நான்முகன் திருவந்தாதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நான்முகன் திருவந்தாதி (Nanmukan Tiruvantati) என்பது வைணவ சமயத்தில் திருமாலைப் போற்றி திருமழிசையாழ்வாரால் இயற்றப்பட்ட நூலாகும் இது அந்தாதி அமைப்பில் இயற்றப்பட்டது, 96 பாசுரங்களைக் கொண்டது, திருமழிசையாழ்வாரால் திருமாலை வணங்கி மங்களாசாசனம் செய்த போது பாடப்பட்டது. இந்நூல் நாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுப்பில் இயற்பா தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.[1] இந்த பாடல் நூலில் நான்முகன், சிவன் மற்றும் விஷ்ணு ஆகிய மூன்று மும்மூர்த்திகளை பற்றியும் பாடப்பட்டுள்ளது.[2]

பாசுரங்கள்[தொகு]

நான்முகனை நாராயணன் படைத்தான், நான்முகனும்

தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான், – யான்முகமாய்
அந்தாதி மேலிட் டறிவித்தேன் ஆழ்பொருளை,

சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து.

1ஆம் பாசுரம்

மேற்கோள்கள்[தொகு]

  1. நாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுப்பு (நாதமுனி)
  2. Pope, Stephen J.; Hefling, Charles (2002) (in en). Sic Et Non: Encountering Dominus Iesus. Orbis Books. பக். 194. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-57075-424-1. https://books.google.com/books?id=Y0gRAQAAIAAJ&q=nanmukan+tiruvantati. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்முகன்_திருவந்தாதி&oldid=3794845" இலிருந்து மீள்விக்கப்பட்டது