ் மாகாணம்

ஆள்கூறுகள்: 31°00′N 62°30′E / 31.0°N 62.5°E / 31.0; 62.5
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிம்ரூஸ்
Nimruz

نيمروز
மாகாணம்
நிம்ருஸ் மாகாணத்தில் சக்சூர்
நிம்ருஸ் மாகாணத்தில் சக்சூர்
ஆப்கானிஸ்தானில் நிம்ரூஸ் மாகாண உயர்நிலத்தைக் காட்டும் வரைபடம்
ஆப்கானிஸ்தானில் நிம்ரூஸ் மாகாண உயர்நிலத்தைக் காட்டும் வரைபடம்
ஆள்கூறுகள் (Capital): 31°00′N 62°30′E / 31.0°N 62.5°E / 31.0; 62.5
நாடு Afghanistan
தலைநகரம்ஜரான்ஜ்
அரசு
 • ஆளுநர்முகம்மது சாமில்லாஹ்
பரப்பளவு
 • மொத்தம்41,356 km2 (15,968 sq mi)
மக்கள்தொகை (2012)[1]
 • மொத்தம்156,600
 • அடர்த்தி3.8/km2 (9.8/sq mi)
நேர வலயம்UTC+4:30
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுAF-NIM
முதன்மை மொழிகள்பலூச்சி
தாரி
பஷ்தூ

நிம்ரூஸ் (Nimruz (பலூச்சி/பாரசீக மொழி: ولایت نیمروز‎; பஷ்தூ: نيمروز ولايت) என்பது ஆப்கானிஸ்தானின் முப்பத்தி நான்கு மாகாணங்களில் ஒன்றாகும். இது நாட்டின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது ஈரானின் சீசுத்தானும் பலுச்சிசுத்தானும் மாகாணத்தின் கிழக்கிலும், பாக்கித்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் வடக்கிலும் அமைந்துள்ளது. இந்த மாகாணமானது, ஐந்து மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மாகாணத்தில் 649 கிராமங்களை உள்ளன. மாகாணத்தின் மக்கள் தொகை சுமார் 156,600 ஆகும். ஜரான்ஜ் நகரம் மாகாணத் தலைநகரமாக செயல்படுகிறது. இந்த நகரத்தில் ஜரான்ஜ் வானூர்தி நிலையத்தில் உள்நாட்டு வானூர்தி சேவைகள் செயல்படுகின்றன.

நிம்ரூஸ் என்ற சொல்லானது பாரசீக மற்றும் பலோச்சி மொழிகளில் "நண்பகல்" அல்லது "அரை நாள்" என்று பொருள்படும். நிம்ருஸ் மாகாணமானது 41,000 கிமீ² பரப்பளவு கொண்டுள்ளது. இது நாட்டின் பரப்பளவிலும், மக்கள் தொகை மிகுந்த மாகாணமாகும். மாகாணத்தின் கணிசமான பகுதியானது தசிட் மார்கோ பாலைவனப் பகுதி ஆகும்.

வரலாறு[தொகு]

தற்போது ஆப்கானிஸ்தானின் நிம்ரூஸ் மாகாணமாக உள்ள பகுதியானது ஒரு காலத்தில் சிஸ்டானின் வரலாற்றுக் காலப் பகுதியாக இருந்தது. பல நூற்றாண்டுகள் அகாமனிசியப் பேரரசால் ஆளப்பட்ட இப்பகுதி பின்னர் அலெச்சாந்தரால் கைபற்றப்பட்டது. ஏழாம் நூற்றாண்டில் அரேபு முஸ்லீம்களால் கைப்பற்றப்பட்டு இஸ்லாத்துக்கு மாற்றப்பட்டது. கி.பி. 860 ஆம் ஆண்டில் இப்பகுதியானது சபாரித்து வம்சத்தின் ஒரு பகுதியாக விளங்கியது. இதன் தலைநகரான ஜான்ஜ்ஜ் இருந்த‍து. இது இஸ்லாமிய சகாப்தத்தின் முதல் உள்ளூர் வம்சங்களில் ஒன்றாகும். இதன் நிறுவனரான யாகுப் சாஃபரி இந்த பிராந்தியத்தில் பிறந்து வளர்ந்தவர். பின்னர் இப்பகுதியானது கஸ்நாவிட்ஸ் பகுதியாக இருந்து அதைத் தொடர்ந்து குர்திஸ், தைமூரியர், சபாவித்து ஆகியோரால் ஆளப்பட்டது.

18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஆப்கானிய ஹாட்டக்கி வம்சத்திடம் இந்த பகுதி வீழ்ந்த‍து. இவர்கள் 1738 ஆம் ஆண்டில் நாதிர் ஷாவால் பதவியில் இருந்து அகற்றப்பட்டனர். 1747 வாக்கில், அகமது ஷா துரானியால் இப்பகுதி ஆப்கானிஸ்தானின் ஒரு பகுதியாக ஆக்கப்பட்டது. இவர் வடகிழக்கு ஈரானிலிருந்து இந்தியாவின் தில்லிவரை வெற்றி கொண்டார். நவீன ஆப்கானித்தான் அரசின் கீழ், இந்த மாகாணமானது 1927 வரை சக்கன்சூர் மாகாணம் என்ற பெயரில் அறியப்பட்டது, இது பின்னர் நிம்ரூஸ் மற்றும் பாரா மாகாணங்களாக பிரிக்கப்பட்டது.[2] அந்த நேரத்தில் சிராஜ் நகரம் நிம்ரூஸ் மாகாணத்தின் தலைநகரமாக ஆனது. சோவியத்-ஆப்கானிய போரின்போது, ஆப்கானிஸ்தான் மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு இடையே முஜாஹிதீன்கள் சென்றுவர நிம்ருஸ் மாகாணம் பயன்படுத்தப்பட்டது. மேலும் இது ஆப்கானிய அகதிகள் போரில் இருந்து தப்பிச்செல்லவும் பயன்படுத்தப்பட்டது.

நேட்டோ மற்றும் கர்சாய் நிர்வாகம்[தொகு]

முன்னாள் ஆளுநர் அப்துல் கரீம் பராஹவி மற்றும் மேஜர் ஜெனரல் ஜான் ஏ. 2001 சூனில் சில சிக்கல்கள் குறித்து கலந்த்ரையாடுதல்.

2001 அக்டோபரில் அமெரிக்கத் தலைமையிலான நேட்டோவின் படையெடுப்பைத் தொடர்ந்து, தலிபான்கள் மாகாணத்தில் தங்கள் கட்டுப்பாட்டை இழந்தனர். இதையடுத்து புதிய ஆப்கானானது ஜனாதிபதி ஹமித் கர்சாய் தலைமையிலான அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்த‍து.[3] ஆப்கானிஸ்தான், ஈரான், பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையில் போதைப்பொருட்கள், ஆயுதங்கள் போன்றவற்றை கடத்துவதற்கு இந்தப் பகுதி பரவலாக அறியப்படுகிறது. பல வெளிநாட்டு போராளிகள் இந்த மாகாணத்தை மூன்று நாடுகளுக்கு இடையில் சென்றுவர பயன்படுத்துகின்றனர். 2009 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கமானது டெலரம்-ஜரான் நெடுஞ்சாலையை அமைத்த‍து. இது நாட்டின் பிரதான வர்த்தக வழித்தடங்களில் ஒன்றாகும். இது மாகாணத்தின் சமூக பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியலும், நிர்வாகமும்[தொகு]

மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் மொஹம்மத் சாமில்லாஹ் ஆவார்.[4] [5] அவரருக்கு முன்னர் அமீர் முகமது அக்துசதா ஆளுநராக இருந்தார். மாகாணத்தின் அனைத்து சட்ட அமலாக்க நடவடிக்கைகளும் ஆப்கானிய தேசிய காவல்துறை (ஏஎன்பி) கையாள்கின்றன. ஆப்கானிய எல்லை பொலிசு மற்றும் ஆப்கானிய தேசிய பொலிசு போன்றவற்றை மாகாண காவல்துறைத் தலைவர் வழிநடத்துகிறார். இவர் காபூல் உள்துறை அமைச்சகத்தின் பிரதிநிதியாக உள்ளார். ஏஎன்பி உட்பட, மற்ற ஆப்கான் தேசிய பாதுகாப்பு படை (ஏஎன்எஸ்எப்) போன்றவற்றிற்கு நேட்டோ தலைமையிலான படைகளின் ஆதரவு உள்ளது.

நலவாழ்வு பராமரிப்பு[தொகு]

இந்த மாகாணத்தில் தூய்மையான குடிநீர் கிடைக்கக்கூடிய மக்களின் எண்ணிக்கை 2005 ஆம் ஆண்டு 38% என்ற விகிதத்தில் இருந்தது, இது 2011 ஆண்டு 24% என குறைந்துள்ளது.[6] திறமையான பிரசவ உதவியாளர் மூலமாக பிரசவம் பார்க்கும் மக்களின் விழுக்காடு 2005 ஆண்டில் 7 % என்ற எண்ணிக்கையில் இருந்து 2011 ஆண்டு 28 % என உயர்ந்தது.

கல்வி[தொகு]

மொத்த கல்வியறிவு விகிதம் (6+ வயதுக்கு மேற்பட்டவர்களில்) 2005 ஆண்டு 22% என்று இருந்தது. 2011 இல் இது 23% என உயர்ந்துள்ளது.

போக்குவரத்து மற்றும் பொருளாதாரம்[தொகு]

ஆப்கான்-ஈரான் எல்லைப் பகுதியான ஜரான்ஜில் உள்ள திலாராம்-சரன்ஜ் நெடுஞ்சாலை.

2014 ஜூன் முதல் ஜராஞ் நகரத்திற்கு அருகே உள்ள சாஞ்ச் விமான நிலையத்தில் இருந்து ஹெரட்டுக்கு தொடர்ந்து வானூர்தி சேவை வழங்க திட்டமிடப்பட்டது.

இந்திய அரசாங்கமானது டெலரம்-ஜரான் நெடுஞ்சாலையை அமைத்த‍து. இதனால் மாகாணத்தின் சமூக பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.[சான்று தேவை]

மாகாணத்தின் வருமாணத்தில் பெரும்பகுதிக்கு முக்கிய ஆதாரமாக வர்த்தகமும் விவசாயமும் உள்ளது. இப்பகுதி விவசாயத்தில் கால்நடை வளர்ப்பும் அடங்கியதாக உள்ளது. கால்நடையாக செம்மறியாடு, வெள்ளாடு, மாடு, கோழி ஆகியவை வளர்க்கப்படுகின்றன. மாகாணத்தில் கோதுமை, சோளம், முலாம்பழம் போன்றவை பயிரிடப்படுகின்றன.

மக்கள்வகைப்பாடு[தொகு]

ஆப்கானித்தானின் இனக்குழுக்கள்.
நிம்ரூஸ் மாகாண மாவட்டங்கள்

நிம்ரூஸ் மாகாணத்தின் மக்கள் தொகை சுமார் 156,600 ஆகும்.[1] ஆண்டின் சில மாதங்கள் மாகாணத்துக்கு வந்து வசிக்கும் பல குச்சி நாடோடி மக்களும் உள்ளனர். மாகாணத்தில் பாலோச் இன குழுவினர் பெரும்பான்மையானராகவும், அவர்களையடுத்து பஷ்டூன், பிராஹூய், தாஜிக், உஸ்பெக், கசாரா மக்களும் உள்ளனர். கசார மக்களைத் தவிர கிட்டத்தட்ட அனைத்து மக்களும் சுன்னி இஸ்லாத்தை பின்பற்றுகின்றனர்.[7] மாகாணத்தில் பேசப்படும் மொழியாக பலூச்சி மொழி உள்ளது. இதனுடன், தாரி, பஷ்தூ மொழிகளும் தாய்மொழியாக பேசப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Settled Population of Nimroz province by Civil Division, Urban, Rural and Sex-2012-13" (PDF). Islamic Republic of Afghanistan: Central Statistics Organization. Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2012-10-31.
  2. Frank Clements. Conflict in Afghanistan: A Historical Encyclopedia. ABC-CLIO, 2003.
  3. Robert D. Crews, Amin Tarzi. The Taliban and the crisis of Afghanistan. Harvard University Press, 2008.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-02-07. பார்க்கப்பட்ட நாள் 2018-11-07.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-04-15. பார்க்கப்பட்ட நாள் 2018-11-07.
  6. Archive, Civil Military Fusion Centre, https://www.cimicweb.org/AfghanistanProvincialMap/Pages/Nimroz.aspx பரணிடப்பட்டது 2014-05-31 at the வந்தவழி இயந்திரம்
  7. "Nimroz" (PDF). Program for Culture & Conflict Studies. Naval Postgraduate School. பார்க்கப்பட்ட நாள் 2012-12-28.



"https://ta.wikipedia.org/w/index.php?title=நிம்ரூஸ்_மாகாணம்&oldid=3560709" இலிருந்து மீள்விக்கப்பட்டது