நாசுகா கோடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அமைவிடம்: 14°43′00″S 75°08′00″W / -14.716667, -75.133333

நாசுகா கோடுகள்*
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
This aerial photograph was taken by Maria Reiche, one of the first archaeologists to study the lines, in 1953.
நாடு பெரு
வகை கலாசாரம்
ஒப்பளவு i, iii, iv
மேற்கோள் 700
பகுதி
பொறிப்பு வரலாறு
பொறிப்பு 1994  (18ஆவது அமர்வு)
* பெயர் உலக பாரம்பரியப் பட்டியலில் குறித்துள்ளபடி.
பகுதி, யுனெஸ்கோவினால் வகைப்படுத்தப்பட்டபடி.

நாசுகா கோடுகள் (Nazca Lines) என்பவை தென்னமெரிக்காவில் இருக்கும் பெரு நாட்டில் உள்ள நாசுகா என்னுமிடத்தில் அமைந்த, மனிதர்கள் வாழாத இடமான மிகப்பெரிய நிலப்பரப்பில், பெருவெளிகளில் நேராக, நேர்த்தியாக வரையப்பட்டிருக்கும் சித்திரங்களும், கோடுகளும் ஆகும். சுமார் 500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இந்தச் சித்திரங்களும் கோடுகளும் அமைந்திருக்கின்றன.

இவை ஆறாம் நூற்றாண்டில் அப்பகுதியில் வசித்த நாசுகா நாகரீகத்தவரின் செயல் என்று நம்பப்படுகிறது.

[தொகு] சர்ச்சைகள்

இந்தச் சித்திரங்களின் முழுமை எவருக்குமே தெரியாது. இவற்றைப் பார்க்க வேண்டும் என்றால் வானத்தில் உயரப் பறந்தால் மட்டுமே முடியும். 1500 ஆண்டுகளுக்கு முன்பு இது சாத்தியம் இல்லை. இருந்தும் இந்தக் கோடுகள் எல்லாமே விமானத்தில் இருந்து எடுத்தாலும் தெளிவாகத் தெரியும் அளவிற்கு கீறப்பட்டிருக்கின்றன. எரிக் வான் டேனிகன் இவற்றை வேற்று கிரக வாசிகளின் விமானத்தளம் என்று கூறியது அறிவியலாளர்களால் ஏற்கப்படவில்லை.

[தொகு] சித்திரங்கள்

இந்த வானம்பாடிப் பறவை (Humming bird) இரண்டு கால்பந்து மைதானங்களின் அளவுடையது. அதாவது 285 மீட்டர்

இங்கு கோடுகள் தவிர்த்து பலவிதமான வடிவங்களும், சித்திரங்களும் வரையப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் தொடங்கிய புள்ளியிலேயே முடியும்.

இந்தச் சித்திரங்களை மூன்று விதமான வகைகளில் நாம் பிரிக்கலாம்.

இந்த நாசுகா உருவங்களில் குரங்கு, நாய், சிலந்தி, பல்லி, திமிங்கலம், மீன், வானம்பாடி பறவை என்று தெரிந்த பல உருவங்கள் இருந்தாலும், தெரியாத உருவங்களும் பல இருக்கின்றன. இவற்றில் ஐம்பதுக்கும் மேலாக உள்ள உருவங்கள் மிகப் பிரமாண்டமானவை. மிகப் பெரிய உருவங்கள் கால் கிலோ மீட்டர் நீளத்துக்கும் நேர்கோடுகள் பல கிலோ மீட்டர் நீளத்துக்கும் வரையப்பட்டுள்ளன.


[தொகு] நிழற்படங்கள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=நாசுகா_கோடுகள்&oldid=1095455" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்