நாதூ லா கணவாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நாதூ லா
Nathu La-Stairs.JPG
இந்தியப் பக்கத்து எல்லைக்கு இட்டுச் செல்லும் படிக்கட்டுகள்
Elevation 4 மீ (14,140 அடி)
Traversed by பழைய பட்டுப்பாதை
Location இந்தியாவின் கொடி இந்தியா (சிக்கிம்) – சினாவின் கொடி சீன மக்கள் குடியரசு (திபெத் தன்னாட்சிப் பகுதி)
Range இமயமலை
Coordinates 27°23′11″N 88°49′52″E / 27.386448, 88.83119அமைவிடம்: 27°23′11″N 88°49′52″E / 27.386448, 88.83119

நாதூ லா கணவாய் என்பது இமயமலையில் உள்ள ஒரு கணவாய். இது இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தையும் சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியையும் இணைக்கிறது. இது கடல் மட்டத்தில் இருந்து 4,310 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இது பண்டைய பட்டுப்பாதையின் ஒரு பகுதி. திபெத்திய மொழியில் நாதூ என்றால் கேட்கும் காதுகள் என்றும் லா என்றால் கணவாய் என்றும் பொருள். இக்கணவாய் சிக்கிமின் தலைநகரான கேங்டாக்கில் இருந்து 54 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்தியர்கள் மட்டுமே இக்கணவாய்க்குச் செல்ல முடியும். அவர்களும் செல்வதற்கு முன்பு அனுமதிச்சீட்டு பெற்றே செல்ல வேண்டும்.

நாதூ லா கணவாய் இந்தியாவிற்கும் சீனாவுக்கு இடையில் உள்ள மூன்று வணிகப்பாதைகளுள் ஒன்று.

"http://ta.wikipedia.org/w/index.php?title=நாதூ_லா_கணவாய்&oldid=1668178" இருந்து மீள்விக்கப்பட்டது